சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

கடந்த வருடம் ஜூன் 24ந் தேதி பொழுது நன் றாக விடியவில்லை என்றே சொல்ல வேண் டும். தமிழகத்தையே நிலை குலைய வைத்த ‘‘ஸ்வாதி கொலை’’ அன்று காலை 6.30க்கு தான் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்து முடிந்திருந்தது.

பரபரப்பான காலையில், சாட்சியங்களுக்கு
அஞ்சாமல், கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ஸ்வாதி… உண்மையில் ஏன் கொலை செய்யப்பட்டாள் என்பதே மக்களின் மனதில் இன்றும் கேள்வியாக உள்ளது.

24 வயதே ஆன மென்பொருள் பொறியாளர் ஸ்வாதி, பிராமண வகுப்பைச் சேர்ந்த பெண். அதனால் தானோ என்னவோ அவளது இந்த கொடூர மரணம் மோட்ச தீபங்களோடு முடிந்துவிட்டது.

காவல்துறை ராம்குமார் என்ற ஒரு கிராமத்து பையன், ஒரு தலையாக ஸ்வாதியை காதலித்து வந்தான் என்றும், ஸ்வாதி அவனை தேவாங்கு போல இருக்கிறாய் என்று திட்டி நிராகரித்ததால் அவளை வெட்டி விட்டதாகவும் கூறி வழக்கை நகர்த்தினர்.

ராம்குமார் திருநெல்வேலியை சோந்தவன். 3 மாதங்களாக தான் சென்னைக்கு வந்திருக்கிறான். ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தவன்.

போலிசார் அவனை பிடிக்க ஒரு தனிப்படையாக செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தெரிய வில்லை. இரவு 11 மணிவரை காத்திருந்து, ஊரில் மின்சாரத்தை தடுத்து, இருட்டாக்கி, அவனை பிடித்தனராம்!!

ஆனாலும் அவன் ஒரு சிறு பிளேடால் தன் கழுத்தை அறுத்து கொண்டதால், 18 தையல் போட்டாலும், மறுநாளே அவன் தனது முழு கதையையும் காவல் துறையின் முன் நீதிபதியிடம் கூறி உள்ளானாம்!!

இறுதியில் ராம்குமார் சிறையிலிருந்து வெளியே உடற்பயிற்சிக்கு வரும் சமயத்தில், மின்சார கம்பியை கடித்து தற்கொலையும் பண்ணிக் கொண்டு விட்டான். வழக்கு முடிந்தது. அப்பாடா என்று காவல் துறையும் அமர்ந்தது.

உண்மை என்ன என்று தான் தெரியவில்லை. ஸ்வாதியின் பிரச்சினை ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை அவள் வேலை செய்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மங்களுர் / பெங்களுர் அலுவலகத்தில் தொடங்கிய தொடர்புகள் தான் இன்று அவளது உயிரை பறித்துள்ளன.

யாரோ அவளை மிரட்டி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. அவளது தோழி ஒருத்தி, தன்னையும் மிரட்டி ஒரு கும்பல் 6 லட்சம் பணம் பறித்ததாக கூறியுள்ளதை அனைவரும் புறந்தள்ளி உள்ளனர்.
இது ஒரு தலைக் காதல் விவகாரம் இல்லை என்று பல பொதுநல வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.

யார் அந்த பிலால் மாலிக்?? ஏன் அந்த நெருங்கிய நண்பரை நன்றாக சட்டரீதியாக விசாரிக்க வில்லை. உண்மையில் அந்த உறவில் நட்பு அல்லது காதல் இருந்தால், கொலை நடந்த மறுகணமே பிலால் மாலிக், அந்த ராம்குமார் தான் ஸ்வாதியை கொன்றிருக்கலாம் என்று ஏன் சொல்லவில்லை??

ஏன் ஸ்வாதியை கொன்ற அறுவாள் கர்நாடகாவில் செய்யப்பட்டது என்று முதலில் சொன்ன போலிஸ், பின்னர் தன்னை திருத்திக் கொண்டு, திருநெல்வேலியில் செய்யப்பட்டது என்று கூறியது.

ராம்குமாருடன் இருந்த சென்னை நண்பர்களை ஏன் போலிஸ் விசாரிக்கவில்லை. ஸ்வாதி கொலை செய்யப்படும் சில நாள்கள் முன்னர்

அவளை பலமுறை அறைந்த அந்த மர்ம ஆசாமி யார்??
ராம்குமாரின் இரண்டு சிசிடிவி படங்களும் வேறு வேறாக தான் உள்ளது. ஆனால் காவல் துறை ராம்குமார் தான் ஒரே கொலையாளி என்று அடித்து கூறியுள்ளது.

ஸ்வாதியை தினமும் ரயில் நிலையத்தில் கொண்டு விடும். ஆட்டோகாரர் கூறியதை பாருங்கள். போனில் அழுதபடியே நான்தான், என் லேப்டாப், மென்பொருள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டேனே. பின் ஏன் என்னை டார்ச்சர் பண்றீங்கன்னு புலம்பி இருக்கிறாள்.

ஸ்வாதியின் போன், லேப்டாப் யாரிடம் உள்ளது? இன்னும் எவ்வளவு நாள் உன்னை எங்களால் காப்பாத்த முடியும் என்று கதறிய ஸ்வாதியின் தந்தை மட்டுமே உண்மையை கூறி ஸ்வாதியின் உண்மையான கொலைகாரனை தண்டிக்க முடியும். எங்கே ஸ்வாதியின் அம்மா?? அவரது மனம் கொதிக்க வில்லையா…
                                                                                                                                பிரியமுடன்
                                                                                                                       பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *