சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

1963ம் வருடம் பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்காவின் கௌரவ குடிமகனாக அமெரிக்கா அரசு முதல் முறையாக அறிவித்தது. இதனை ஜான் கென்னடி அறிவித்தார்.

 

வெளிபடையாக தற்பெருமை பேசுபவர்களை கூட பொறுத்து கொள்வார்களாம். ஆனால் ரொம்ப பணிவாக பெருமை அடித்துக் கொள்பவர்களை மக்கள் பொறுத்து கொள்ளவே மாட்டார்கள் என ஹார்வாட பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது. நான் ரொம்ப உதவி செய்பவர், எதயைம் நேர்த்தியாக செய்பவர், கடுமையான உழைப்பாளி, ரொம்பவும் உண்மை பேசுபவர், நேர்மையானவர்… இதெல்லாம் தான் பணிவான தற்பெருமைகளின் வார்த்தைகள் பெரும்பாலும்…

 

மர்லின் மன்ரோ இறந்த 20 வருடங்களுக்கு, அவரது மாஜி கணவர் ஜோ டிமேகியோ வாரம் 3 முறை சிகப்பு ரோஜாக்களை வைத்து வந்தார்.

சற்று அதிக பணத்தை போனஸாக கொடுப்பதற்கு பதில் பாராட்டுகளும், சிறந்த உணவு வகைகளும் வேலையாட்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு

 

அமெரிக்காவின் உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அரசு சாஸனம் வரையறுக்கவில்லை. அமெரிக்க சாஸனத்தின் சட்டப்பிரிவு 3ன் படி உச்ச நீதி மன்றம் உருவாக்கப்பட்டது. வயது, சட்டஅறிவு, அந்தஸ்து இயற்கையான குடியுரிமை என எதனையும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அதிபர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் செனெட் எனும் மந்திரி சபை அந்த தேர்வை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

விண்வெளி பயணம் ஆபத்தானது. விண்வெளி வீரர், விசேஷ உடை இல்லாமல் விண் வெளியில் மாட்டிக் கொண்டால் 15 நொடிகளில், ஆக்ஸிஜன் இல்லாமல் மயங்கி விடுவார். 2 நிமிடங்களுக்குள் விண்வெளி கப்பலுக்குள் கொண்டு வந்து விட்டாலும், அவர் வெளியே சுவாசித்த காற்றை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாமல் வெளியே விட்டுவிட வேண்டும். பழக்க தோஷத்தில் மூச்சை உள்வாங்கி விட்டால், அந்த காற்று பன் மடங்கு பெருகி நுரையீரலை தகர்த்து விடும்.

(Visited 33 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *