சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா வல்லரசாக வேண்டும். இந்தியா தன்னிறைவு பெற்று, நலமான வளமான நாடாக மாறி ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த அடிப்படை வசதிகளும், கல்வி மருத்துவம் வேலை வாய்ப்புகள் என்று உறுதிபடுத்தபட கூடிய காலம் வர வேண்டும்!!

சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் நாம் ஏன் இந்த வளர்ச்சியை காணவில்லை!! ஏன் 70% மக்கள் அன்றாட வாழ்கைக்கே போராடி கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இதற்கு காரணமல்ல. இயற்கை வளங்களை குறை சொல்ல கூடாது. மக்களின் திறனையும் குறைவாக மதிப்பிட முடியாது.

இந்தியாவின் பின்னடைவிற்கு ஒரே காரணம், சந்தர்ப்பவாத அரசியல் தான்.
மக்களை பிரித்து, தனது கட்சியே ஆள வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், ஒட்டு வாங்கி அரசியல் நடத்தும் இந்த அரசியல் கட்சிகளே நமது இந்தியாவின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்!!

அன்று முதல் தொடங்கியது நமது விடுதலை பெற்ற பாரதத்தின் துன்ப சரித்திரம்.
சிறுபான்மையினரை நாம் ஏன் குறைகூற வேண்டும். அவர்களிடையேயும் தான் இந்த அரசியல் சந்தர்ப்பவாத தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்து பெரும்பான்மையை பலவீனமாக்கத்தான் நமது அரசு பாடுபடுகிறது. ஆனால் ஏன் இந்து பெரும்பான்மையினர் இந்த அரசியல் கட்சிகளை ஒதுக்கவில்லை??

ஏன் இந்து பெரும்பான்மை தனது கலாசார விரோதிகளை களையெடுக்க முடியவில்லை.
தவறான சரித்திரங்களை படித்து விட்ட காரணத்தினாலா??

நமது கோயிலை உடைத்து பல ஆயிரம் மக்களை கொன்று வளங்களை கொள்ளையடித்த கஜினி முகமதுவை தானே முயற்சிக்கு எடுத்துக்காட்டாக படித்து வருகிறோம்.

நமக்கு கவுரவம், பெருமை தன்மானம் எல்லாம் மழுங்கிதான் விட்டதோ??

நமது இந்து தாய்மார்கள் தான் இந்த பாக்கெட் பாலை தந்து நம்மை சோற்றால் அடித்த பிண்டங்களாக்கி விட்டார்களோ!!

நமது பாரத தாய் இன்னும் சூழ்ச்சி எனும் சங்கிலியால் பிணையபட்டு அடிமையாகவே இருக்கிறாள்.

பெரும்பான்மை இந்துக்கள் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். ஏனெனில் பிற மதங்களில் தேச பக்தர்கள் இல்லையென கூறமாட்டேன்.

ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும், சவுகரியங்களும் அவர்களை தடுக்கும்!!
இந்தியா ஒரே தேசம்!! இந்தியா ஒரே மக்கள்!! ஒரே சட்டம்!! என்று முதலில் மாற்ற வேண்டும்.

யார் அரசாட்சியில் அமர்வது என்ற முடிவு இந்து பெரும்பான்மையினரிடையே தான் உள்ளது எம் சொந்தங்களே!!

இதற்காக தான் ஜாதி தீயை அணைக்காமல் தொடர்ந்து ஊதி பெருக்கி வருகின்றனர். சுதந்திரத்தின் போது 300 ஆக இருந்த ஜாதிகள் இன்று 3500ஐ தாண்டி நிற்கின்றன.

தலீத் உரிமைகள் என்று ஒவ்வொரு தெரு முக்கிலும் ஒரு அமைப்பை தோற்றுவித்து குளிர் காயகிறார்கள். இந்து மதத்தினை எதிர்க்கவே, பிராமண எதிர்ப்பு என்ற போர்வையை உபயோகிக்கின்றனர்.

இஸ்லாம் கிறிஸ்துவ மதத்திலும் பிரிவுகள் அதாவது ஜாதிகளை உள்ளன. கடுமையான ஜாதி கட்டுபாடுகள் உள்ளது.

ஆனாலும் ஜாதி எனும் போர்வையில் இந்து பெரும்பான்மை யின் பலத்தை உடைத்து, முட்டாளாக்கி வருகிறார்கள்.

தேசத்திற்கு தலைமகனாக பாரத பிரதமர் மோடி அவதரித்து விட்டார். பாரத தாயின் ஒரு கண்ணில் மகிழ்ச்சி.

‘‘தமிழ்நாட்டில் ஆளும் அரசு அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கும் உதவி தொகை அளிக்க போகிறதாம்.

அழைப்பு விடுத்துள்ளது விண்ணப்பங்களுக்காக!! இது தவிர வருடந்தோறும் 1000 கோடிகளை நமது இந்திய அரசு இமாம்களுக்கு சம்பளமாக வழங்குகிறது.

200 கோடிகள் ஹஜ் யாத்திரைக்கென வழங்குகிறது. ஆனால் மசூதியின் சொத்துக்கள் அரசிடம் இல்லை.

சர்ச்சுகளின் சொத்துக்கள் அரசிடம் இல்லை. இந்து கோயில் சொத்துக்கள் மட்டுமே அரசிடம் உள்ளது. நாம் கோயிலுக்கு சென்று சாமியை பார்க்க கட்டணம்.

ஒட்டு வங்கி அரசியலால் நாம் இன்று பிச்சைகாரர்களாக இலவசங்களை எதிர்பார்த்து நிற்கிறோம். நம் வீட்டு சொத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு நமக்கே கிள்ளித் தருகிறார்கள். போதும்!! விழித்துக் கொள்வோம்!!

தமிழகத்தில் இந்துக்களுக்கு நடக்கும் இக்கொடும் துயர் துடைக்க, வரும் தேர்தலில் நமது பெரும்பான்மையின் பலத்தை காட்டுவோம். ஒன்றிணைக்கும் நம் தலைவரை தேர்ந்தெடுப்போம். தாமரை மலரட்டும்! தமிழகம் செழிக்கட்டும்!

                                                                                                              பிரியமுடன்
                                                                                               பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 12 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *