சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை…

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையை தணிப்பதற்காகக் கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது என்று கலைஞர் கூட இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

சின்மயி கொளுத்தி போட்ட இந்த ‘‘மீடூ’’ எனும் சிறு பொறி தான் இன்று வடுகபட்டி கவிஞரை வறுத்தெடுக்கிறது.

பாடகி சின்மயி இவரை மட்டும் தான் குற்றம் சாட்டினாளா என்று திராவிட தன்மான தமிழர்கள்!! களம் இறங்கி, மீடூ வின் பாதையை மடை மாற்ற முயற்சித்தனர். ஆனாலும் கவிஞரின் ராகு தசை கை கொடுக்கவில்லை. மேலும் பத்து பெண்கள் கிளம்பி சின்மயி சொன்ன அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

ஆண்டாள் சர்ச்சையின் எதிரொலி!!

இது ஆரியர் சூழ்ச்சி!! என்று பாவம் சுப வீரபாண்டியன் வாங்கிய காசுக்கு வஞ்சம் செய்யாமல் வாதாடினாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, வைரமுத்துவை பற்றித்தான், சினிமா துறையில் அனைவருக்கும் தெரியுமே. இது பொதுவான ரகசியம் தானே என்று பிரபல சானலில் பகிரங்கமாக போட்டுடைத்தார். இனி என்ன சொல்ல இருக்கிறது இந்த கவி பேரரசுவிற்கு!!!

கடந்த 25 ஆண்டுகளாக நமது தமிழக இளைய தலைமுறையினரின் ஒட்டு மொத்த சிந்தனையையும் ‘‘காதல், காமம், சரசம், சல்லாபம் என்று கட்டமைத்தவர் தான் இந்த வைரமுத்து.

கண்ணதாசன் வாலி போன்ற கவிஞர்கள் கூட காதலை மென்மையாக தான் சொல்லி சென்றார்கள். அவர்களது பாடல்களில் தாய் பாசம், கடமை, சகோதர பாசம், தேசபக்தி, பொது நலன் என பல பரிமாணங்கள் இருந்தன.

ஆனால் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஆபாச வரிகள் என்று ஒற்றை வரியில் தான் சொல்ல முடியும். அதன் விளைவுகளை நாம் தான் அனுபவித்து வருகிறோம்!!

பள்ளியில் காதல்!!

காதல் செய்யாவிட்டால் ஏதோ அசாதாரண பிறவியாகவே நினைக்க தோன்றும் வகையில் நமது பிள்ளைகள் இன்று அலைகின்றனர். இதற்கு முழு முதல் காரணம் வைரமுத்து போன்ற தரங் கெட்ட எழுத்தாளர்கள் தான். கலைஞருக்கு இவர் செய்த சில பல வேலைகளால், திரையுலகின் பிரபலமும், பல தேசிய விருதுகளும் பெற்றார் என்பதே உண்மை!!

அறிஞர் அண்ணா துரையின் கடமை, கண்ணியம், கட்டுபாடு போன்றவற்றை பற்றிக் கூட இவரது பாடல்கள் பேசவில்லை. எல்லாமே இவரது எண்ணங்களைப் போல காதலும் காமமும் தான்!!

தொழில்துறை முதலீடு கூட பெண்கள் விடுதி தான்!!!

வைரமுத்து தன்னை கவிசக்ரவர்த்தி என்று கூட கூறிக் கொள்ளட்டும். ஆனால் அவரை உண்மையில் கவிஞராக நேசித்த, அவரது தமிழ் நடையழகை நேசித்த தமிழக மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு தான் நமது பிள்ளைகளை தவறான பாதைக்கு செல்ல அடித்தளமிட்டுள்ளது.

கர்மா என்பது தானாக வந்து வினை செய்யாது. ஆனால் செய்த வினைக்கு எதிர்வினையாற்ற தவறாது.

ஆமாம்!! வைரமுத்து அவர்களே!!

உனது இடை ஒரு உடுக்கை!! உனது நெஞ்சம் எனது படுக்கை என்று பாட வாய்ப்பு கேட்ட வந்த ஒரு மாணவிக்கு நீர் எழுதிய காம வசனங்கள் இன்று சந்தி சிரிக்கின்றன.

உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்த இந்த இளைய தலைமுறையினரும் உங்களை பார்த்து திருந்தட்டும். இனியாவது திரைதுறையினர் தங்கள் படங்களில் தரமான, கருத்துள்ள பாடல்களை இடம் பெற செய்ய இந்த ‘‘மீடூ’’ விவகாரம் ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்..

காலம் பதில் சொல்லி விட்டது…. ஆண்டாளும் சின்மயி ரூபத்தில் வந்தே விட்டாள்!!

                                                                                           பிரியமுடன்
                                                                                    பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 26 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *