
வியர்வை இயற்கையில் எந்த வித வாசமும் இல்லாதது! நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் கலப்பதால் தான் தான் சில சமயங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
நமது மணிக்கட்டில் இருந்து நடுவிரல் நுனி வரை அளந்து பார்த்து, அதனை பத்தால் பெருக்கினால் உங்கள் உயரம் தெரிந்துவிடும். நமது உடல் முழுக்க இது போல பல சூட்சுமங்கள் உள்ளன.
ஒரு வருடத்தில் உலகெங்கும் 60 பில்லியன் அதாவது 6000 கோடி கோழிகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன.
உலகளவில் மிகவும் பாப்புலர் உணவாக ‘பிட்சா’ உள்ளதாம். உப்பு, சக்கரை, மைதா, கொழுப்பு என ஒருங்கே சேர்ந்திருப்பதால் தான் இதன் சுவை சுண்டி இழுக்கிறதாம்.
380 பில்லியன் பிளாஸ்டிக் பைகளை அமெரிக்கர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் உபயோகப்படுத்துகிறார்களாம்.
உலக அதிசயங்களில் ஒன்றான ‘லீனிங் டவர் ஆப் பிசா’ 1173ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் 200 வருடங்களுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. இரண்டாம் மாடி கட்டுவதற்குள், கீழே இருந்த களிமண்ணால் கட்டிடம் சாய தொடங்கியது. 1990ம் ஆண்டு இத்தாலிய அரசு இந்த சாயந்த கோபுரம்’ விழப்போகிறது என்று பயந்து மூடிவிட்டது. எட்டு வருடங்களுக்கும் மேலாக செப்பனிட்டு, சாய்வு விகிதத்தை குறைத்து, கட்டிட அடித்தளத்தை வலுப்படுத்தி 2001ம் ஆண்டு மீண்டும் திறந்துள்ளனர்.