சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

ஆழ்மனது நம்பிக்கைங்க தான்
நம்மளோட வாழ்கை பாதைக்கு ரோடு போடுது…!!
உங்க நட்பு வட்டத்தில கொஞ்சம் டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்…
நண்பன் ஒருவனுக்கு எப்போதும் பற்றாக்குறை!
அதிக சம்பளம் வரட்டும்….
அப்பவும் கடன் தான்!!
போனஸ் வரட்டும்… அப்பவும் கடன் தாங்க!!
ஏன்னு அவங்க யோசிக்கவே மாட்டாங்க பாஸ்!!
ஆனா நீங்க யோசிக்கனும்…
லாட்டரியில பரிசு வாங்கினவங்க கதையே கொஞ்சம் புரட்டி பார்த்தீங்கன்னா போதும்!!
பெரும்பாலும் இதே கேஸ் தாங்க.
எம்புட்டு லட்சம் வரட்டும்…
பஞ்சா பறக்கடிச்சு மீண்டும் கடன்லே
சிக்கி தவிக்கிறத பார்க்கிறோம்ங்க…
இதாங்க அவங்களோட ஆழ் மனசு நம்பிக்கை!!
நம்ப வாழ்கையிலே எப்பவும் பணம் இல்லாம கடன்ல மாட்டிகிட்டு அவஸ்தை படனும்னு இருக்கு
அப்படிங்கிற ஒரு அசைக்க முடியாத…
பிடிவாதமான ஒரு ஆழ்மன நம்பிக்கை…
இதே போல தாங்க. சில பேருக்கு ஒரே வேலைல இரண்டு வருஷசத்திற்கு
மேல இருக்கவே முடியாதுங்கிற ஒரு மைண்ட் செட்…
இரண்டு வருஷம் ஆச்சுன்னா போதும்!!
ஏதோ காரணங்கள சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்திகிட்டு கடைசியா வேலைய விட்டுட்டு இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்னு உக்காருவாங்க!!
எனக்கு மட்டும் ஏன் எல்லாமே தப்பாவே நடக்குதுனு ஒரு சில பேர் புலம்பறத கேட்டிருப்பீங்க…
ஆழ் மனது நம்பிக்கைங்க எப்பவுமே நெகடிவ்தானா?
அப்படின்னு உங்களுக்கு ஒரு டவுட் வரலாம்!!
நிச்சயமா இல்லீங்க… பாஸிடிவ் நம்பிக்கை உள்ளவங்க தான்
வாழ்கையில ஜெயிச்சுகிட்டு இருக்கிறவங்க…
சரியான இடத்தில… சரியான நேரத்தில சில பேர் எப்போதும் இருப்பாங்க! கவனிச்சிருக்கீங்களா??
அவங்க இருக்கிற நேரத்த சரியா அமைச்சுக்கிறாங்களா
இல்ல இருக்கிற இடத்தில உள்ளத சரியானாத தேர்ந்தெடுத்துக்கிறாங்களா…!!
எனக்கு எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடும்னு நம்பிக்கையோடு
பாடுபட்டு வாழ்கையில ஜெயிக்கிறவங்களும் இந்த வகை தாங்க!!
எல்லோரும் பாஸிட்டிவ் ஆழ்மனது நம்பிக்கைகளை வளர்த்து கொண்டா
வாழ்கை வசந்தம் தானே??
முடியுமா…
நிச்சயமா முடியும்ங்க…
நமது எண்ணங்கள் மாறினா…
வாழ்கையும் மாறும்!

(Visited 25 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *