சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

வெனிசுவேலா போல இந்தியாவும் திவாலாக வேண்டுமா?!!

இதோ ஐடியா!

பெட்ரோல் விலையை அப்படி குறைக்கலாமே இப்படி குறைக்கலாமே இந்த வரியை குறைக்கலாமே என அறிவுரை சொல்லும் எக்கானாமிஸ்டுகள் வெனிசுவேலாவையோ அல்லது சவூதியையோ பற்றி பேசுவதே இல்லை. வளைகுடா நாடுகளை பற்றியே பேசுவதில்லை என்றாலும் சவூதியை கொண்டாடும் அளவுக்கு அதன் பொருளாதார கொள்கைகளை பற்றி பேசுவதில்லை.

அதிகளவு பெட்ரோல் வளம்!

வெனிசுவேலா, சவூதி எல்லாம் உலகத்திலேயே அதிகளவு பெட்ரோலிய வளம் வைத்திருக்கும் நாடுகள். வெனிசுவேலாவின் மற்றவிதமான பெட்ரோலிய வளமோ ஒட்டுமொத்த உலக எண்ணெய் வளத்தை விட அதிகம்.

இருந்தும் இன்றைய நிலை என்ன? பணவீக்கம் பத்து லட்சம் புள்ளிகளை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. புரியம்படி சொல்லவேண்டுமானால் சாப்பிட போய் சொல்லிட்டு சாப்பாடு வருவதற்குள்ளே விலை இருமடங்கு ஆகியிருக்கும். ஒரு காப்பியின் விலை பத்து லட்சம் பொலிவார்கள். பொலிவார் என்பது அந்த நாட்டு பணத்தின் பெயர்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையிலே பாதியளவேவும் தமிழ்நாட்டை போல மூன்று மடங்கு பரப்புளவும் கொண்ட நாடு. வளமாக நாடாக பத்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது.

இன்றைய நிலை என்ன?

இன்றைக்கு விட்டால் போதும் என வெனிசுவேலா மக்கள் தப்பி ஓடுகிறார்கள். பக்கத்து நாடுகள் தடுக்க வேலி அமைக்கின்றன. நாட்டிலே பாதிப்பேர் ஒல்லியாகிவிட்டார்கள் என புள்ளிவிவரங்கள் சொல்கிறன. கடும் பஞ்சம் பசி, பட்டினி.

ஏன் இப்படி ஆனது?

பெட்ரோலிய வளம் கிடைக்கிறது என செவாஸ் எனும் அதிபர் பெட்ரோலிய கம்பெனிகளிலே அனைவருக்கும் வேலை என அறிவித்தார். பெட்ரோலிய விலை குறைந்த பின்னரும் பல லட்சம் பேருக்கு சும்மா சம்பளம் கொடுத்தார்கள். விளைவாக அனைத்து எண்ணெய் கம்பெனிகளும் திவால் ஆகின. சும்மா இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுத்ததால் கூலி உயர்வு, விலை உயர்வு எல்லாம் அதிகரித்தன.

விவசாயம்!

விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் விளை நிலங்களை தரிசாக போட்டார்கள். இதை செவோஸ் கைப்பற்றி மற்றவர்களுக்கு கொடுத்தார். அவர்களாலும் விவசாயம் செய்ய முடியவில்லை. விளைவு உணவு உற்பத்தியே இல்லாமல் பஞ்சம்.

பெட்ரோல் வாங்க வேண்டிய நிலை!

சரியாக வேலை செய்ய ஆள் இல்லாததால் பெட்ரோலிய கம்பெனிகள் முடங்கின. இப்போது பெட்ரோலியத்தை அமெரிக்காவிலே இருந்து வாங்க வேண்டிய நிலை.

வரவுக்கு மீறி செலவே இப்படி என்றால் இந்தியாவிலே நாம் உற்பத்தி செய்யாததை நாம் வரவுக்கு மீறி செலவு செய்தால் என்னாகும்? திவால் தான் ஆகனும்.
இந்தியாவும் அந்த நிலைக்கு போயிருக்கவேண்டியது. 2013 இல் ஒரே மாதத்திலே டாலருக்கு எதிரான மதிப்பு 20 ரூபாய் வரை விழுந்தது.

மோடி வந்ததால் பிழைத்தோம்!

நல்ல வேளையாக நாம் மற்ற விஷயங்களையும் உற்பத்தி செய்கிறோம், உணவை இறக்குமதி செய்வதில்லை என்பதால் தப்பித்தோம். 2014க்கு பின்பு திரும்பவும் சீரோ லாஸ் ஆட்கள் வந்திருந்தால் சோலி முடிஞ்சிருக்கும்.

வேளையில்லாமல் சம்பளம்!

வெனிசுவேலா செவோஸ் செய்தது போல இங்கேயும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் என சும்மா இருக்க சம்பளம் கொடுத்தார்கள். சம்பளம் கொடுக்க நோட்டு அச்சடித்தார்கள்.
னீஇங்கே விலைவாசி ஏறியது. பணவீக்கம் 15 சதவீதம் வரை இருந்தது. பெட்ரோல் விலையும் இதே 75 ரூபாய் வரை போனது.

இதோடு கூட இரண்டு லட்சம் கோடி வரை பெட்ரோல் வாங்கியதற்கு கடன் வைத்து விட்டது போனதுகள்.

இப்பவும் அதே போல் செய்யலாம். கடன் வாங்கி பெட்ரோல் விலையை குறைக்கலாம் ஆனால் என்னாகும்? திவால் தான் ஆகும்.

சவூதி அரேபியாவே இப்போது என்ன செய்கிறது?

சவூதி அராம்கோ எனும் கம்பெனியின் பங்குகளை விற்று பணம் திரட்ட முடிவு செய்திருக்கிறது. சவூதி மத சட்டங்கள் ஏதும் இல்லாத நகரங்களை அமைத்து உற்பத்தியையும் முதலீட்டையும் பெருக்குவோம் என செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இப்படி இருக்கும்போது வரியை குறையுங்கள், கடன் வாங்கி பெட்ரோல் விலையை குறையுங்கள் என்றால் மற்ற செலவுகளுக்கு எங்கே இருந்து பணம் வரும்?

அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வண்டிகள் ஓட்டலாம் என்றாலும் அணு உலை கட்டவிடுவதில்லை. சவூதியே 20 அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. துபாயிலே இரண்டு அணு உலைகள் உற்பத்திக்கு வந்திருக்கின்றன.

ஆனால் இங்கே அதுவும் செய்யக்கூடாது. நாட்டிலே ஏதுமே உற்பத்தி செய்யக்கூடாது, எல்லாவற்றையும் வெளியிலே வாங்கவேண்டும் ஆனால் எல்லாமுமே இலவசமாக கிடைக்கவேண்டும்.

வெனிசுவேலாவும் இப்படி போய்தான் சோத்துக்கே பிச்சை எடுக்கிறது. அந்த நிலை இங்கும் வரவேண்டுமா என்பது தான் கேள்வி.

நாட்டை திவால் ஆக்குவதிலே எதிரிகட்சிகளுக்கு என்ன லாபம் என கேட்பவர்கள் முன்பு எழுதிய பதிவுகளை படிக்கவும். மக்களை ஏழைகளாகவே சோத்துக்கு பிச்சை எடுக்கவே வைத்திருந்தால் ஒழிய எதிரிகட்சிகளுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என கொள்கை உடையவர்கள். மக்கள் எப்படி நல்ல சாலைகள் கேட்கலாம் என வெளிப்படையாகவே பேசினார்கள்.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *