சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

வகையாக சிக்கிக் கொண்ட வைரமுத்து!

மீ2 ஹேஸ்டேக்கை பாடகி சின்மயி தொடங்கி வைத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, கரிசல்காட்டு கவிஞன் என்று கூவிக் கொண்டிருந்த கருங்குயிலின் நிலைமை இப்போது, காக்கை கரைவதுபோலாகிவிட்டது. காரணம், கவிஞர் வைரமுத்து, சினிமாத்துறையில் மட்டுமின்றி, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில்லறைத் தனங்களை நிறையவே செய்துள்ளார் என்பது அவரது மனைவி பொன்மணியின் குற்றச்சாட்டால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொன்மணி செய்த நல்ல காரியம்!

வைரமுத்துவின் கவிதை வரிகளில் கவரப்பட்டு, பொன்மணி அவரைத் திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்துக்குப் பின்னர் வைரமுத்துவின் கருப்புப் பக்கங்களின் வக்கிரம் கண்டு அதிர்ந்து போனார். கருத்து முரண்பட்டாலும், கட்டிய கணவனாயிற்றே என்றே பல நேரங்களில் விட்டுக் கொடுத்துச் சென்றார். வைரமுத்து தொடங்கியுள்ள தாய் மகளிர் விடுதியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, என்றாலும், விடுதியின் உரிமையாளர் என்ற முறையில் பலமுறை வைரமுத்து அங்கு செல்வதுண்டு.
விடுதியில் உள்ள பெண்களை எச்சரிப்பதில், பொன்மணி பெண்ணியம் காத்தார், கண்ணியம் காத்தார் என்றே சொல்ல வேண்டும்.

பிரிந்து வாடும் பொன்மணி!

கணவரின் நடவடிக்கை எல்லை மீறியதால், வருங்காலத்தில் பெருந்தொல்லைகள் படையெடுப்பதை அறிந்த பொன்மணி, தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். வைரமுத்து தன் நாத்திக சிந்தாத்தால் ஆண்டாள் தயாரை விமர்சித்தபோதும் கூட, பொன்மணி கொந்தளித்து தன் கணவருக்கு கண்டனம் தெரிவித்து, கவிதை வரிகளால் விளாசித் தள்ளியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மீ2 ஒரு பார்வை

தமிழகத்தில் வைரமுத்து என்ற கவிஞன் பசுத்தோல் போர்த்திய புலி என்று கடந்த 8ம் தேதி கூறிய சின்மயி, வைரமுத்துக்கு எதிராக முதல் பட்டாசை கொளுத்திப் போட்டார்.
சின்மயியை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்துவின் மேல் பாலியல் புகார்களை குவிக்க உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் அதிர்ச்சி!

காலம் பதில் சொல்லும்!

7 தேசியவிருதுகள், சாகித்ய அகாடமி விருது வாங்கி, 6 ஆயிரம் பாடல்கள் எழுதி சேர்த்து வைத்த புகழ், சுக்கு நூறாக உடைந்து, மானம் கப்பல் ஏறியதால், தனது தரப்பு விளக்கத்தை 10ம் தேதி, வெளியிட்டார் வைரமுத்து. அதில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மை காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்பபடுத்தப்பட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையை காலம் சொல்லும்’ என்று கூறியிருந்தார்.

அவர் டுவிட் செய்த சில நிமிடங்களிலேயே ‘வைரமுத்து பொய்யர்’ என பதிலடி கொடுத்தார் சின்மயி.

சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் பதிவிடும் பாலியல் புகார்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசியமாக எங்களிடம் புகார்கள் தெரிவிக்கலாம். அவர்கள் விரும்பினால் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என தேசிய பெண்கள் கமிஷன் அறிவித்து, வைரமுத்துவை கதிகலங்க செய்தது.

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான் அது குறித்து கருத்து சொல்லவேண்டும். எல்லாரும் கருத்து சொல்லுவது நியாயமில்லை. அது தவறானது’’ என்று நழுவினார்.

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். அவரிடம் இந்த பிரச்னை குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘சின்மயி உட்பட, பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அமலாபாலிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். அவர் புகார் கூறியதால் நடவடிக்கை எடுத்தோம். வைரமுத்து மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சினிமாதுறையினர் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம். அவர் பாடல் வரிகளுக்கு ஆடமாட்டோம்’’ என்றார்.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் தார்மீக ரீதியில் வைரமுத்துவிடம் இனி பாட்டு வாங்குவது இல்லை என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

நான் நல்லவனா! கெட்டவனா!

இந்நிலையில், வைரமுத்து மீண்டும் வாய் திறந்தார். தன் தரப்பு நியாயத்தை ஒரு வீடியாவாக பதிவு செய்து வெளியிட்டார். அதில், ‘‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் வழக்கு தொடரட்டும். வழக்கை சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்’’ என்றார்.

பாஜகவின் நையாண்டி

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது’’ என்று வைரமுத்து பாணியில் பதிலளித்தார்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேமமாலினி, ‘மீ…2’ வில் போட்ட பதிவு:

நான் சன் மியூசிக் டிவியில் வேலை செய்தபோது, ஒரு இளம் பெண்ணிடம் வைரமுத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். இதற்கு நானே சாட்சி. இதுகுறித்து 10 ஆண்டுகள் முன்பே பேசி இருக்கிறேன். குரலற்றவர்களுக்கு குரலாக ஒலிக்கும் சின்மயிக்கு எனது சல்யூட். சினிமா துறை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் காலம் வந்துவிட்டது.

முத்தாய்ப்பாக வைரமுத்து மகன் ‘‘நான் மீ2 இயக் கத்தை ஆதரிக்கிறேன். எனது ஆதரவு சின்மயிக்கு தான் என்று கூறியுள்ளது கவிஞரை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

(Visited 23 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *