சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

விடியலுக்கான அறிகுறிகள் தோன்றிவிட்டன என்பதை பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாட்டின் விடியலை பற்றித் தான் கூறுகிறேன். வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்துக்களிடையே ஒரு எழுச்சி உண்டாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்துக்களின் இந்த சிறு எழுச்சி கூட இந்த தீய சக்திகளுக்கு பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று அலை மோதுகின்றனர். அதில் வந்தது தான் ‘தமிழ் தேசிய கீதத்திற்கு’ சங்கர மடத்தின் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வில்லை என்ற கண்டனம்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல, பால பெரியவாளை பற்றி கூறிய அபாண்டத்தை போக்க, ‘‘மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை’’ எழுதி நாம் பாடி வரும் ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’ பாடலின், முழு விவரங்கள் தெரிய வந்துள்ளன. மடமை நிரம்பிய கருத்துகள் கொண்ட வரிகளை தமிழக அரசு நீக்கி விட்டுத் தான், கடவுள் வாழ்த்துக்கு பதிலாக இதனை பாடச் சொல்லி 1970ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதும் தமிழர்களுக்கு இப்போது தான் தெரிந்துள்ளது.
ஆண்டாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த தீய சக்திகள் முனைந்தன. ஆனால் அதுவும் தீய சக்திகளுக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
நினைத்து பார்க்கிறேன். கருணாநிதி மட்டும் இப்போது நன்றாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். ‘‘நீங்கள் தெய்வமாக ஆண்டாளை பார்க்கிறீர்கள். நான் தமிழ் தாயாகவே பார்க்கிறேன். என் உயிரினை விட மேலான என் தமிழ் தாயின் கால்களில் விழ என்ன தயக்கம்’’ என்று ஒரு கபட நாடகம் நடத்தி இந்துக்களின் மூளையை மழங்கடித்து அடுத்த தேர்தலுக்கான ஒட்டுக்களை குவித்து, அரியணையில் அமர்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பார்.
தெய்வம் நின்று கொல்லும். இன்று திமுக டொபாசிட் இழந்து நிற்பதையல்லவா பார்த்து கொண்டிருக்கிறார்.. கட்டுண்டு!!
அமெரிக்காவின் ‘இண்டியானா பல்கலைகழகத்தின்’ ஆராய்ச்சி கட்டுரையில் நான் படித்தது என்று வைரமுத்துவின் வைர வரிகள் எனக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
இண்டியானா பல்கலை கழகம் இந்த ஆராய்ச்சி கட்டுரையை நாங்கள் பிரசுரிக்கவேயில்லை என்று மறுத்துள்ளது. அந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர்களும் மறுத்துள்ளனர் என்ற போதிலும் 300 ஆண்டு காலமாக இந்த மேலை நாடுகள், நமது இந்து மதத்தினை குறித்து ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர்.
சனாதன தர்மத்தின் ஆணி வேறாக இருப்பது வேதங்கள் என்பதால் சமஸ்கிருதம் படிக்க கூடாது என்றனர். வேதங்களை ஆராய்ச்சி செய்கிறேன் என்று விஷமத்தனமாக திரித்து கூறினர். சமஸ்கிருதம் தெரியாதவர்கள் நமது ஆன்மீகத்தை நுகராதவர்கள் தொன்மையான நமது கலாச்சாரத்தை விகாரப்படுத்தி மக்கள் மனதில் குழப்பதை ஏற்படுத்த முனைகிறார்கள்.
ஆட்சி பிடிக்க அலைந்த திராவிட கட்சியினர் மூலமாகவே இந்த நச்சு விதை தமிழகத்தில் வேரூன்றியது.
அன்பில் வீழ்ந்து விட்டாய்…
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்…
என்று உலகபோரில் தோல்வியடைந்த பெல்ஜியம் நாட்டைப் பற்றி பாரதி வருந்தி பாடியுள்ளார். அநாதியான நமது சனாதன தர்மம் பல ஆறுகள், கடலை அடைவது போலவே பலவித நம்பிக்கைகள் மூலமாக நாம் அந்த ஒரே பரம்பொருளை அடைகிறோம் என்ற உன்னத கோட்பாட்டை முன்னிறுத்துகிறது.
எல்லா மதங்களும், அந்த தெய்வங்களும் போற்றுதலுக்குரியவை என்றே சொல்லி தர்மம் காக்கிறது. ஆனால் நமது இந்து தர்மத்தின் பெருந்தன்மையினை பயன்படுத்தி நமது தர்மத்தினை அழிக்கும் நாசவேலை நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நாம் கண்களை மூடிக்கொண்டிருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம். நமது பாரத தாய்க்கு செய்யும் மாபெரும் துரோகமே ஆகும்.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்திதையும் ‘‘பேகன்’’ அதாவது காட்டுமிராண்டி தனமானது என்று இழிவுப்படுத்தி, மதகுருமார்களை கேவலப்படுத்தி அந்த மக்களை அடிமைப்படுத்தும் இந்த கூட்டம் பிறமத புராணங்களை ‘‘மாயாஜால கதைகள்’’ என்றே குறிப்பிடும். அப்படியென்றால் ஏசு பிறப்பு சான்றிதழ் இவர்களிடம் இருக்கிறதா? குறைந்த பட்சம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இன்று நாம் புதிதாக பிறப்போம். நாமும் இனி ஆராய்ச்சி செய்வோமே!! டிசம்பர் 25ம் தேதி எகிப்தின் சூரிய கடவுளான ஹோரஸ் பிறந்தார். ஏசுவும் அப்போது தான் பிறந்தாரா? ஆதாரங்கள் எங்கே?? ஏசு இறந்த பல வருடங்கள் கழித்து தான் பைபிள் இயற்றப்பட்டதா? ஏசு அராமிக் மொழி பேசினார். ஆனால் பல வருடங்கள் கழித்து 1000 மைல்களுக்கு அப்பால் ஹீப்ரு மொழியில் தான் பைபிள் முதலில் எழுதப்பட்டுள்ளது என சில குறிப்புகள் கூறுகிறது. ஆராய்ச்சிகள் நாமும் செய்வோம்.
ஆங்கிலம் பலரும் அறிவோம். இணையதளத்தினை பார்த்தாலே போதும். ஆயிரம் ஆராய்ச்சிகள் தயார்…
50 வருடங்களாக தன்மானமின்றி, எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து, அவமானம் அடைந்தது போதும் அன்பர்களே!! ஏன் உலகம் முழுவதும் இந்து மதத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்ய வேண்டும் தவறாக விஷமத்தனமாக திரித்து கூறி இந்துக்களை பிரித்தாள நாம் இடம் கொடுக்க வேண்டும்??
மதம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தானே! ஒரு மதத்தினர் வழிபடும் கடவுளை நிந்தனை செய்வது நமது நோக்கமல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகளாக பொறுத்திருந்தும் இவர்கள் திருந்துவதாக இல்லை. முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்.
ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?? தர்மத்தை நிலைநாட்ட நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எதிரி வாளோடு பாயும் போது நாம் அமைதி வேண்டுவது எப்படி நமது தர்மத்தை காப்பாற்றும்.
திராவிட கண்மணிகள், பகுத்தறிவு பேசுபவர்கள், அந்நிய மத வியாபாரிகள் கம்யுனிஸ்டுகள், பிரிவினைவாதிகள் ஊடக வியாபாரிகள் என பல முனைகளில் இருந்து நமது சனாதன தர்மத்தை, சதி வலையில் வீழ்த்த பார்க்கும் இத்தருணத்தில்…
சகோதர சகோதரிகளே… விழித்துக் கொண்டு ஒன்றுபடுவோம். அவர்களது போர்களத்தில் அவர்களை சந்திப்போம். நாமும் இனி ஆராய்ச்சி செய்வோம்!!! வீழ்த்துவோம் தீய சக்திகளை!!

பிரியமுடன்
 பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 12 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *