சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

அன்பினால் வீழ்ந்து விட்டாய்… அறத்தினால் வீழ்ந்து விட்டாய் என்று இரண்டாம் உலக போரில் பெல்ஜீயம் வீழ்ந்த போது பாரதி மனம் துன்புற்று பாடினாராம். பாரத பிரதமர் மோடி, பாரத தாயின் தவபுதல்வனாக நாட்டின் தலைமகனாக அனைவருக்கும் வளம் அனைவருக்கும் முன்னேற்றம் எனும் பாதையில் மட்டுமே இந்தியாவை எடுத்து செல்ல திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி, அயராது உழைத்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளார்.

5 மாநில தேர்தல்களில் தோல்வியை கண்ட பாஜக இன்று தெளிவு பெற்று இருக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை நம்பி, சிறு தொகையினை பெற்று கொண்டு ஒட்டு போடும் இந்த ஏமாளி கூட்டத்தை எப்படி சரிகட்டி, வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வது என்பதை திட்டமிட, இந்த கலிகால தர்மங்களை பின்பற்ற மோடி அரசு தீவீரம் காட்ட வேண்டும்.

குள்ளநரி கூட்டத்திடம் தெளிவு இருக்கிறது. உலகெங்கும் பெருந்தலைவராக போற்றப்படும் பிரதமர் மோடியினை, அரசு செலவில் ஊர் சுற்றுபவராக ஏழைக்கு எதிரானவராக, அதானி அம்பானியின் அந்தரங்க தோழராக, அந்நிய மத மக்களை வெறுப்பவராக, ஊழல் புரிந்தவராக, மக்கள் வரி பணத்தை வீணடிப்பவராக என பல விதங்களில் மக்கள் மனதில் தொடர்ந்து எதிர் மறை எண்ணங்களை விதைத்து வருகிறது.

ஊடகங்கள் அவர்களுடையது என்பதும், சுதந்திரமாக இருக்கும் ஒரிரு ஊடகங்களை பண வலையில் வீழ்த்தியும் மக்களை வளைத்துள்ளது.

அறிவு ஜீவிகள் என்றாலே இடது சாரி என்றே அர்த்தம் எனும் வகையில், மீடியாக்கள் அவர்களின் ராஜ்யம் ஆகி போனது. வியப்பு ஏதும் இல்லை ஏன் என்றால் இடது சாரி என்ற போர்வையில் மிஷினரிகளின் கள்ள பணம் விளையாடுகிறது. பணம் பத்தும் செய்யும் தானே???

இந்த ஊடகங்கள் தூவும் விஷ கருத்துகளுக்கு மறுப்பு சொல்லவும், எதிர்க்கவும், நம்மிடம் போதுமான மீடியா கட்டுமான வசதி இல்லை என்பதும் ஒரு காரணம். மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது மனதிற்கு தெரியும் எனும் திரேதா யுக எண்ணம்!! நிச்சயம் மாற வேண்டும்.

அஜ்மீர் நாட்டு மன்னன் பிரித்விராஜ் சௌஹானின் நாட்டை மொகலாய மன்னன் முகம்மது கோரி தாக்கினான். போரில் தோற்ற முகம்மது கோரியை கொல்லாமல் மன்னித்து விட்டார் அரசர். நடந்தது என்ன??

மீண்டும் வந்த முகம்மது கோரி சூழ்ச்சியால் பிரித்விவிராஜ் சௌஹகானை சிறை பிடித்து, முதலில் கண்ணை தோண்டி எடுத்தான். அன்று வீழந்தது பாரதம்.

700 வருடங்கள் பாரதம் இந்த கொடும் பாவிகளிடம் சிக்கி தவித்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வாள்முனை மதமாற்றம் என பேயாட்சியில் வளங்களை தொலைத்து, சுமார் 1000 வருடங்கள் அடிமை வலையில் சிக்கியது.

மீண்டும் நம் பாரதம் சிக்கி விட கூடாது! பாரத மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். 70 வருட சுதந்திரத்திற்கு பிறகு 2014ம் ஆண்டில் இந்தியாவின் நிலை என்ன?? காங்கிரஸ் கட்சி செய்தது என்ன??

இந்தியா, ‘‘ஊழல் தலைநகரம்’’ என்று அழைக்கப்பட்டது.

5 கோடி ஏழைப் பெண்கள் எல்பிஜி எரிவாயு இல்லாமல் சிரமப்பட்டனர்

8.6 கோடி ஏழை மக்களுக்கு கழிவறைகளை அணுகுவசதி இல்லை.

32 கோடி மக்களுக்கு வங்கி சேவைகளை பெற வசதியில்லை.

19 கோடி மக்களுக்கு காப்பீடு (ஆயுள் & விபத்து) பெற வசதியில்லை.

15 கோடி ஏழை விவசாயிகளுக்கு அவர்களுடைய விவசாய நிலத்தின் மண் வளம் தெரியாது.

* 10 கோடி ஏழை விவசாயிகள் பயிர் காப்பீடு பெற முடியவில்லை.

35% விவசாயிகளுக்கு மட்டுமே யூரியா கிடைக்கப்பெற்றது.

18,600க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் வசதிகள் இல்லை.

1,76,00கிமீ தூரத்திற்கு கிராம சாலைகள் இல்லை.

ஏழை மக்களுக்கான அரசு மானியப் பணம் ரூபாய் 90,000 கோடி சூறையாடப்பட்டது.

24 லட்சம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் 6 லட்சம் போர் விதவைகளுக்கு ஒரு பதவிக்கு ஒரு ஒய்வூதியம் கிடைக்கப்பெறவில்லை.

1.7 லட்சம் ஒய்வூதியதார்கள் ஒய்வூதிய பணம் பெறுவதற்கு அலுவலகத்திற்கு முயடிவில்லை.

13,5 கோடி மக்களுக்கு திறமை இருந்தபோதிலும், சிறுதொழில் தொடங்குவதற்கு முடியவில்லை.

1.2 கோடி கர்ப்பிணி பெண்களுக்கு உரிய உடல்நல சிகிச்சை கிடைக்கவில்லை.

பொதுமக்கள், தங்களது உடல் நல சிகிச்சைக்காக செய்யும் செலவாக அதிக சுமையால் அவதியுறுகின்றனர். ஒவ்வோராண்டும் இச்சுமையானது 16,000 கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது.

ஒவ்வோராண்டும் தனி இரயில்வே பட்ஜெட் காரணமாக ரூ. 10,000 கோடி பணம் வீணடிக்கப்பட்டது.
பொதுமக்களால் அரசுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

3 லட்சம் போலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சி வேகத்தை 2013ம் ஆண்டு வேகத்தைக் கொண்டு நாம் கணக்கிடுவோமானால் இந்தியா மேற்கண்ட இலக்குகளை எய்தி முடிப்பதற்கு மேலும் 40 ஆண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நம் நாட்டிற்கு 2014 மே மாதத்தில் ஒரு நேர்மையான பிரதமர் திரு. நரேந்திரமோடி கிடைத்ததால் இந்தியா வேகமாக முன்னேறியது.

2014ம் ஆண்டு மே மாதம் பாரத பிரதமர் மோடியின் தலைமையில் இந்த இலக்குகளை 48 மாதங்களில் முடிக்க முடிந்தது.

இது தர்ம யுத்தம் அல்ல.. தர்மத்திற்கான யுத்தம்! நாம் ஒவ்வொருவரும் காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்களுக்கு செய்த பாதகங்களை, உருக்குலைத்த ஜனநாயக தூண்களை மக்கள் மன்றத்தில் உரக்க சொல்வோம்.

(Visited 16 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *