சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் திருநாள் உலகெங்கும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்று ஏசு பிறக்கவில்லை என்றே போப் பெனடிக்ட் தனது அண்மை புத்தகத்தில் கூட எழுதியுள்ளார்.
போப் மட்டும் அல்ல இன்னும் பல ஆய்வாளர்கள், மத தலைவர்கள், ஏசு கிறிஸ்து டிசம்பர் மாதமே பிறக்கவில்லை. செப்டம்பர் மாதம் தான் பிறந்திருக்க வாய்பிருக்கிறது என்று கூறியுள்ளனர். ஏனென்றால் ஏசுவினைப் பற்றி எழுதிய மேத்யூ மற்றும் லுயுக் என்பவர்கள் ஏசுவின் பிறப்பு மற்றும் இளமையை பற்றி எதுவுமே எழுதவில்லையாம். அவரைப் பற்றிய குறிப்புகளை 30 வயதிற்கு மேல் தான் எழுதி உள்ளனராம்.

பைபிளை எடுத்துக் கொண்டால் ஏசு இறந்த 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு பின்னரே எழுதப்பட்டது என்றும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையெல்லாம் ஏன் கூறுகின்றேன் என்றால் மற்ற ஒரு மதத்தை பற்றி தவறாகவோ வேறொரு தெய்வத்தை நிந்தித்தோ எழுதுவது நமது வழக்கமல்ல… நமது கொள்கையும் அல்ல. நமது தர்மத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்வது மட்டுமே உண்மையான தர்மம்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 அகில உலக கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் பெண்களின் மீதான வன்கொடுமைகளைப் பற்றிய ஆய்வு கட்டுரைகள் என்ற போர்வையில் 38 தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுத சொல்லி உள்ளனர். உதாரணமாக ராமாயணத்தில் சூர்ப்பனைகக்கு நேர்ந்த வன்கொடுமை, சிலப்பதிகாரத்தில் பரத்தையர் பற்றிய அவதூறு… இப்படித்தான் போகிறது கருத்தரங்கின் 38 ஆய்வு கட்டுரை தலைப்புகளும்.

இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று வெள்ளந்தியாக கேள்வி கேட்டு பயனில்லை!! இவர்கள் இத்தகைய எதிர் மறை எண்ணங்களை இளைஞர்களிடையே விதைத்து, அதனை ஆவணப்படுத்துகின்றனர். எதாவது ஒரு உளறல் ஆய்வுக்கட்டுரையை!! எடுத்து வருங்காலத்தில் ஒரு நாளில் ‘‘ஆண்டாளை பற்றிய காம பேரரசு வைரமுத்துவை போல இன்னும் ஒருவர் பேசலாம்!! அதனை வெளியிட தினமணி போன்ற பத்திரிகைகள் தயாராக இருக்கும் அல்லவா?? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

கோடி நன்றிகள் நமது பாஜக மூத்த தலைவர் திரு.எச். ராஜா அவர்களுக்கு. தர்ம போராளி அவரின் மறுப்பால், இந்த கருத்தரங்கை திருச்சி ஜோசப் கல்லூரி தள்ளி வைத்துள்ளதாம். அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் அவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் இந்த கல்லூரிக்கு எத்தனை குறுகிய சிந்தனை இருந்தால் இப்படி ஒரு படுபாதகமான செயலை செய்திருக்கும்!!!
அவர்கள் கூற்றுப்படியே தள்ளி வைத்துள்ள கருத்தரங்கத்தை மீண்டும் நடத்தும் போது, ஏசு எப்போது பிறந்தார், எங்கு வளர்ந்தார் என்று ஆய்வு நடத்தட்டும்.

உண்மையில் டிசம்பர் 25ம் நாள் ஏசு பிறந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ரோமானியரின் சூரிய கடவுள் ‘‘ஹோரஸ்’’ அன்று தான் பிறந்தார். டிசம்பர் 17 முதல் 23 முடிய சாட்டர்னலியா எனும் விழா கொண்டாடப்பட்டு வந்தது போன்ற பல உண்மைகள் தெரிய வரும்.

இப்போதும் ரோம் நகரில் உள்ள ‘‘தேசிய சர்ச்’’ என்பது சூரிய கடவுள் ஹோரஸின் கோயில் தான். அங்கு தான் கோயிலின் கோபுரத்தை உடைத்து, சிலுவையை நட்டுள்ளனர்.

விநாஸ காலே விபரீத புத்தி என்பது போல, பிணராயி விஜயனின் செயல்பாடுகளை பற்றி என்ன சொல்ல? கம்யூனிஸ் கட்சியின் கடைசி செங்கல்லை அவரே உடைத்து சுக்கு நூறாக்கியுள்ளார்.

கலியுக கடவுள் ஐயப்பன் இந்த திருவிளையாடல் மூலமாக தமிழக இந்துக்களை ஒன்றிணைக்கும் திரு காரியத்தை துவக்கி வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது.

‘இந்து விரோத’ அரசை நாம் தொடர்ந்து ஆதரித்து வந்தால் நமது கோயில்களுக்கும், நமது நம்பிக்கைகளுக்கும் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதை ‘சபரிமலை’ நிகழ்வு தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது. மேலும் இந்த தெளிவு அடிமட்ட இந்துக்களுக்கு நெத்தியடியாக சென்று சேர்ந்திருக்கிறது என்பதே சிறப்பு.

இந்து மத தலைவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி, மக்களிடம் நல்ல செய்தியை சொல்ல வேண்டும்.

தர்ம போராளி!! நமது கோயில்களை காக்க புறப்பட்டுள்ள சூறாவளி தலைவர் திரு. எச். ராஜாவின் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு, வெற்றி பெறச் செய்வோம். கோயில்கள் மட்டுமே நமது சொத்து. கோயில்களை மீட்டெடுத்து இந்து மதம் காப்போம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 3 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *