சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

பிரியமுள்ள வாசகர்களே…

பாரத பிரதமர் மோடி எனும் ஆளுமை சக்திக்கு எதிராக தான் எத்தனை எத்தனை நரகாசுரர்கள்?? இவர்களுக்கு என்ன தான் தேவை. பிரதமர் மோடி ஏன் இத்தனை பேரின் பொது எதிரியாகி விட்டார்.

பாரதம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வளம் காண வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. பாரத மாதாவே என் தெய்வம். இந்திய அரசியல் சட்டமே என் வேதம் என்று பாராளுமன்றத்தின் படிகளை தொட்டு வணங்கி பதவியேற்ற பண்பாளர் பிரதமர் அவர்கள்.

பாரதம் உடைய வேண்டும். உடைத்தெறியபட வேண்டும். மத கலவரம், ஜாதி சண்டைகள், அரசின் வளம் பெருக்கும் முயற்சிகளுக்கு முட்டு கட்டை போராட்டம், போலி பிரச்சாரங்கள் என இந்த தேச விரோதிகளின் பெயர்கள் வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்று தான்.

பாரதம் நலிந்து உடைந்து மீண்டும் ஊழலில் திளைத்து, தேச விரோதிகளின் கூடாரமாகி, இந்து மதம் அழிக்கப்பட்டு, ஆபிரகாமிய மதங்களை வேரூன்ற செய்து என இது போன்ற அவர்களின் பல கனவுகளுக்கு தடையாக இருப்பது நமது பாரத பிரதமர் மோடி தான்.

அதனால் தான் இன்று ஊடகம், பெரும்பாலான பத்திரிகை செய்திகள், இணைய செய்திகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும், மோடியின் தோல்வியாக ஒன்றை எடுத்து காட்டி இருப்பார்கள்.

எந்த இணையதள குரூப் என்று ஆரம்பித்தாலும் அதிலும் ஒரு ஸ்லீப்பர் செல்!! இவ்வளவு பணத்தை தண்ணிராக செலவழிக்கும் இந்த தேசவிரோத கும்பலினை மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டார்கள்.

அந்நிய மத வியாபாரிகளின் பண பலத்தால் துள்ளிக்குதிக்கும் லெட்டர்பேட் கட்சிகள், இன்னமும் தமிழரை களிமண் உருண்டைகளாகவே பார்க்கிறார்கள்.

ஜப்பான் பத்திரிகையை பாருங்கள். மோடியின் பணம் செல்லாது என்ற திட்டம், ஜி.எஸ்.டி திட்டத்தினாலும் நாடு எந்த பயனையும் அடையவில்லை என்று போட்டிருக்கிறது என்று நமது இணைய தளம் முழுக்க இந்த நடுநிலை நக்கிகளின் எகத்தாளம்.

இந்த கட்டுரையை எழுதியது எந்த ஒரு ஜப்பானியரும் அல்ல. இன்னொரு ஒரு நடுநிலை நக்கி தான் என்ற உண்மை தெரிந்ததும் கப்சிப்! உண்மையில் 137 நாடுகள் பட்டியலில் 40வது இடத்தை பாரதம் பிடித்துள்ளது. 3 வருடங்களுக்கு முன்பு 71ம் இடத்தில் இருந்தது என ஃபோர்ப்ஸ் எனும் பிரபல பத்திரிகை, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகள் இந்தியாவினை மிகவும் முன்னேற்றியுள்ளது என வியந்து பாராட்டி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் ஒரு ஏழை மூதாட்டியின் 1000 ரூபாய் பென்ஷனில் 350 ரூபாய் வங்கி சார்ஜ் பிடித்தம் என்று ஒரு செய்தி! மூதாட்டியின் துயர படம் வேறு. உண்மை என்ன என்று விசாரித்தால் அப்படியொரு கணக்கே இல்லை என்பது தான்.

வங்கி மேலாளர் கூறும் போது சம்பள கணக்கு, அடிப்படை கணக்கு என இருவகை கணக்குகளில், 0 ரூபாய் பேலன்ஸ் கூட இருக்கலாம். கட்டணம் கிடையாது. திரித்து கூறினால் நாங்கள் என்ன செய்வது?? மக்கள் தான் நடுநிலையோடு ஆராய்ந்து அறிய வேண்டும் என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

தினம் ஒரு பொய் பிரசாரம் என்று வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக இவர்கள் உழைத்தாலும் இவர்களது தேசவிரோத போக்கும், செயல்களும் மக்களை ஏமாற்ற முடியவில்லை. ஏனெனில் வெகு விரைவில் உண்மை கசிந்து விடுகிறது.
இந்த இனிய தீபாவளியில் மகா சக்தியே!!

எங்களின் பாரத பிரதமர் மோடியினை இந்த தீய சக்திகளான நரகாசுரர்களிடமிருந்து காப்பாற்றி, ஒன்றுபட்ட இந்தியா வளமான இந்தியா எனும் அவரது கனவை நிறைவேற்ற உம்மை வேண்டி கேட்கிறோம்!!!

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

                                                                                                                     பிரியமுடன்
                                                                                                           பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 18 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *