
லாஜிக் குரு
செம்மணல்ல விழுந்த மழை நீர் போல
இரண்டு நெஞ்சங்களும் அன்பால் கலந்து விட்டது அப்படின்னு ஒரு காதல் கவிதை.
காதலுக்கு மட்டுமில்லங்க.
நம்ப மனசு சுற்று வட்டத்தில இருக்கிறத போல மாறுங்கறது தாங்க உண்மை!!
வெளியூருக்கு போயிட்டு வர்ரவங்கள பாருங்க…
அவங்க நடை, உடை, பேச்சு வழக்கு கொஞ்சம் மாறியிருக்கும்…
நம்பளோட பழக்க வட்டத்தில இருக்கிறத ஒட்டியே நம்ப மனசு மாறுதுங்க…
நம்ப நட்பு, தேடி போற உறவு, படிக்கிற புத்தகங்கள், பாக்கிற டிவி நிகழ்ச்சிகள்,
விரும்பி கேக்குற பேச்சுகள்னு எல்லாமே நம்பள மாத்திகிட்டே வருதுங்க…
என்ன ஒரு ஆச்சர்யம்னா… நம்ப மாறுவது நமக்கே தெரியாம போவது தாங்க…
ஒரு இடத்தில குடி இருக்கீங்க. அங்கே இரயில் பாதை இருக்கிறதால்ல சத்தம் கேட்கும்.
இரண்டு வாரம் லீவுக்கு வெளியூருக்கு போயிட்டீங்கன்னா,
திரும்பி வரும் போது, அட என்னாச்சு நம்ப ஏரியாவுக்கு…
இன்னிக்கு ரொம்ப அதிகமா சத்தமா இருக்கேன்னு சட்டென தோணும்.
கொஞ்ச நேரத்தில சரியா போனாலும்,
மனசில வேற இடம் குடி போகனும்கிறது பதிஞ்சு போயிடும்.
ரொம்ப கவல படறவங்களோட பழகி வந்தீங்கன்னா நீங்களும் கவலை பட ஆரம்பிச்சிடுவீங்க. சந்தோஷமா இருக்கிறவங்க கூட இருந்தீங்கன்னா நாமளும் சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பீங்க, தொழில்ல நல்லா வளர்ந்தவங்க கூட இருந்தீங்கன்னா தொழில் செய்து மேல வரது எப்படின்னு தெரிஞ்சிக்க தொடங்குவீங்க…
ஆக நீங்க எப்படி இருக்கனும்னு நினைக்கறிங்களோ
அந்த மாதிரியான நட்பை, சூழலை தான் தேர்ந்தெடுப்பீங்கங்கிறது நிச்சயம்.
ஒரு உதாரணம் பாருங்க…
பழைய நண்பர் சேகரை பார்க்க போயிருந்தேன்.
அவர் எனனிடம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு.. ஒரே மன உளைச்சலா இருக்கு…
எதுக்கு தான் பிறந்தோம்னு அடிக்கடி தோன்றது..
வேதனை தாங்க மிச்சம்னு அலுத்து கிட்டாரு.
அவருடைய நண்பர்கள பத்தி கேட்டேன். அதுக்கு அவர்,
தினமும் நாங்க 3 பேர் சந்திச்சு இத தாங்க பேசி பேசி சலிச்சிப்போம்னு சொன்னார்.
சேகர் தன்னோட நண்பர் வட்டத்தை மாத்தற வரைக்கும்
அவர் இப்படி திசை தெரியாம,
நூல் அறுத்த காத்தாடி மாதிரி தாங்க அலைஞ்சிகிட்டு இருப்பார்.
உங்க வாழ்கையோட திசைய சந்தோஷமா,
வெற்றிகரமா மாத்தியமைக்கனும்னு நினைச்சீங்கன்னா…
உடனே உங்க நண்பர்கள் மற்றும் சூழல அந்த மாதிரி மாத்திக்கோங்க…