சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

நல்ல காலம் பொறக்க போவுதுன்னு
காலைல குடுகுடுப்பகாரன் சொன்னவுடன்
நமக்குள் ஒரு சின்ன சந்தோஷம் வருவது சகஜந்தானே…
ஆனாலும் பாருங்க…
நம்மள்ல பல பேருக்கு இன்னமும் பணக்காராங்கல்லாம்
ஏதோ கெட்ட தொழில் பண்றவங்க
அப்படிங்கிற ஒரு ஆழ் மனசு எண்ணம் இருக்கும்… அது தப்புங்க!!
இந்த எண்ணம் இருந்தா நாம எப்படி பணத்தோட,
செல்வ செழிப்போட பலருக்கு ஆதரவு கொடுத்து வாழறதுன்னு கேட்கிறேன்???
சரி ஐயா!! எப்படித்தான் பணக்காரனா இருக்கிறதுன்னு சொல்லுங்க…
நான் கேட்டுக்கறேன்னு சொன்னீங்கன்னா…
முயற்சி தாங்க மொத ஸ்டெப்பு.
அதோட நான் சம்பாரிச்சு பணம் பண்ணனும்னுங்கிற நினைப்பு!
நான் ஜெயிப்பேன்கிற நம்பிக்கையும் ரொம்ப தேவைங்க…
உழைச்சு வர்ற பணத்தில மொதல்ல சேமியுங்க.
பிறகு தாங்க செலவு பண்ணனும். நாம என்ன பண்றோம்?? பாருங்க.
மொதல்ல எல்லாத்தையும் செலவழிச்சுட்டு பிறகு அரைகாசு கூட மீறலையே…
சேமிப்பு இல்லையேனு கவலபடறோம்….
பணக்காரங்கள கொஞ்சம் பாருங்க. பழகுங்க.
நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க…
அவங்ககிட்ட இருக்கிற நல்ல குணங்களை உடனடியா எடுத்துக்குங்க!!!
புத்திசாலிகள் கிட்ட பணம்,
சேமிப்பு பற்றிய கருத்துகளை கேட்டு தெரிஞ்சிக்கோங்க…
நாம ஜெயிக்க பிறந்தவங்க,
நாம பணத்தோட வாழ பிறந்தவங்கன்னு அடிக்கடி சொல்லி பழகுங்க…
என்கிட்டே பணம் இருந்தா செலவழிச்சிடுவேன்னு பயப்படாதீங்க.
செலவழிக்கமாட்டேன். பணம் என்னிடம் பத்திரமாக இருக்கும்னு நம்புங்க…
என்கிட்ட பணம் அதிகம் இல்லை… ஏன்னா…
நான் பெரிய வீட்டில பிறக்கல… பெரிய படிப்பு படிக்கல…
என் பெற்றோர் ஏழைங்க,
என் மனைவி படிக்காதவள்னு சாக்கு போக்கு சொல்லாதீங்க…
பணம் பண்ணுவதற்கு வரும் தடைகளை முயற்சியால் வெற்றி கொள்ள பாடுபடுங்கள்.
ஏழ்மை என்பது ஒருவிதமான மனநோய் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த மனநோய்க்கு முதல் மருந்து நம்பிக்கை தாங்க
தைரியமாக முயற்சி செய்தால் கூடி வரும் கோடிகள்!!!

(Visited 13 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *