சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

நமது புத்தாண்டு களை கட்டி விட்டது. ரஜினி அரசியலுக்கு வந்தே விட்டார். கழகங்கள் ஆடி போய் உள்ளன. மாற்று கட்சிகள் ஏலத்திற்கு போய்விட்டன. தேசிய கட்சியான காங்கிரஸ் 70 ஆண்டுகளாக தாங்கள் ஒரங்கட்டி வைத்திருந்த ‘‘இந்து ஒட்டு வங்கியை’’ திரும்பி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தேசிய கட்சியான பாஜகவின் பிரதமர் மோடியை பற்றி தெரியாத ஒரு தமிழர் இல்லை என அடித்து கூறலாம். அந்தளவு நமது தமிழக அரசியல் வாதிகள் பிரதமர் மோடி மேல் குற்றங்களை அள்ளி வீசி அலசி வருகிறார்கள்.
இந்த முக்கியமான தருணத்தில் தமிழர்களாகிய நாம் நமது புத்தாண்டு தீர்மானங்களை தீர்க்கமான யோசனைகள் செய்தே செயல்படுத்த வேண்டும். தீர்மானங்கள் என்னவாக இருக்கலாம்???

2017ம் ஆண்டு ஒரு போராட்ட ஆண்டாகவே இருந்தது. திடீர் போராளிகள் உருவானார்கள். இல்லை உருவாக்கப்பட்டார்கள். இந்த போராட்டங்கள் பெரும்பாலும் பிரதமர் மோடியினை வீழ்த்தவே நடந்தது என்பதே உண்மை. எனவே அரசியல் தொண்டர்களே! மாணவச் செல்வங்களே!! போராட கிளம்பும் முன், சிந்தித்து செயல்படுங்கள்.

தொண்டு நிறுவனங்களின் கட்டுக்கடங்காத அந்நிய நிதியை தட்டிக் கேட்டதால் பிரதமர் மோடி 2019ம் ஆண்டு மீண்டும் வந்து விடக் கூடாது என்று அந்நிய மத அமைப்புகள் அப்பாவி மக்களை கொம்பு சீவி விடுகின்றன.
எல்லா இந்தியருக்கும் ஒரே சட்டம் என வந்து விட்டால், ரத்தமின்றி, சண்டையின்றி இன்னும் நூறு ஆண்டுகளில் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கி விடலாம் எனும் ஒரு ‘‘கனவுலகில்’’ வாழ்ந்து வந்த சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு முத்தலாக் முறையை ஒழித்து கட்டி விட்ட பிரதமர் மோடியை மீண்டும் வர விட கூடாது என்பதே ஒரே தீர்வு.

இந்த அடிப்படைவாத கொள்கைகளை புரிந்து கொள்வது தான் 2018ம் ஆண்டின் முதல் தீர்மானமாக, தமிழர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை புரிந்து கொண்டு எதிர்ப்பவர்களை தான், இந்த ‘புது போராளிகள்’ இந்து தீவீரவாதிகள்’ என்று பச்சை குத்துகிறார்கள் என்ற உண்மை புரிய வேண்டும்.

2019ல் தேர்தல் வர உள்ளது. 2018ம் ஆண்டு கூட வர கூடும். அதனால் அன்பர்களே… தேர்தல் என்பது எதற்காக எனும் அடிப்படை தகவலை அறிய முயற்சிக்கவும். உங்கள் வாக்கு உங்களது ஜனநாயக உரிமை. அதனை அற்ப காசுக்கு விற்று விட்டால், மீண்டும் நீங்கள் குடிசைக்குள் தான் முடங்க வேண்டும் என்பதை கடந்த 50 வருடங்களாக கண் கூடாக பார்த்து விட்டீர்கள்.
சுத்தமான நீர், தரமான சாலைகள், சிறப்பான அரசு பள்ளிகள், தரமான அரசு மருத்துவமனைகள், தொழில் தொடங்க உதவி, வேலை வாய்ப்பு. மின்சாரம், சுகாதாரம் என இவை தான் உண்மையில் உங்களது தேவைகள்.
ஒரு பிளேட் பிரியாணி, ஒரு குவார்ட்டர், 500 ரூபா என்பது எவ்வளவு ஒரு அற்பத் தொகை என்று யோசியுங்கள். இப்போது பத்தாயிரம் ரூபாய் என்று பேசப்படுகிறது. அதுவும் அற்பம் தான் அன்பர்களே!!! 5 வருடங்களில் தாங்கள் செலவழித்த இந்த கோடிகளை உங்களிடம் தான் வசூலிக்க போகிறார்கள்…. ஜாக்கிரதை!!

தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரின் ஒட்டுக்காக தான் இத்தனை காலம் கஞ்சிகுடித்தும், கிறிஸ்துமஸ் தாத்தா குல்லா போட்டும் வந்தன.
அது மட்டுமல்லாமல் இந்துக்களின் மனம் நோக இந்து கடவுள்களின் மேல் சாக்கடையை அள்ளி வீசின. ஆனாலும் நமது இந்து சொந்தங்கள், தங்களின் மேல் தெறித்த சாக்கடையை பன்னீராக தெளித்துக் கொண்டு இந்த தீய சக்திகளிடம் மயங்கி நிற்கின்றன.
சிறுபான்மையினரின் ஒட்டுக்கள் சிதறாமல் ஒரே கட்சிக்கு போடச் சொல்லும் அதிகாரமும், அந்த மக்களிடையே ஒற்றுமை கொண்டு வர அவர்களது வழிபாட்டு தலங்கள் செய்கின்றன.
ஆனால் நமது தமிழன திராவிட அரசு, இந்துக்களின் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து, இந்துக்களை அந்நிய பணத்திற்கு கையேந்தி நிற்கும் பரதேசிகளாக்கி குளிர் காய்கிறது.
இந்துக்களின் ஒற்றுமையை ஜாதி, மொழி, பிரிவினை வாதம், கம்யூனிஸம், மதமாற்றம் என்று குலைத்து விட்டால் தான் இவர்களது அரசியல் வெற்றி சாத்தியம்.
இந்த புது போராளிகளின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு இந்த கயவர் கூட்டத்தை ஒதுக்கி தள்ளி, தமிழ் நாட்டின் வளம், வளர்ச்சி, அமைதி என்பதற்காக போராடும் கட்சிக்கு மட்டுமே நமது ஆதரவை தருவோம் என்று தீர்மானிப்போம்!!
2018ம் ஆண்டின் சுதேசி தீர்மானம் நீங்கள் அனைவரும் அறிந்தது தான் அன்பர்களே!!
இந்த கழகங்களிடம் சிக்கி, கொள்ளையடிக்கபடும் நமது கோயில்களை மீட்போம். இதற்கான தீவீர முயற்சியில் இறங்குவோம் என்பதே எங்கள் தீர்மானம்.

வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

பிரியமுடன்
 பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 5 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *