சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

ஐந்தாம் ஆண்டில் ராஜநடையெடுத்து வைக்கும் பிரதமர் மோடி, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
காங்கிரஸ் ஆட்சியில்.ஜல்லிகட்டு நடத்த தடை என்று சொன்னோம் -மோடி பிரதமரானபின்

ஜல்லிகட்டு இந்து கலாசாரமுனு சொல்லி பீட்டாவை விரட்டி நிரந்தர சட்டமாக்கினார்.

திமுக கையெழுத்து போட்ட மீத்தேன் திட்டம் தஞ்சையை பாலைவனமாக்கும் என்று சொன்னோம் – மோடி பிரதமரான பின் மீத்தேன் திட்டத்தை இந்தியாவில் எங்கும் எடுக்க கூடாதென்று தடை விதித்தார்.

காங்கிரஸ் அமைத்த நெடுவாசல் ஹைட்ரோகார்பன் இயற்கையை அழிக்கும் என்று சொன்னோம்-

மோடி பிரதமரான பின் நெடுவாசலுக்கு சொர்க்கவாசல் திறந்தார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று சொன்னோம்.

உச்சநீதிமன்றத்தின் வாயிலாக மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டார்.

ஆனால் மோடியிடம் நாம் கேட்காதபோதும், அவரே சொன்னார்…

தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதல்மொழி என்றார்.

அனைவரும் கற்க வேண்டும் என்றார்.

தமிழனே உலகின் நீர்மேலாண்மை திட்டத்திற்கு முன்னோடி என்றார்.

சுற்றுலா செல்வதாக இருந்தால் புதுக்கோட்டை, ராமநாதபுரம் சென்று கோவில் கல்வெட்டை பாருங்கள் என்றார்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றதனைத் தூறும் அறிவு’’
என்று வள்ளுவத்தை பேசி தமிழனை புத்திசாலியாக இருக்க சொன்னார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடதிட்டமாக்கினார்.

பாரதியாரின் கவிதைகளை பாடதிட்டமாக்கினார்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயரால் கப்பற்படை தளத்தை அமைத்தார்.

தமிழகத்தில் ராணுவதளவாட பொருட்களை உற்பத்தி செய்யவே வழிவகுத்தார்.

38,000 தமிழர்களுக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பளித்தார்.

முத்ரா கடனுதவி திட்டத்தில் தமிழகமே முதலிடம்.

புகையில்லாத வீடு அமைக்க இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தில் தமிழகம் இரண்டாவது இடம்.

அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தில் தமிழகம் நான்காவது இடம்.

உஜாலா திட்டத்தின் மூலம் எல்ஈடி பல்பு பயன்பாட்டில் தமிழகம் ஏழாவது இடம்.

தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம். மாநகராட்சி வரிசையில் திருச்சி நான்காவது இடம்.

பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் தமிழகம் ஐந்தாவது இடம். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை முற்றிலும் குறைந்துவிட்டது பெரும்சாதனை.

பிரதம மந்திரி இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் தமிழகம் முதலிடம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு இலவச மருத்துவசிகிச்சை.

பாரதிய மக்கள் மருந்தகம் மூலமாக மிகமிகமிக குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்பனை.

ஆதார் எண்ணை ரேசன் கார்டில் இணைத்ததால் தமிழகத்தில் 2.5லட்சம் போலி ரேசன் கார்டு ஒழிப்பு.

மதமாற்றத்தை நடத்தும் 23750 போலி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் ஒழிப்பு.

ஆங்காங்கே நடந்துவந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் முற்றிலும் தவிர்ப்பு.

பெண்களை கற்பழிச்சா உடனடி விசாரணை உடனே தூக்கு தண்டனை.

தலாக் சொல்லி ஏமாற்ற முடியாது. 3வருடம் சிறை தண்டனை.

வேறெந்த பிரதமர்களும் செய்திடாத அரும்பணிகளை தமிழகத்திற்கும், நாட்டிற்கும் செய்துள்ளார் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.

இன்றைக்கு மோடியை பார்த்து உலகநாடுகள் மரியாதை செய்யும் பயப்படும் காலம் வந்துருச்சு.

உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காத ஒரே பாரத பிரதமர் மோடி

கேஸ் மானியம் முறைப்படுத்தியதால் 8000 கோடி மிச்சம்.

2016 ஜனவரியில ஜீணீஹ் நீஷீனீனீவீssவீஷீஸீ படி ஊதிய உயர்வு.

கருப்பு பணப்பரிமாற்றம் அறவே ஒழிப்பு.

இராணுவம் & உள்நாட்டு கட்டமைப்பை முன்னேற்றி விட்டது.

சீனா எல்லையில் போக்குவரத்து சாலையாகவும் போர் வந்தால் ஒரே நேரத்தில் 50 போர் விமானம் இறங்கும் தளமாக வும் அவ்விடம் அமைக்கப்பட்டுள்ளது.

இரானுவ வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஒய்வூதியம்.

அன்பிற்கினிய இந்தியர்களே…
தேடி படியுங்கள் சுயமாக சிந்தியுங்கள்…
உலக அளவில் தன்னிகரற்ற தலைவராக நமது பாரத பிரதமர் மோடி இருக்கிறார்….

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *