சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

நாம ஆரோக்யமா இருக்கனும்னு தான்
கடவுள் நமக்கு வலி அப்படிங்கிற உணர்ச்சிய கொடுத்திருக்கான்…
நீங்க யோசிச்சு பார்த்தீங்கன்னா இந்த உண்மை புரியும்…
ரோடில போறீங்க… ஆட்டோகாரன் கால இடிச்சுட்டு போனா…
உடனே நீங்க ஐயோன்னு கூச்சல் போட்டா தான்
உடனே மருத்துவம் பாக்க முடியும்!
அப்போ உங்களுக்கு ஆட்டோ இடிச்ச உடனே வலி தெரியனும்!!
அந்த வலி வேண்டாம்னுட்டா…
என்ன நடக்கும்னு நினைச்சு பாருங்க…
ஆட்டோகாரன் கால இடிச்சுட்டு போயிடறான்…
நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க!!!
அப்புறம் தான் பாக்கறீங்க உங்க கால் சுண்டு விரல காணோம்!!
மொத்த பாதமும் ரத்த களரியா இருக்கு…
இன்னும் ஒன்னு கூட சொல்றேன்…
சமையலறைல நின்னு பேசிகிட்டு இருக்கீங்க..
எதேச்சையா உங்க கை அடுப்புல படுது…
வலி தான் இல்லையே…
நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருந்தீங்கன்னா,
உங்க கை இருக்கிற இடத்தில
ஒரு தீஞ்ச மரக்கட்டை தாங்க இருக்கும்…
அதனால வாழ்கையில வலி அவசியம்…
வலி கூட இரண்டு மாதிரி இருக்குங்க..
ஒன்னு உடல் வலி. இன்னொன்னு மனவலி..
நமக்கு மனவலி வந்தா நாம உடனே
நம்ம மனசுக்கு வைத்தியம் பாக்கனும்.
நம்ப உறவு பகையானா மனசு வலி வரும்!
நமக்கு புடிச்ச ஒன்னு கைவிட்டு
போச்சுன்னா மனசு வலி வரும்.
தோல்வி, போட்டி அப்படின்னு வாழ்கையில
மனசு வலி வர நூறு வழிகள் இருக்குங்க!!
நாம தான் பக்குவமா நம்ப
பார்வையா மாத்திக்கனும்…
மனசு வலியை குறைச்சுக்கனும்…
அப்ப தான் நம்ப ஆரோக்யமான
வாழ்வை வாழலாங்க…
வலி கூட ஆரோக்யமா வாழ்றதுக்கு
தேவை தான் பாஸ்!!!

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *