சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

பெரு நாட்டில் ரோடுகளில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளில் இருந்து குடிநீர் வருமாறு செய்துள்ளனர். இந்த தொழில் நுட்ப ‘பில் போர்டுகள்’ காற்றில் உள்ள நீரை உறிஞ்சி மக்களுக்கு கொடுக்க உள்ளது!!! டிராபிக் ராமசாமிக்கு இனி வேலை இருக்காதோ!!!

அர்ஜென்டினாவின் தலை நகரமான புனோஸ் ஏரிஸ் உலகளவில் புத்தக கடைகள் அதிகம் இருப்பதற்கு பெயர் பெற்றது. 2.8 மில்லியன் மக்களுக்கு 734 புத்தக கடைகள் உள்ளது. அடுத்து அதிகப்படியான புத்தக கடைகள் இருப்பது ஹாங்காங்கில் தான்.

தென் கொரியாவில் அதிகப்படியான வேலை பளுவால் மன உளைச்சல் ஏற்பட்டு சிரமப்படுபவர்கள், சிறைச்சாலைகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரிசார்டுகள் எனபடும் சொகுசு விடுதிகளுக்கு செல்வார்களாம்!!! நீல கலர் சீருடையுடன் சின்ன அறையில் இருக்க வேண்டாம். யோகா தியானம் படிப்பு மட்டும் தான். போன், கம்ப்யூட்டர் நோ! நோ!!

இரயில் பயணத்தின் போது இரயிலுக்கு காக்க வேண்டிய சமயத்தில் சிறு கதைகளை பேப்பரில் அச்சிட்டு தானியங்கி மிஷின்களில் வைத்திருப்பார்களாம் பிரான்ஸ் நாட்டில். வேண்டும் என்பவர்கள் காக்க வேண்டிய நேரத்தை பொறுத்து கதையின் நீளத்திற்கு ஏற்ப இலவசமாக பட்டனை தட்டி எடுத்துக் கொள்ளலாமாம். இது மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறதாம்.

இந்த 21ம் நூற்றாண்டிலும் 7000 பேர்கள் லண்டனில் கருப்பு வெள்ளை டிவி பார்க்கிறார்களாம். 1967ம் ஆண்டு கலர் டிவி வந்தும் ஏன் இப்படி!! கருப்பு வெள்ளை டிவி வருட லைசென்ஸ் கட்டணம் 150 பவுண்டு என்பது ஒரு காரணம். மேலும் பழசு தான் வேணும்னு ஒரு பிடிவாதமும் ஒரு காரணமாம்.

(Visited 17 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *