சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

மத மாற்றங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி, சராசரி இந்துக்களின் மனதில் நிச்சயம் எழும். மதம் மாறும் வெகுளி மக்களிடமும் இந்த கேள்வி இருக்கும்.

பாரதம் என்ற மாபெரும் செல்வந்த நாட்டை கொள்ளையடிக்க, வஞ்சகப்போர் புரிந்து 1000 ஆண்டுகள் அடிமை படுத்திய வரலாற்றை நாம் சுமாராக படித்திருக்கிறோம்.

ஆனால் இன்று போர் புரிய உலக நாடுகளின் நல்லிணக்க ஒப்பந்தங்கள் அனுமதிப்பது அபூர்வம். மேலும் இன்று போர் என்பது நவீன மயமானது. ஒரு போர் விமானம் மட்டுமே 500 கோடிகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எனவே இன்று போர் என்றால் லட்சக்கணக்கான கோடிகள்!! வெற்றி என்பதும் இல்லை என்பதே நிசர்சனம்.

பின் என்ன செய்யலாம். பாரத நாட்டை உள் இருந்தே அழிப்போம். இந்தியாவின் வளர்ச்சியை தடுப்போம். உள்ளுர் கலவரத்தினைக் கொண்டு வளத்தை முடக்குவோம் என்பதே அந்நிய நாடுகளின் இலக்கு.

இதற்கென இந்தியாவில் பல அமைப்புகளை உருவாக்கி, அதற்கு நன்கொடைகளை, டாலர்களாக, பவுண்டுகளாக அள்ளி கொடுத்து, மதம், ஜாதி, மொழி, ஏற்றதாழ்வு, தனிநாடு கோரிக்கை, கம்யூனிசம், நக்சல், மாவோயிஸ்ட் என பல பெயர்களை சூட்டி தனது நச்சு கனவை நனவாக்க துடிக்கின்றன, இந்த துரோக அந்நிய நாடுகள்.

சரி எதற்காக என்ற கேள்வி இந்துக்களுக்கு எழுவது நிச்சயம்.
உலகை கிறிஸ்துவ மயமாக்குவோம் என்று ஒரு புறமும், உலகை இஸ்லாம் மயமாக்குவோம் என்று இன்னொரு புறமும் கச்சை கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கியுள்ளனர் என்பதை உலகமே அறியும்.

அந்நிய மதங்கள் குள்ளநரித்தனமான தந்திர போரை இந்தியாவிற்குள் நடத்தி வருகிறன. இந்துக்களின் கோவில் சொத்துக்களை முடக்கி, குழந்தைகளின் பள்ளி படிப்பு, மருத்துவம் என்பதற்கு கூட கையேந்தும் பரதேசிகளாக்கி, களம் இறங்கியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் 35 லட்சம் தொண்டு நிறுவனங்களில் பாதிக்கும் மேல் அந்நியமத தொண்டு நிறுவனங்கள் தாம் என்றாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

இந்தியாவில் மதமாற்றம் மூலமாக, மக்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து, தேசவிரோத செயல்களில் ஈடுபடுத்துவது இத்தகைய அமைப்புகளே!!

இந்திய இஸ்லாமியர்களோ நாங்கள் அமைதியை தான் விரும்புகிறோம் என்று கூறினாலும், அவர்களிடையே வளர்ந்து விட்ட தீவீரவாத அடிப்படை வாத இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. சவுதி அரேபியாவின் வகாபிச இஸ்லாமிய பிரச்சாரம் 60களில் தொடங்கியது அந்த கொடும் வனமுறை இன்று வரை ரத்த பலிகளை வாங்கி கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு சர்ச்சிலும், மசூதியிலும் யாருக்கு தேர்தலில் ஒட்டு போட வேண்டும் என தீர்மானிப்பது இந்த அடிப்படை வாத தலைவர்களே என்பதே இந்த மதமாற்றத்தை எதிர்க்க வலுவான காரணம்.

தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா அவர்கள் கூறியது சரியான நெத்தியடி!! மக்கள் விரும்பும் நடிகர் விஜய், ‘ஏசு காப்பாற்றுவார்’ என்ற காகிதத்தில் தான் லெட்டர் எழுதுவாராம். ஆனால் நெற்றி நிறைய விபுதியையும், குங்குமத்தையும் அப்பிக் கொண்டு, கோயில் எதற்கு என்று கேட்கிறார்.

பொது மக்களும் அதனை ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வது தான் அவர்களது அறியாமை!!!.
சமூக வலை தளம் கட்டிக் கொண்ட புண்ணியம். அவர் ஜோசப் விஜய் என்ற உண்மை வெளி வந்து விட்டது.

இந்துக்களே, இனியாவது அவரது ரசிகர் மன்றங்களை கலைத்து விடுங்கள் என்று எச்.ராஜா குரல் கொடுத்துள்ளார்! வரவேற்கிறோம்.

                                                                                                                          பிரியமுடன்
                                                                                                                 பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 53 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *