சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் செய்த துரோகம்!

சர்வதேச அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இப்போது இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. அணு ஆயுது வலிமையில் 4ம் இடத்திலும், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆளுமையில் 4ம் இடத்திலும் உள்ளது.

இந்த இடங்களை எட்டுவதற்காக இந்தியா கொடுத்த விலை மிகமிக அதிகம். நவீன விஞ்ஞான யுகத்தில் இந்தியா அடியெடுத்து வைக்க முயன்ற நாட்களில், இந்தியாவை வளரவே விடக்கூடாது என்று திட்டமிட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்ப வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் முழங்கினார். ஆனால், அதே ஜனவரி மாதத்தின் 24ம் தேதி அவர் பயணம் செய்த விமானம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மோதிய விபத்தில், மர்மமான முறையில் பலியானார்.

ஹோமிபாபா மரணம் தொடக்கம்தான்…

இது இந்திய விஞ்ஞானத்தின் மீது அமெரிக்கா வின் உளவுத்துறையான சிஐஏ நடத்தியத் தாக்குதல் என்று பலராலும் சந்தேகிக்கப்பட்டாலும், அதுகுறித்து மத்திய அரசு எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. விசாரணையும் நடத்த உத்தரவிடவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு எப்படியெல்லாம் பாதுகாப்பு கொடுக்கிறது என்பதற்கான ஒரு உதாரணம்தான் இது.
அணுசக்தி மட்டுமல்ல இந்தியா எப்போது எல்லாம் விண்வெளித்துறையில் ஒருபடி முன்னேறுகிறதோ, அப்போதெல்லாம் இந்திய விஞ்ஞானிகள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டதாக அபிஷேக் சக்சேனா என்ற பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் சுட்டிக்காட்டும் விஞ்ஞானிகளின் மரணங்கள் மர்மமானது…படிக்கும் நபர்களுக்கு திகிலடிக்கக் கூடியது…
* கைகா அணுமின் நிலையத்தில் பணிபுரிந்த லோகநாதன் மகாலிங்கம் என்ற அணுவிஞ்ஞானி 2009ம் ஆண்டு திடீரென மாயமானார். 5 நாட்கள் கழித்து காளியாற்றின் கரையில் பிணமாக மீட்கப்பட்டார். இங்கே நேருவின் தம்பி சாவுக்கு விசாரணையில் தீவிரம் காண்பிக்கும் அளவுக்கக் கூட, விஞ்ஞானி மகாலிங்கம் மரணம் குறித்து அரசு விசாரணை நடத்தவில்லை. தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஞ்ஞானி என்றபோதும்…
* இந்திய அணுசக்திக் களத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி ரவி முலி, 2010ம் ஆண்டு காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார். மற்றொரு அணு விஞ்ஞானியான ரவியும் அதே பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.
* மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி மாதவன் பத்மநாபன். ஐய்யர் என்பவர் 2010ம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
* 2011ம் ஆண்டில் மற்றொரு பாபா அணுசக்தி மைய விஞ்ஞானியான உமா ராவ் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
* மிகச் சமீப காலத்தில் இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தில் செயல்பட்டு, ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பலை வெற்றிகரமாக இயக்கிக் காண்பித்த அணுசக்தி விஞ்ஞானிகளான கே.கே. கோஷ் மற்றும் அபிஷ் சிவம் ஆகியோர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதெல்லாம் மீடியாக்களில் வந்ததால், உங்களுக்கும் எனக்கும் தெரிந்த செய்திகளாகி விட்டது. தெரியாத பல்லாயிரக் கணக்கான ரகசியங்கள், யாரோ சிலரின் உள்ளத்தில் புதைந்திருக்கக் கூடும். அணுசக்தித்துறையில் எப்படியெல்லாம் நம் விஞ்ஞானிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

காங்கிரஸ் கட்சியின் பாராமுகம்!

இந்த மரணங்கள் மீதான மர்ம முடிச்சுக்களை எல்லாம் அவிழ்க்க வேண்டிய பொறுப்பு, அப்போதைய காலகட்டங்களில் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு காரணம், இந்த மரணங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றபோதும், பதில் அளிக்க வேண்டிய மத்திய அரசு மவுனம் சாதித்தது என்பதே உண்மை. அணுசக்தித்துறை மட்டுமல்ல,
அதனுடன் இணைந்த ஒரு துறையான விண்வெளி ஆராயச்சித்துறையிலும் விஞ்ஞானிகளுக்கு இதே கதிதான்.
விண்வெளித்துறையில் துருவ செயற்கைக்கோள் வாகனத்தை பயன்படுத்தி, மேற்கு நாடுகளை திகைக்க வைத்துக் கொண்டிருந்த இந்தியா, ஏரியன் ராக்கெட்கள் போல் மிக அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் கிரையோஜெனிக் இன்ஜின்களை பயன்படுத்த முடிவு செய்தது. கிரையோஜெனிக் என்பது ஆக்சிஜன் (மைனஸ் 184 டிகிரி) மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (மைனஸ் 253 டிகிரி)யில் நீர்மமாக்கி, அதை ராக்கெட் இன்ஜின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக இந்திய விஞ்ஞானிகள் ரஷ்யாவிடம் இருந்து கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பெற முடிந்தனர். இந்தியாவுக்கான விமானப்படை விமானங்களை அதிகமாக வழங்கிய வகையில், இந்தியாவுடன் நெருக்கமாக இருந்த அப்போதைய சோவியத் அதிபர் மீகையில் கோர்ப்பசேவ், ‘அட அதுக்கென்ன உங்களுக்கு கொடுக்காம, யாருக்கு கொடுக்கப்போறேன்’ என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள், அமெரிக்க அதிபர் புஷ் (சீனியர்), நேரடியாக கோர்ப்பசேவிடம் பேசி மிரட்டினார். ‘நீங்கள் நினைத்தபடி எல்லாம் கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை கொடுக்க முடியாது’ என்றார்.

துணிந்த இந்தியர்கள்

அமெரிக்காவின் மிரட்டலால் ரஷ்யா பின் வாங்கியது. ரஷ்யா கொடுக்காவிட்டால் என்ன? நாமே அந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம். எஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவோம், கிரையோஜெனிக் உருவாக்குவோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முழங்கினர். இவர்களில் 2 பேர் முக்கியமானவர்கள் ஒருவர் நம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன். மற்றொருவர் கே. சந்திரசேகர்.
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்யா, பிரான்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாக ஒதுங்கிக் கொள்ள, இந்திய விங்ஞானிகள் குழுவினர் கிரையோஜெனிக் இன்ஜின் குறித்த அடிப்படை கட்டமைப்பை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் அடிப்படை கட்டமைப்பை இஸ்ரோவின் சில விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர், திட்டத்துக்கு உயிர் கொடுத்து தடவாளங்கள் தயாரித்துவிட்டால், ரஷ்யா, பிரான்ஸ் மட்டுமல்ல, அமெரிக்காவையும் இந்தியா மதிக்காது என்று சிஐஏ அறிக்கைத் தயாரித்து, தன் அதிபருக்குக் கொடுத்தது.
அதேநேரத்தில், கிரையோஜெனிக் இன்ஜின் திட்டத்தை பேப்பரில் வரைந்ததை, இயந்திரமாக்கிட நம்பி நாராயணனும், சந்திரசேகரும் துடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் 2 பேரையும் வீழ்த்திவிட்டால், இந்தியாவின் கிரையோஜெனிக் திட்டத்தை சிதைத்துவிடலாம் என்று திட்டமிட்டது சிஐஏ. இதற்காக, அரபிக்கடல் வழியாக அருகில் உள்ள மாலத்தீவில் இருந்து தன் சதிக்கான நூல் பிடிக்கும் வேலையை துல்லியமாக தொடங்கியது சிஐஏ.

திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட பெண் உளவாளிகள்

மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை 1994ம் ஆண்டு அக்டோபரில் திருவனந்தபுரத்தில் கேரள போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவரது கையில், கிரையோஜெனிக் தயாரிக்கும் இயந்திரங்களின் மாதிரி படங்கள் இருந்தது. அந்தப் படங்களை நம்பி நாராயணன் தனக்கு வழங்கியதாகவும், தான் அதை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தாகவம், மரியம் ரஷீதாவிடம் வாக்குமூலம் பெற்றது கேரள போலீஸ்.
அவ்வளவுதான், இஸ்ரோ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நம்பி நாராயணன், சந்திரசேகர், தொழிலதிபர் சர்மா, மரியம் ரஷீதாவின் நண்பி பாசூயா ஹாசன் என்று பலரும் அதே ஆண்டில் அக்டோபர் 20ம்தேதி கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைது குறித்து கருத்து சொல்ல வேண்டிய, பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசு மவுனம் சாதிக்கிறது. அப்போது நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, உலகின் தலைசிறந்த பொருளாதார மேதை என்ற விருதை வழங்கி, அப்போதய அரசை ஒருவித புகழ்போதையில் மூழ்கடித்தது அமெரிக்கா.
மறுபுறத்தில், தேச துரோகியாக சித்தரிக்கப்பட்ட நம்பிநாராயணன், சந்திரசேகர் போன்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை, தேர்ட் டிகிரி டிரீட்மென்ட் எனப்படும் மோசமான, இழிவான முறையில் சித்ரவதை செய்யத் தொடங்குகிறது கேரள போலீசார். போலீசாரின் சித்ரவதையால் உடல், மனம்சோர்ந்தனர் நம்பி நாராயணன், சந்திசேகர். தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் ஏற்பட்ட வழக்கு என்ற நிலையில், மிகமிக கவனமாக வழக்கை விசாரிக்க வேண்டிய அரசு, ஒரு பிக்பாக்கெட் கைது செய்யப்பட்டது போன்ற தோற்றத்தில் நம்பிநாராயணன் வழக்கை கையாண்டது. இத்தனைக்கும் மரியம் ரஷீதாவும், அவளது தோழியும் பிறநாடுகளால் பயிற்றுவிக்கப்பட்ட பெண் உளவாளிகள் என்று முன் கூட்டியே தெரியவந்தும், மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்தது.

கேவல சித்திரவதைகள்

கேரள போலீஸ் தேர்ட் டிகிரி டிரீட்மென்டின் சுருக்கம் அல்லது நோக்கம் ஒன்றுதான். அது நம்பிநாராயணனுக்கு உயர் அதிகாரியாக இருந்த முத்துநாயகம்தான் இந்தப் பிரச்னை எல்லாவற்றுக்கும் காரணம் என்ற வாக்குமூலம் பெற வேண்டும், அவரையும் கைது செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பி நாராயணன் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக பொய் கூறவில்லை. உயிரே போனாலும் உண்மையின் பக்க் நிற்பேன் என்றார். உண்மையில் தர்மம் வென்றது, அதர்மன் வீழ்ந்தது.
ஏதோ ஒரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதல் கள் காரணமாகத்தான், நம்பி நாராயணன் உட்பட பலரும் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற உண்மை போலீசாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, பாரதத்தை நேசிக்கும் மக்களுக்கு, உண்மையான தேச பக்தர்களுக்குத் தெரியாமல் போகுமா என்ன? மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. நம்பி நாராயணன் வழக்கை கவனக்குறைவாக கையாண்ட அப்போதைய கேரள முதல்வர் கருணாகரன் (காங்கிரஸ்), தன் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

சிபிஐ வந்தது

இதன் பின்னர் 1996ம் ஆண்டில் இந்த வழக்கின் போக்கை உணர்ந்து, சுப்ரீம் கோர்ட் தலையீட்டின் பேரில் சிபிஐ விசாரிக்கத் தொடங்குகிறது. இதிலும், கேரள போலீசார் தலையீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் தன் சுத்தியலால் கேரள போலீஸ் தலையில் ஒரு தட்டு தட்டுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், கேரளாவில் இருந்த காங்கிரஸ் கட்சியும், அதில் செல்வாக்குடன் இருந்த சில கிறிஸ்தவ அமைப்புகளும் இந்த சதி வலையை மிகவும் வலுவாக பின்னுவதற்கு வழி செய்திருந்தன என்பது போன்ற செய்திகள் லீக் ஆனது.
அப்படியும் பாருங்கள், ஒரு நிரபராதி தன்னை நிரபராதி என்றும், கை சுத்தமானவன், தேசப்பற்றாலன் என்று நிரூபிப்பறத்கு 25 ஆண்டுகள் போராட வேண்டியிருந்திருக்கிறது. ஒரு வகையில், நம்பி நாராயணன் மீதான கரையை சுப்ரீம் கோர்ட் நீக்கியதுடன், மனிதாபிமானம் அற்ற முறையில் அவர் நடத்தப்பட்டதற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீடு பணம் அவர் பட்ட துன்பத்துக்கு மருந்தாகுமா? அவரது தேசப்பற்றின் மீது விழுந்த கறையை நீக்கிடுமா?
ஆனாலும், எந்த நம்பி நாராயணன் தான் கைது செய்வதற்கு முன்னர் கிரையோஜெனிக் இன்ஜின் மாதிரி வரைபடத்தை உருவாக்கினாரோ, அதுதான் இன்று இஸ்ரோவின் அடுத்தகட்டப் விண்வெளி ஆளுமைக்கு வழி செய்துள்ளது என்றால் அது மிகையில்லை.

மரணம்தான் பரிசா?

நம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு விஞ்ஞானியான சந்திரசேகரன், தான் நிரபராதி என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் பரிதாபமாக இறந்தார். வேலை பறிப்பு, தேச துரோகி என்ற குற்றச்சாட்டால் அவரும், அவரது குடும்பத்தினரம் அடைந்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தேசத்தை நேசித்த தேசபக்தர்களான விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்த பரிசு மரண தண்டனையா?

கேரளாவில் கிறிஸ்தவத்தின் மீது கை வைக்க முடியுமா?

கேரளாவில் தொடக்கம் முதல் இப்போது வரை கிறிஸ்தவமும், இஸ்லாமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சி செய்தாலும், இந்துக்களுக்காக அங்குள்ள அரசாங்கம் ஏதும் செய்வதும் இல்லை. அதேநேரத்தில், கிறிஸ்தவத்துக்கு அளிக்கும் சலுகையும் அபாரம். நிரபராதியான நம்பி நாராயணன் மீது வந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த கேரள அரசு (பின்புலத்தில் சிஐஏ, கிறிஸ்தவ மிஷனரிகள் இருந்தன), பாதிரியார் மீது கன்னியாஸ்திரி பலாத்கார புகார் கொடுத்தபோது, எவ்வளவு வேகத்தில் கைது நடவடிக்கை எடுத்தது என்பதை நாடே பார்த்துக் கொண்டுதானிக்கிறது.

சிபிஐ என்ன செய்தது?

நம்பி நாராயணன் மீதான வழக்கை மிகவும் துல்லியமாக விசாரித்த சிபிஐ, இந்த வழக்கை கேரள போலீஸ் நுட்பமாக ஜோடித்துள்ளது என்று நிரூபித்தது. சுப்ரீம் கோர்ட் விடுவித்தது. கேரள போலீசார் மீது நம்பி நாராயணன் நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்தார். ஒரு லட்சம் இழப்பீடு கொடுக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், பணம் கொடுக்கவில்லை கேரளா. கேரளாவின் கோர்ட் அவமதிப்பு செயல்தான் இப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று வந்து நிற்கிறது.

இன்னும் தெரியணுமா கிறிஸ்தவத்தின் பங்களிப்பை?

நம்பி நாராயணனுக்கு தேச துரோகி பட்டம் சூட்டி எந்த சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளி எந்தக் கிறிஸ்தவ மிஷினரிகளும், சிஐஏவும் சேர்ந்து அழகு பார்த்ததோ, அதே கிறிஸ்தவ மிஷனரிகள் வேறு ரூபத்தில் தேச துரோகிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன. இந்தியா ஒரு பொறுக்கி நாடு என்று பேசிய தேச விரோதியான டேனியல்காந்தி, ஐரோப்பாவில் 20 நாட்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது ஐரோப்பிய பயணத்துக்கு செலவு செய்தது யார்? அல்லது டேனியல் காந்தியே செலவு செய்தார் என்றால், அவருக்கான வருமான மூலம் எது? இதுதான் இந்தியாவை நேசிக்கும் தேசபக்தனுக்கும், இந்தியாவை அவமதிக்கும் தேசதுரோகிகளுக்கும் இங்கு கிடைக்கும் மரியாதையாகும்.

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *