சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

திக்கற்றவர்க்கு தெய்வம் துணை என்றே அறிவோம். ஆனால் இன்று அந்த தெய்வத்தின் சொத்துக்களே கொள்ளை அடிக்கப்படுகின்றதே… எங்கே செல்வது??

இந்து மதம் நிந்திக்கப்பட்டு, நமது சம்பிராதாயங்கள் இகழபட்டு, நமது குருமார்கள் அசிங்கப்படுத்தப்பட்டு, நமது கோயில் சொத்துக்கள் அனைத்தும் களவாடப்பட்டு…

இவ்வளவையும் ஏன் மானமுள்ள கோடானு கோடி இந்து சகோதர சகோதரிகள் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர் என்பதே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. மதசார்பற்ற என்றால், அரசு எந்த மதத்தினையும் சார்ந்து இல்லாதது என்றே அர்த்தம்.

இந்த ‘செக்யுலர்’ அதாவது ‘‘மதச்சார்பற்ற’’ என்ற சொல்லே சர்ச்சின் ஆளுமை இல்லாத அரசு என்ற ஐரோப்பிய அரசின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது. நமது அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இல்லை.

எமர்ஜென்சி காலத்தில், பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அடாவடியாக, ‘‘மதசார்பற்ற’’ என்ற சொல்லை திணித்தவர் இந்திரா காந்தி தான்!!

அந்த ‘மதசார்பற்ற’ நிலையிலும் ஒரு நன்மை என்னவென்றால், நமது உச்சநீதி மன்றம். இந்து அறநிலையத்துறை நமது இந்திய சட்டங்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளது.

மதநார்பற்ற ஜனநாயக நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் சொத்துக்களை மட்டும் அரசு எப்படி எடுத்து ஆள முடியும்?? அது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளது நீதி மன்றம்.

எல்லா மத வழிபாட்டு தலங்களிலும், அதன் நிர்வாகத்தில் குறை என்று நம்பத்தகுந்த சாட்சியங்களோடு வழக்கு தொடுத்தால் மட்டுமே, அரசு ஒரே ஒரு ஆண்டு அந்த வழிபாட்டு தல நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு, சீர் செய்து மறுபடியும் உரியவர்களுக்கே ஒப்படைத்து விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இரண்டு வருடம் என்று அன்றைய இந்து அறநிலைய துறை கேட்டுக் கொண்டதன் பேரில், நீதிமன்றம் அறநிலையதுறைக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியேறி விடவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்று வரை நமது அரசு பிற மத வழிபாட்டு தலங்களில் தலையிட்டதில்லை.
ஆனால் நடைமுறையில் 1974ம் ஆண்டில் நன்றாக திறமையாக நிர்வகிக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோயிலை பொய் காரணங்களை கூறி இந்து அறநிலையத் துறை அபகரித்து கொண்டது. இப்போது வருடம் 2017!!!

மேலும் நமது நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு கடுமையாக நிபந்தனைகளை போட்டுள்ளது. கோயிலில் செயல் அதிகாரிகளை (ணிஜ்மீநீutவீஸ்மீ ளியீயீவீநீமீக்ஷீ) நியமிக்கும் உரிமை இந்து அறநிலைய துறையினருக்கு கிடையாது. கோயில் ஆகம முறைகளில் தலையிட கூடாது.

கோயில் சார்ந்த நிலங்கள், சொத்துக்கள் நகைகள், உண்டியல் பணம், போன்ற வைகளை முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
தமிழக கோயில் சொத்து 4 லட்சத்தி எண்பத்தைந்து ஏக்கர்கள் உள்ளன. இருந்தன என்று வேதனையுடன் நினைத்து பார்க்க « வண்டும்.

தங்க நகைகள், வைரம், நவரத்தினங்கள், என அணைத்தையும் திராவிட கட்சிகள் கூறு போட்டு தின்று வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதி ஒருபடி மேலே சென்று கோயில் சொத்துக்களை, ஏழை மக்களுக்கு பங்கு போட்டு கொடுப்பேன் என்கிறார். அதே நேரத்தில் ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்டு கொடுப்பாராம!! தேர்தல் சத்தியம் செய்துள்ளார்!!

திமுக சொல்லி செய்கிறது. அதிமுக சொல்லாமல் செய்கிறது.
இந்துக்கள் இளிச்சவாயர்கள் தானே! எச்சில் துண்டை தூக்கி எறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு வந்து ஒட்டுக்களை அள்ளிக் கொடுத்து, பதவியில் அமர்த்துவார்கள் என்று மிகச் சரியாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர் நமது அரசியல் வாதிகள்.

இன்ன காரியத்திற்காக என்று நமது முன்னோர் நேர்ந்து விட்டுள்ள கோயில் நிலங்களை, தானம் அளிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது.

இந்து கோயில்களில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், கடவுள் அங்கு வாழ்கிறார் என்றே சட்டம் சொல்கிறது. எனவே கடவுளின் சொத்துக்கள் அந்த கடவுளின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது. தானம் அளிக்க முடியாது. மைனர் சொத்துக்களை போல சட்டத்தின் பாதுகாப்பு கொண்டது. எத்தனை காலமானாலும் அது மீட்டு எடுக்க முடியும்.

திருவொற்றியூர் தியாகராஜர் ஆலய சொத்து மதிப்பு சுமார் 100 கோடிகள். இரண்டு குப்பங்கள் அந்த நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது. இது நடப்பு செய்தி.

ஊரான் வீட்டு நெய் ஆனால் என் பொண்டாட்டி கை என்ற கதையாக, அதிமுக அமைச்சர், அந்த நிலத்தில் வீட்டு மனைகள் கட்டி தரப்போகிறாராம்!!! அறிவித்துள்ளார்…

கோட்டூர்புரத்தில் ஒரு சமுதாய கூடம். பெரிய இடம். பெயர் மட்டும் தான் பொது சமுதாய கூடம். ஆனால் அந்த இடம் மருந்தீஸ்வரர் கோயில் சொத்து.

கோயில் சொத்து இந்துக்களுக்கு என்று இருந்தால் ஏன் குழந்தைகளின் படிப்பிற்க்கு நமது எளியோர் மதம் மாற வேண்டும்!!

இது என்ன கொடுமை! நாம் தேர்ந்தெடுத்த அரசு, நமது சொத்துக்களை பிடுங்கி கொண்டு, நம்மை பிச்சைகாரர்களாக்கி, கையேந்தி நிற்க வைத்துள்ளது!! பிற மதத்தினரிடம்….

கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு வெளிநாட்டு பணம் மேலும் தங்கள் சொத்துக்களை பராமரித்து வரும் வரவு. அதே போல தான் இஸ்லாமியர்களுக்கும், ஆனால் இந்த போட்டியில் நமது கைகளையும் கால்களையும் கட்டி விட்டல்லவா ஆட்டம் தொடர்கிறது.

விழித்துக் கொள்வோம் இந்து சொந்தங்களே… தாமதியோம். எங்கள் கோவில் சொத்து, எங்களிடம் கொடுத்து விடுங்கள். இனி ஒரு கணம் பொறுக்க கூடாது… புறப்படுங்கள் தீர்வை தேடி!!

                                                                                                                               பிரியமுடன்
                                                                                                                      பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 22 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *