சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வெறும் கமிஷனுக்காகவே காங்கிரஸ் எதிர்க்கிறது.
ஏன் பாரத பிரதமர் மோடி மேன் இன் இந்தியா திட்டத்தை வெற்றியாக்க துடிக்கிறார்! மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி அடைந்தால் மட்டுமே அந்நிய செலாவணியாக நாம் வருடம் அள்ளி கொடுக்கும் கோடிக்கணக்கான டாலர்கள் மிச்சமாகும். இந்தியாவின் வளம் பெருகும்.
இன்று உலகில் அதிக லாபம் கொடுக்கும் தொழில் இரண்டுதான். ஒன்று போதை மருந்து கடத்தல். ஆஃப்கானில் ஒரு கிலோ நான்காயிரத்து கிடைக்கும். அபின் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஒன்றே கால் கோடி வரை விலை போகிறது.
அடுத்ததாக லாபம் தரக்கூடியது ஆயுத வியாபாரம் தான்.
இந்திய மதிப்பில் ரஷ்யாவின் காலிஷ்நிகோவ் துப்பாக்கி 90,000 ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை. இதைதான் நாம் வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில் குடிசை தொழிலாகவே, அச்சு பிசகாமல் இந்த ஏகே47 துப்பாக்கிகளை உரிமம் இல்லாமல் 3000க்கு விற்கிறார்கள்.
இந்திய இறக்குமதியில் முக்கிய பங்கு வகிப்பது எலக்டரானிக்ஸ் மற்றும் மொபைகள்தான். கடந்த ஆண்டு மட்டும் 57.8 பில்லியன் டாலர்களுக்கு நாம் இந்த பொருட்களை வாங்கியுள்ளோம்.
நூறு செயற்கைகோள்களை இந்தியாவின் ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் ஏவுகின்றோம் என்று ஒரு பக்கம் பெருமை பேசுகின்றோம்.
மறுபக்கம் மொபைல் சார்ஜர், பவர் கார்ட், பவுச், என பத்து ரூபாய் பொருளை கூட இங்கு உற்பத்தி செய்ய துப்பில்லாமல் இறக்குமதி செய்யும் அவலம்.
இந்த கேவலங்களை மாற்றத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது.
நமது சொந்த நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதால் அரசுக்கு தேவையான பொருட்கள் நியாயமான விலையிலேயே கிடைக்கும். வருடத்திற்கு அறுபதாயிரம் கோடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதே பொருட்கள் குறைந்த பட்சம் பாதி அளவு விலையிலேயே கிடைக்கும். அரசுக்கும் இதனால் முப்பதாயிரம் கோடி லாபம். அறுபதாயிரம் கோடி அன்னிய செலாவணி மிச்சம்.
அதே போல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்தால் 3,75,000 கோடி அன்னிய செலாவணி மிச்சம்.
பாதுகாப்பு தளவாடங்கள், எலக்ட்ரானிக்ஸ் இந்த இரண்டு துறைகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுமையான உற்பத்தி செய்தாலே வருடத்திற்கு நான்கு லட்சம் கோடிகள் அளவிற்கு அன்னிய செலாவணி சேமிக்கப்படும்.
இதற்கு மேல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் படு வேகத்தில் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இளைஞர்கள் தொழில் தொடங்க தாராளமாக கடன் உதவி வழங்கப்பட்டு, தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அதிக பட்சம் இரண்டே வாரத்திற்குள் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற்று ஏற்றுமதியும் ஆகும் பட்சத்தில் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு சல்யூட் அடிக்கும் நிலை கண்டிப்பாக வரும்.
உலகிலேயே அதிக ஆயுத இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் 12% இந்தியா.
பெரும் லாபம் கொடுக்கக் கூடிய ஆயுத ஏற்றுமதி ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு பகுதி.
மேக் இன் இந்தியா வெற்றி பெற்றால் ஆயுத உற்பத்தியிலும், விற்பனையிலும். ஈடுபடும் நாடுகளுக்கு நஷ்டம்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பகுதி இறக்குமதி சீனாவிலிருந்தே வருகிறது. மேக் இன் இந்தியாவில் இங்கே உற்பத்தி செய்தால் சீனாவும் தெருவிற்கு வந்து விடும். அதனால் கம்யூனிஸ்டுகள் தங்கள் சீன எஜமானுக்காக ஒப்பாரி வைத்து எதிர்க்கின்றனர்.
மேக் இன் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெறும். அது வரை கதறல்களும், கூச்சல்களும் இருக்கத்தான் செய்யும்.
ஒன்றுபட்ட இந்தியா வளமான இந்தியா என்று முன்னேறுவோம்!

                                                                                                                                     பிரியமுடன்
                                                                                                                          பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 9 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *