சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

நமது கை விரலில் உள்ள ஒரு நகம் உடைஞ்சு போச்சுனா…
அந்த இடத்தில கொஞ்ச நாள்ல இன்னொரு நகம் தானே வளருது!!!
அப்படின்னா நமது உடம்பில் உள்ள இயக்கத்தை
கட்டுபடுத்திற ஒரு சக்தி நம்மோட மனசில இருக்குன்னு தானே அர்த்தம்!!
எந்த இடத்தில எந்த மாதிரியான புதிய திசுக்கள் வளரனும்னு
அந்த உள் மனசு சக்திதானே கட்டளை யிடுகிறது.
அதனால தான் சொல்றேன் நம்ப ஆரோக்யம் நம்ப கிட்டதான் இருக்குன்னு!!
ஆரோக்யம் அப்படின்னா உடனே எந்த வியாதியும் இல்லாம இருக்கிறது இல்லீங்க…
ஆரோக்யம் அப்படின்னா உற்சாகமா, புத்துணர்ச்சியோட இருக்கிறது தான்!!
நம்ப மனசில நாம சில ஏமாற்றங்கள், எதிர் மறையான எண்ணங்கள வெச்சுகிட்டு
இருந்தோம்னா… நாளடைவில நம்மோட செயல்பாடுகள்ல விரக்தி வந்துடும்.
சில பேர பாத்திருப்பீங்க.. கூட்டத்தில தனியா உக்காந்திருப்பாங்க
கேட்டா, இருக்கட்டுங்க நாபாட்டுக்கு ஒரு ஒரமா உக்காந்துக்கிறேன்.
நான் ரொம்ப முக்கியமானவங்க இல்ல…
அப்படின்னு வெளியே கொஞ்சம் சிரிச்சுகிட்டு சொன்னாலும்
உள்ளே புலம்பிகிட்டு இருப்பாங்க.
இன்னும் சிலர் இருக்காங்க. கொஞ்சம் உடம்புக்கு வந்துட்டா போதும்
எனக்கு இது தேவைதான். நான் செஞ்ச பாவத்தினால தான் இதெல்லாம் வந்திருக்கு
எனக்கு கடவுள் கொடுத்த தண்டனைன்னு புலம்பிடு வாங்க..
ஒன்ன நல்லா புரிஞ்சிக்கோங்க வாழை மரத்தை கொண்டு போய்
ஐஸ்கட்டி மழை பெய்யர அண்டார்டிகாவில நட்டு வெச்சுட்டு,
வாழை குலை தள்ளும்னு காத்து கிடக்க முடியுமா??
அந்த வாழை மரம் தழைக்க அங்க சூழல் இல்ல..
அதே போல தாங்க நம்ப மனம் எனும் சூழல் இருந்தா தான்
ஆரோக்யமான உடம்பு நமக்கு இருக்கும்.
மனசில குழப்பம் இருந்தா ஆரோக்யம் கூட கேள்வி குறி தான்.
அதனாலே மனச சந்தோஷமா வச்சுக்கோங்க
உற்சாகமா ஆரோக்யமான வாழ்வை அனுபவியுங்க

(Visited 10 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *