சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

தர்ம யுத்தம் இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பொது ஜனத்திடம் வரவேற்பு இருந்தும், சில தேச விரோத பிரிவினைவாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும் தங்களது ஊழல் பணத்தால், மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறார்கள்!!

கடுமையான முயற்சி என்றே சொல்ல வேண்டும். இதனால் மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள், எல்லோருக்கும் ஒரே நீதி என்ற நிலைபாடு என எதனையும் ஊடகங்களோ எந்த அரசியல் தலைவர்களோ விவாதிப்பது இல்லை.

எப்போதுமே மோடி ஒழிக என்ற ஒற்றை வரி கோஷம் தான். யார் இவர்கள்?? ஏன் இந்த மோடி எதிர்ப்பு?

சுதந்திரம் கிடைத்த 70 ஆண்டுகளில், ஊழலும் கருப்பு பணமும் மொத்த இந்தியாவில் புரையோடி விட்டிருந்தன.

எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்!! கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன் வெலத் ஊழல், போன்ற மெகா ஊழல் அரசை சகித்து கொண்ட இவர்கள் ஏன் மோடியின் 3 ஆண்டு ஆட்சியை பொறுக்காது வெந்து சாகிறார்கள்!! யார் இவர்கள்…

ஹவாலா வியாபாரிகள் எல்லாமே இனி வங்கி கணக்கு தீவீர கண்காணிப்பு என்பதால் எதிர்ப்பு.
கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள், போலி தொண்டு நிறுவனங்கள், வீட்டுமனை வியாபாரிகள், கல்வி நிறுவனங்கள், சினிமா துறையினர் என இவர்கள் அனைவருக்கும் மோடி எதிர்ப்பு என்பது கருப்பு பணத்தை முடக்கியதால் மட்டுமே!!!

மேலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை என்பது தான் அவர்களது முடிவின் ஆரம்பம்.
அதனால் தான் பணத்தை அள்ளி இறைத்து, பத்திரிகைகள், ஊடகங்கள், இணைய தளங்கள், வீடியோ மீம்ஸ் என சிறந்த படைப்பாளிகளை கொண்டு மக்கள் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள்.

இந்தியா என்றாலே ஊழல் நாடு என்று உலக அளவில் அவப்பெயர் பெற்றது இந்த அரசியல்வாதிகளால் தான். கருப்பு பண தாக்கத்தால் இந்தியா தன்னை இழந்து கொண்டிருந்த காலத்திலே தான், ஆளுமை பொருந்திய தேச பற்று கொண்ட நமது மோடி பாரத நாட்டின் பிரதமரானார்.

ஊழல் இல்லா இந்தியா! கறுப்பு பணம் இல்லா இந்தியா! என்ற தனது இலக்கை எட்டிவிட்டார். 3 ஆண்டுகளில் உலகமே இவரது தலைமையை போற்றி அதிசயத்து நிற்கிறது.

பிரதமர் மோடியும் முன்னைய காங்கிரஸ் அரசைப் போல ஊழல் செய்து, ஊழல்வாதிகளை கண்டும் காணாமலும் இருந்து வெளி நாட்டில் சில தீவுகள், ஸ்விஸ் வங்கியில் பணம் என்று இருந்திருக்கலாமே!!

பிரதமர் மோடியின் உறவுகள் சாதாரண நிலையில் தான் இவ்வளவு வருடங்களாக இருக்கிறார்கள். என் பாரதமே என்தாய் என கூறிய இந்த தலைமகனை நாம் கொண்டாட வேண்டாமா??

எளிமையான உன்னத தலைவர் காமராஜரை திமுகவின் விஷ பிரச்சாரத்தால் தோற்கடித்த நமது துரோக சரித்திரத்தை நினைத்து பார்க்க வேண்டிய தருணமிது. இப்போது காமராஜர் கால அரசை நினைத்து ஏங்குகிறோம்.

தர்மம் தான் வெல்லும் என்பது உறுதி. ஆனால் நமக்கு இது கடைசி வாய்ப்பு என்பதை மறந்து விடாதீர்கள். ஊழலுக்கும் கறுப்பு பணத்திற்கும் எதிரான மோடியின் போராட்டத்திற்கு நாம் தோள் கொடுக்க விட்டால் இனி அடுத்த 100 வருடம் இன்னொரு பிரதமர் ஊழலையும், கறுப்பு பணத்தையும் எதிர்த்து நிற்க மாட்டார். வல்லரசு இந்தியா என்பதே ஒரு கனவாகி விடும். நமக்காக மட்டுமல்லாமல் நமது சந்ததியினருக்காகவும் நாம் உறக்கம் கலைந்து, களம் செல்ல வேண்டிய தருணமிது.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பத்து பேர்களுஙககாவது உண்மையை தினமும் உரக்க சொல்வோம்.

நாம் ஒற்றுமையாக பாடுபட்டு இந்த தேசவிரோத சக்திகளின் சதியை முறியடித்து, இந்தியாவை வல்லரசாக்குவோம்.

                                                                                                                      பிரியமுடன்
                                                                                                             பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 20 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *