சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

உண்மையான தமிழனாக இருந்தால்… இதை ஷேர் செய்யுங்கள். என இப்போது தொடர்ந்து பல நெடிய செய்திகளும் வருகின்றன.
அண்மையில் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கூட, உணர்ச்சி மிக்க உரை ஆற்றியுள்ளார். அதில் ‘‘நாட்டிற்காக உயிரை விட்டவர்கள் உள்ளனர். மதத்திற்காக உயிர் விட்டவர்கள் உள்ளனர். ஆனால் உலகெங்கிலும் தேடி பாருங்கள். மொழிக்காக உயிர் விட்டவன் தமிழன் மட்டுமே’’ என்று அறிவார்ந்த உபதேசம் செய்துள்ளார்.
இப்படித்தான் இலங்கையில் பல நூறு ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த பௌத்த சிங்களர்களுக்கும், இந்து தமிழர்களுக்கும் இடையே ‘மொழி’எனும் பகை மூட்டப்பட்டு , பல லட்சம் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். பல லட்சம் குடும்பங்கள் இன்று அகதிகளாக உலகெங்கும் பரந்துள்ளனர்.
இத்தனைக்கும் இந்தியாவின் ஒரிஸா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் சிங்களர்கள். இந்து மதத்தின் ஒரு கிளை தான் பௌத்தம்.
பின் ஏன் இந்த பகை?? எப்படி யாரால் மூட்டப்பட்டது.
பிரிவினைவாதிகளின் மூலமாக அந்திய மத கைகூலிகளின் கோர தாண்டவம் தான் இலங்கை தமிழர் படுகொலை.
பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் பகையில்லை. ஆனால் பிரிவினைவாத கிறிஸ்துவ மத தலைவர்கள் இருபக்கமும் ஆடி வென்றார்கள்.
எச்சரிக்கை என்னவென்றால் இப்போது தமிழ்நாட்டில் தங்களின் விபரீத விளையாட்டுக்களை தொடங்கியுள்ளனர்.
நீ தமிழன். தமிழ் மொழி தான் உன் அடையாளம். தமிழ் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்றெல்லாம் கூறும் இவர்கள், தமிழ்நாடு ஆன்மீக பூமி. நாயன் மார்களும் ஆழ்வார்களும் வாழ்ந்த பூமி என்பதை கூற மாட்டார்கள்!
இந்து தர்மத்தின் ஆன்மீக தத்துவங்களை தாய் மொழி தமிழில் நமக்கு வடித்து கொடுத்துள்ளனர் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பெரும்பான்மை பிரிவினைவாதிகள் வேற்று மதத்திற்கு விலை போனவர்கள் தாம்.
மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகள் காந்தியின் உண்மை பெயர் டேனியல். செபஸ்டியன் சைமன் எனும் சீமான், ஸ்டீபன் எனும் கூடங்குளம் உதயகுமார், ஸ்டெல்லா எனும் தமிழர் படை வீரலட்சுமி, ஆரோக்கிய தாஸ் எனும் இயக்குநர் கௌதமன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்கள் தமிழ் கடவுள்களை வணங்க மாட்டார்கள். தமிழ் பெயர்களை வைத்து கொள்ள மாட்டார்கள். தமிழ் பண்டிகைகளை கொண்டாட மாட்டார்கள். ஆனால் இவர்கள் தமிழர்கள் என்று நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இவர்களது கடவுள் அந்நிய தேசத்தில். அந்நிய மொழியில்! ஆனால் அதுதான் அவர்களது அடையாளம்! அவர்களது பண்டிகைகளும் அந்நிய மத பண்டிகைகள் தான். ஆனால் நாம் இந்து மதத்தை அடையாளமாக கொண்டுவிட கூடாது என்பதற்காக, ‘தாய்மொழி தமிழ்’ தான் உங்க அடையாளம் என்று நமது இளைய தலைமுறையினரின் மூளையை சலவை செய்யும் இந்த பிரிவினை வாதிகளின் எண்ணம் எல்லாம் ஒன்றுதான்.
இந்து என்ற அடையாளம் தவிர்த்து தமிழன் என்ற அடையாளம் கொண்டால், மதம் மாற்றலாம். பின் தனி நாடு கேட்டு போராட்டம் தொடங்கி மீண்டும் குளிர் காயலாம்.
அந்நிய நிதி குவிய, இங்கு நம் சொந்தங்களின் ரத்தம் ஆறாக ஒட, இன்னொரு ஸ்ரீலங்காவாக தமிழ்நாடு மாறவேண்டும்.
தடுத்து நிறுத்துவோம் இந்த இரக்கமற்ற பிரிவினைவாதிகளை! எங்களது தாய்நாடு இந்தியா எங்களது தாய் மொழி செந்தமிழ். தமிழ் நாடு ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்த ஆன்மீக பூமி!! என்று எடுத்து சொல்லும் அவசர கடமை இப்போது நமக்குள்ளது.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 23 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *