சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

ஏழைகளுக்கு உதவனும்னா முதல் ரூல் தெரியுங்களா???
நாமளும் அவங்கள போல ஏழையா இருக்க கூடாதுங்க…
நம்ம கையில கொஞ்சம் தேவைக்குமேல பணம் இருந்தா தானே…
இந்த ஏழைகளுக்கு நம்மாளானதை கொடுக்க முடியும்!!!
அந்த பணம் மட்டும் போதுங்களா…
கொடுக்கனும்னு நினைக்கிற மனசுதான் முக்கியம்னு
வாய் பேசறவங்க கிட்ட ஒன்னு கேக்கிறேன்!!!
தங்க மனசு காரங்க, நியாயமா உழைக்கிறவங்க
நேர்மறை சிந்தனையோட இருக்கிறவங்க
எல்லோர்கிட்டயும் கை நிறைய பணம் இருக்கும்னு சொல்ல முடியுங்களா…
நிச்சயமா இருக்காதுங்க… உண்மைய சொல்லனும்னா
மாசாமாசம் சொந்த செலவுகள சமாளிச்சு வர்றதே பெரிய விஷயமா தான் இருக்கும்ங்க
அப்ப யார் தாங்க பணக்காரர்களா வலம் வர்றாங்கன்னு கேக்கறீங்க…
பாஸ்!! இது தான் நம்ப வாழ்கையோட முக்கியமானா ரகசியம்!! தங்க மலை ரகசியம்!!
என்னோட பாங்க் கணக்கில குறைஞ்சது 1 லட்சம் பாலன்ஸ் இருக்கனும்னு
ஒரு தொழிலாளி ஆழ் மனசில நினைச்சான்னா… சொல்றேன்…
கேட்டுக்கோங்க!!! நிச்சயமா கூடிய சீக்கிரம் லட்சாதிபதி ஆயிடுவான் பாஸ்!! நம்புங்க…
இது தான் நம்ப ஆழ் மனசோட சூப்பர் பவர்…
நம்ப கையில பணம் இருக்கிறதும் இல்லாம இருக்கிறதும் கூட
நம்பளோட ஆழ் மனசு நினைப்பு தான்.
இருக்கிறது போதும்பா… எப்படியோ சமாளிச்சிக்கலாம்னு
உங்க ஆழ் மனசில எண்ணம் இருந்திச்சின்னா
நீங்க இருக்கிற நிலைமையிலேயே தான் இருப்பீங்க…
போதும் இந்த மாசகடைசி பஞ்ச பாட்டு…
இனிமே கை நிறைய பணம்னு உங்க ஆழ் மனசு
நினைக்க தொடங்கும்போது நீங்களும் பணம் படைத்தவராகலாம்…
உழைப்பாலதாங்க – நேர்மையாதாங்க!
நான் சொன்ன ரகசியத்தை பத்திரமா யோசிச்சு பாருங்க…

(Visited 15 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *