சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

வலி ரொம்ப முக்கியம்னு நா திரும்பவும் சொல்றேங்க…
ஏன்னா… வலின்னு நாம உணரலன்னா கை, கால் உடைஞ்சா கூட நமக்கு தெரியாமலயே போயிடுங்க…
அதனால தாங்க வலி ரொம்பவும் முக்கியம்னு சொல்றேன்…
நெருப்பில கைய வெச்சா சுடும்னு தெரிஞ்சப்புறம்
அடுத்த முறை எவ்வளவு ஜாக்ரதையா இருக்கோம்!!!
அதே போல தாங்க நம்ம மனசு வலியும்…
மனசு வலிச்ச உடனே நாம யோசிக்கனும்…
எதனால நமக்கு இப்ப மனசு கிடந்து வேதனைபடுது…
ஏன் இவ்வளவு வலிக்குதுன்னு???
நாம நம்பி இருந்தவங்க உதாசீனப்படுத்திட்டாங்களா…
இல்ல நாம நம்பி மோசம் போயிட்டோமேன்னு நினைக்கிறீங்களா…
எதுவாயிருந்தாலும் பதில் ஒன்னு தாங்க!!!
மனச தேத்திக்குங்க… உங்க வாழ்க்கையில யார் மேல நீங்க அன்பு வெச்சாலும்…
தயவு செஞ்சு எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யாதீங்க…
அவங்க எப்படி, எந்த குணத்தோட நீங்க பாத்து அன்பு வெச்சீங்களோ… அப்படியே ஏத்துகிட்டு சந்தோஷமாயிருங்க!!!
நீங்க வைக்கிற அன்புக்காக மத்தவங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி மாறனும்னு எதிர்பார்த்தீங்கன்னா…
மனசு வலி நிச்சயம்ங்க!!
வாழ்க்கையோட முதல் கண்டிஷனே இதாங்க…
மத்தவங்களோட செயல்களால உங்க மனச புண்படுத்திகாதீங்க பிளிஸ்.
அது அவங்க வாழ்கை… அவங்க வாழ்ந்துட்டு போவட்டும்னு நினைங்க!!!
உங்க வீட்டில திருட்டு போயிடுச்சு.. உங்க தங்க நகை திருடு போச்சு!!
உங்க மனசு கஷ்டப்படும் தான்!! இல்லன்னு சொல்ல…
ஆனா அந்த தங்க நகை இல்லாமலும் நீங்க வாழத்தான் போறீங்க…
வெளியே போகத்தான் போறீங்க..
நாளடைவில் அந்த நகையின் மேல் இருந்த ஆசையும் போயிடுங்க..
அதையே நினைச்சு வருஷம் முழுக்க கண்ணீர் விட்டு வாழ்கைய தொலைப்பது புத்திசாலித்தனமா???
நகை மேல ஆசை, பொருள் மேல ஆசை கூடாதுன்னு சொல்ல வரல்லங்க!!
நம்மள வலிக்கச் செய்யும் விஷயங்களை நாம
கடந்து போயிடனும்னு தான் சொல்ல வரேன்..
அதயே நினைச்சுகிட்டு வருந்தி இருக்கும்
காலத்தை வீணாக்காம சிரிச்சு சந்தோஷமா வாழுங்க…

(Visited 13 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *