சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

லாஜிக் குரு

புது புது மருந்துகள ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிக்கிறாங்க இல்ல…

இந்த மருந்துள ‘கின்னி பிக்’ அப்படிங்கற

சிறு பன்றி இனத்த சேர்ந்த பிராணிகளுக்கு கொடுத்து தாங்க…

மனுஷங்க சாப்பிடலாமான்னு டெஸ்ட் பண்ணுவாங்க…

இதுகள சீமை பெருச்சாளின்னும் சொல்வாங்க…

நான் இப்ப இத எதுக்கு சொல்லுரேன்னா…

இந்த சீமை பெருச்சாளிகளை 2 நிமிஷத்துல கொல்ல கூடிய ஒரு ஊசி மருந்தை

ஆராய்ச்சிகாரங்க கண்டு பிடிச்சிரிக்காங்க!

சயனைட் விஷம்லா இல்லீங்க…

நம்பளோட ரத்தத்தை உறிஞ்சி போடற

ஊசி தாங்க அந்த விஷம்!!

நாம ரொம்ப அதிக மன உளைச்சலோட, பதட்டத்தோட, அதீத மனக்கவலையோட இருக்கும் போது எடுக்கபடும் ரத்தத்தில் தாங்க இவ்வளவு விஷம்!!

இவ்வளவு விஷம், நச்சு நம்ப உடம்பில இருந்தா நமக்கு என்னவெல்லாம்…

வியாதிகள் வரும்னு யோசிச்சு பாருங்க… கண்ண கட்டுதா???

அப்ப நம்ப ஆரோக்கியம் நம்ப ஆழ் மனசு எண்ணங்களாலங்கிறது நிச்சயாமகுது…

ரோடிலே பாட்டு கேட்டுகிட்டு வண்டில போயிகிட்டு இருக்கீங்க…

திடிர்னு எதிர்ல வர்ற பெரிய லோடு வண்டி குடை சாஞ்சு உங்க வண்டில மோத வருது…

இரண்டே அடி… நீங்க சட்னி…

லோடு லாரி நின்னுடுது… உங்க மனசில எவ்வளவு டென்ஷன்… உங்க உடம்பில எவ்வளவு வியர்வை! உங்க இதய துடிப்பு எப்படி எகிறும்!!

இதாங்க கனெக்ஷன்… நம்ப எண்ணங்களுக்கும், நம்ப ஆரோக்கியத்துக்கும்.
நான் ஆரோக்கியமா இருக்கேன். நான் எப்பவும் ஆரோக்கியமா இருப்பேன்னு
உங்க ஆழ் மனசில இருக்கிற நம்பிக்கை தாங்க…

உங்கள நோய் இல்லாம ஆரோக்கியமான உற்சாகமான வாழ்கைய கொடுக்கும்!!

மன ஊளைச்சல், கோவம் ஆத்திரம் பதட்டம் கவலை இல்லாம பாத்துக்குங்க!!

ஆரோக்கியமா இருங்க… அப்பத்தானே வாழ்கையிலே ஜெயிக்கலாம்!!

உங்க ஆரோக்கியம் உங்க கையில…

(Visited 11 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *