முடிந்தது முத்தலாக்

தந்திரத்திற்கான எங்கள் பாதையில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம். ஆயிரம் ஆண்டு அடிமை தளையினை பாஜக அரசு உடைத்தெறிந்து விட்டது. தாமதம் தான்... ஆனாலும் இப்போதாவது வந்ததே!! எங்கள் அடுத்த தலைமுறை பெண்களாவது இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். இந்தியாவில் உள்ள 9 கோடி இஸ்லாமிய பெண்களின் சார்பாக மத்திய அரசின் அபார முயற்சியால் ‘முத்தலாக்’ எனும் கொடும் பழக்கம் இனிமேல் சிறை தண்டனை குரியது என்ற மசோதா இரு சபைகளிலும் நிறை வேறியுள்ளது எங்களுக்கு சொல்ல முடியாத மன நிறைவை, நிம்மதியை கொடுத்துள்ளது என்று இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த ‘‘பாரதீய ‘முஸ்லீம் மோர்ச்சா’’ எனும் அமைப்பு தெரிவித்து உள்ளது.

முத்தலாக்!

ஒரு இஸ்லாமிய கணவன் தனது மனைவியை பிடிக்கவில்லை என்றால் 3 முறை ‘தலாக்’ என சொல்லி அவளை விவகாரத்து செய்து விடலாம். திருமணமாகி 1 நாள் ஆகட்டும் அல்லது 20 வருடம் ஆகட்டும், முறை ஒன்று தான். மனைவி வீட்டை விட்டு சென்று விட வேண்டும்.

குழந்தைகளின் மேல் உரிமை கணவருக்கு தான் பெரும்பாலும். குழந்தை பருவம் என்றால் தாயுடன் இருக்க அனுமதி.

விதிமுறைகள்

தலாக் என்றால் அரபு மொழியில் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் என்று அர்த்தம். ‘இந்த முத்தலாக்கை சொல்லும் போது அந்த மனைவி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தலாக் செய்வது ஏன் என்ற காரணத்தையும் கணவன் சொல்ல வேண்டியதில்லை. முத்தலாக் கூறிய பிறகு கணவன் சில காலம் கழித்து மனம் மாறினால் மீண்டும் சேர்ந்து வாழ இன்னுமொரு கொடுமை காத்திருக்கிறது.

நிக்கா ஹலாலா

மனைவி முத்தலாக்கிற்கு பிறகு மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ முதலில் வேறு ஒருவருடன் மணம் புரிந்து, வாழ்ந்து, அவரிடம் இருந்து விவாகரத்துபெற்று தான் கணவரை மீண்டும் திருமணம் புரிய வேண்டும்.

நிக்கா ஹலாலா என்பது இஸ்லாமியரிடையே பெரிய வியாபாரமாகி விட்டது.

ஷரியா சட்டம் என்ன சொல்கிறது

முத்தலாக் என்பதை ஒரே தடவையாக சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாதம் ஒருமுறை என்ற கணக்கில் 3 மாதத்திற்குள் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெறலாம். மொஹர் எனப்படும் திருமணம் போது பேசிய பணம் கொடுக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, விவாகரத்து தரப்பட்ட பெண்ணுக்கு ‘இடட்’ எனப்படும் 3 மாதங்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் தர வேண்டும்.

முத்தலாக் ஆண்டாண்டு காலமாக ஒரே மூச்சில் சொல்லப்பட்டு தான் வருகிறது. இதனை இஸ்லாமிய பெண்கள் எதிர்த்து நின்றாலும் ஷரியா மன்றங்கள் கண்டுக் கொள்ளவில்லை.

எனவே தான் இஸ்லாமிய பெண்கள் ஙிவிவிகி எனும் அமைப்பின் மூலமாக சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வழக்கு தொடர்ந்தனர்

இஸ்லாமிய பெண்களின் நிலை என்ன?

சிறு வயது திருமணம். போதிய கல்வி இல்லை. வருமானம் தரும் வேலை இல்லை. வீட்டு வேலை. குழந்தைகள் பல என ஆண்டுகள் ஒடிவிடும்! 15 அலலது 20 வருடத்திற்கு பிறகு இரவு இடியாக இறங்கும் ‘முத்தலாக்’கொடும் வார்த்தைகள்.

விஞ்ஞான காலம் இது. போன், மெயில், எஸ்.எம்.எஸ் என பல ரூபங்களில் இப்போது தலாக் சொல்லப்படுகிறது

பயம்

அடிதடி என விவகாரம் இருந்து அருகிலிருக்கும் காவல் துறைக்கு போனால், அந்த காவல் அதிகாரி கணவன்மார்களை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கூப்பிட போன் செய்தால், உடனே போனை மனைவியிடம் கொடுக்கச் சொல்லி முத்தலாக் செய்து விடுவார் கணவர்.

இதற்கு பயந்து மனைவிமார்கள் காவல் துறையினரிடம் உதவி கேட்க கூட அஞ்சி வாழ்வது தான் கொடுமை.

21ம் நூற்றாண்டில்

ஙிவிவிகி அமைப்பு இஸ்லாமிய பெண்களுக்கு ஏன் சம உரிமை, சம அந்தஸ்து இல்லை என்று வாதாடி வருகிறது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் நமது இந்திய சட்டம் இஸ்லாமியருக்கு சில சலுகைகளை அளித் துள்ளது என வாதாடி வருகிறார்கள்.

தனி மனித அடிப்படை உரிமைகளை சுட்டிக் காட்டி தான் இந்த முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிங்கப்பூர் ஒரு முன் மாதிரி

சிங்கப்பூரில் ஒரு இஸ்லாமிய பெண் திருமணமான 19 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்யப்பட்டார்.

கணவர் மறுமணம் செய்து கொண்டார். ஷரியா கோர்ட்டுகளுக்கு அலைந்து அந்த மனைவிக்கு நீதி கிடைக்கவில்லை. இஸ்லாமிய ஆண்களுக்கு தலாக் செய்து விட்டு இன்னொரு திருமணம் செய்ய உரிமை உள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்தால் போதுமானது என்று கூறி விட்டது ஷரியா மன்றம்.

தலாக் தலாக் தலாக்

19 வருடங்களுக்கு பின்னர் தனது வாழ்வில் இளமை பகுதி போன பின்னர் வஞ்சிக்கப்பட்ட அந்த பெண் நீதி வேண்டி துணிந்தார்.

தலாக் எனும் ஒரங்க நாடகத்தை சிங்கப்பூரின் ஒரு அறக்கட்டளை நிதி உதவியுடன் தயாரித்து அதில் தானே நடித்தும் அசத்தினார்.

அந்த நாடகத்தினை பார்த்த பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

சில முறை தான் இந்த ஒரங்க நாடகம் அரங்கேரியது. இஸ்லாமிய அமைப்புகள் தடை கோரவே சிங்கப்பூர் அரசும் தடை செய்தது. இவை அனைத்தும் ஆண்ட அரசுக்கும், ஆண்டு கொண்டிருக்கின்ற அரசுக்கும் நன்றாக தெரியும்.மிகவும் சந்தோஷமான தருணம் எனக்கு மட்டும் இல்லை. மொத்த இஸ்லாமியருக்கும் தான்!! இந்த கொடுமையான ஆணாதிக்க வழக்கத்திலிருந்து விடுதலை! நினைத்து பார்க்கவே முடியவில்லை என கலங்கும் 38 வயதான ஷயாரா பானு உத்தரகண்ட்டின் காஷிபூர் மாவட்டத்தில் வசிக்கிறார்.

காலம் காலமாக பெண்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் இரும்பு கரத்தால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

2015ம் ஆண்டு தீடிரென இரவில் எனது கணவர் முத்தலாக் சொல்லி என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். எனது இரு குழந்தைகள் என்னுடைய கணவர் குடும்பத்திலேயே வைத்துக் கொண்டு எனக்கெதிராக அவர்களிடம் பொய்கள் கூறியுள்ளனர்.

சிறுவயது கல்யாணம், படிப்பு இல்லை, வேலை பணம் இல்லை முத்தலாக் என்றவுடன் உடைந்து விட்டேன். என் வழக்கு தொடர்கிறது. என் பிள்ளைகளை நான் பார்க்க வேண்டும்.

தற்போது 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் காஷிபூர் கோர்ட்டுக்கு வரும் போது தான் பார்க்கிறேன். இனியா வது பெண்களுக்கு இந்த கொடுமை முடியட்டும்.

சிங்கப்பூர் அரசின் உதவி கரம்!

இஸ்லாமிய பெண்களுக்கு சிங்கப்பூர் அரசு சட்டத்தின் உதவி கரத்தை நீட்டியது.

இஸ்லாமிய பெண்கள் தங்கள் திருமணத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து விட்டால் மற்ற பெண்களுக்கு உள்ள சட்ட பாதுகாப்பு இவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறியது.

இஸ்லாமிய அமைப்புகள் எதுவும் செய்ய முடியவில்லை.

இதே போன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசு ஏன் கொண்டு வரகூடாது.

இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமண பதிவு தானே இருக்க வேண்டும்.

திருமணத்தை பதிவு செய்ய ஒரே மாதிரியான சட்டம் உடனடி தேவை என்கிறது இந்த இஸ்லாமிய மகளீர் அமைப்பு.

செல்ல வேண்டிய தூரம்

திருமணச் சட்டங்கள் இன்னும் ஷரியா நீதிமன்றங் களிடம் தான் உள்ளன. எனவே நாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு என எங்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை கணவருக்கு உள்ளது என்பதை சட்டம் சொல்ல வேண்டும்.

எங்கள் போராட்டம் தொடரும்! இஸ்லாமிய பெண்களின் சரித்திரத்தில் இது பொன்னான நாள்...

ஷா பானு பேகம் என்ற வீர பெண்மணி

1978ம் ஆண்டு இந்த ஷா பானு என்ற 62 வயது பெண்மணி தனது கணவரான அகமது கான் என்பவரின் மேல் ஜீவனாம்ச வழக்கு மற்றும் நிராதரவான நிலை வழக்கு தொடர்கிறார்.

1932ம் ஆண்டில் இந்தோரில் பிரபல வக்கீலாக இருந்த அகமது கானை திருமணம் செய்கிறார் ஷா பானு.

5 குழந்தைகளுடன் 15 வருடங்களுக்கு பிறகு வேறு ஒரு சிறுவயது பெண்ணை மணக்கிறார் அகமது கான்.

பிள்ளைகளுக்கும் அடுத்த மனைவிக்கும் சண்டைவர 1975ம் வருடம் பிள்ளைகளையும், முதல் மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் அகமது கான்.

ஏப்ரல் 1978ம் ஆண்டில் தான் வழக்கு தொடரப்படுகிறது. மாதம் 200 ரூபாய் வழங்குவதாக கூறிய அகமது கான் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறிய ஷா பானு பல ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாண்டி ‘தனி ஒருவராக’ போராடினார்.

நீதிமன்றம் தீர்ப்பு

கீழ் கோர்டில் 25 ரூபாய் தரச் சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் 179 ரூபாய் தேவை என உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்த ஷா பானு இது எனக்காக மட்டும் செய்யும் போராட்டம் இல்லை. இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கவே போராடுகிறேன் என்று வேதனையுடன் கூறினார்.

1975இல் வீட்டை விற்று வெளியேற்றினாலும் தலாக் செய்யவில்லை. ஆனால் 1978ம் ஆண்டு தலாக் செய்து விட்டேன். ஷரியா சட்டப்படி 3 மாதம் தான் ஜீவானம்சம் தர வேண்டும். கொடுத்து விட்டேன் என்று வாதாட இறுதியில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. சந்திரசூத், இஸ்லாமிய பெண்களின் விடியலுக்கான வழியினை திறந்து விட்டார்.

திக்கற்ற பெண்களுக்கு, அவர்கள் மறுமணம் செய்யும் வரை ஜீவானம்சம் தரவேண்டியது கணவனது கடமை என்று கோர்ட் தீர்ப்பளித்தது.

இஸ்லாமிய பெண்களுக்கு சிங்கப்பூர் அரசு சட்டத்தின் உதவி கரத்தை நீட்டியது. இஸ்லாமிய அமைப்புகள் எதுவும் செய்ய முடியவில்லை. இதே போன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசு ஏன் கொண்டு வரகூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமண பதிவு தானே இருக்க வேண்டும். திருமணத்தை பதிவு செய்ய ஒரே மாதிரியான சட்டம் உடனடி தேவை என்கிறது இந்த இஸ்லாமிய மகளீர் அமைப்பு. இஸ்லாமிய பெண்கள் தங்கள் திருமணத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து விட்டால் மற்ற பெண்களுக்கு உள்ள சட்ட பாதுகாப்பு இவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறியது.காங்கிரஸ் அரசின் ஒட்டு வங்கி அரசியல்

இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருதாமல் அன்றைய பெரும்பான்மை பெற்று பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் கொடுத்த நெருக்கடியால், பாராளுமன்றத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பினை எதிர்த்து, ‘இஸ்லாமிய பெண்கள் சட்டம்’ ஒன்றை இயற்றினார்.

இஸ்லாமிய பெண்களுக்கு திருமணம் செய்த போது பேசிய ‘மொஹர்’ பணம் மற்றும் ‘இடட்’ எனும் 3 மாத ஜீவானம்சம் தொகை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.

பாரதமே பழித்து பேசினாலும் காங்கிரஸ் கண்டுக் கொள்ளவே இல்லை சட்டத்தின் பாதுகாப்பு இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை என்று அரசு சொன்னாலும், இஸ்லாமிய பெண்கள் நம்பிக்கையோடு உச்சநீதி மன்ற தீர்ப்பை காட்டி நீதிமன்றம் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்... பாவம்!!

பாராளுமன்றத்தின் பாவ மன்னிப்பு

அன்று இதே பாராளுமன்றத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை துடைக்கும் விதமாக ‘முத்தலாக்’ தடைசட்டமும், மீறியவர்களுக்கு கிரிமினல் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது.

சரித்திரத்தில் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் என்று இஸ்லாமிய பெண்கள் குது£கலிக்கின்றனர்.

"52 வயதான இவர் ஒரு தீவிரமான முத்தலாக் எதிர்ப்பாளர். முத்தeலாக் தடை சட்டம் மிகவும் தாமதமாக வந்திருக்கிறது. இருந்தாலும் வரவேற்கிறேன். வார்த்தகளால் சொல்ல முடியாத அளவு சந்தோஷம். ஏனென்றால் இது தடை மட்டும் அல்ல... சிறைத் தண்டனையும் உண்டு என்பது தான் முக்கியம்.

2018 ஆகஸ்ட் 22ந் தேதி உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை தடை செய்தாலும், இஸ்லாமிய கணவர்கள் பயப்படவில்லையே.

இது முதல் அடி தான் இஸ்லாமிய பெண்கள் பிற இந்திய பெண்களை போல சுதந்திரம் பெற இன்னும் கொஞ்சம் தொலைவு இருக்கிறது. தொடந்து போராடுவோம். இது ஒரு உன்னதமான தருணம். 1000 வருட அடிமை வாழ்வு ஒழிந்தது... ஒரளவு..."

"32 வயதே ஆன இஸ்ரத்தின் சோக வரலாறு நீதிமன்றத்தை உலுக்கியது உண்மை.

14 வயதே ஆன எனக்கு 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. நான் பல குழந்தைகளை பெற்றேன். என் கணவரது குடும்பத்தினருக்காக அல்லும் பகலும் உழைத்தேன். என்ன செய்தார்கள் தெரியுமா?

2015ம் ஆண்டு ஒரு நாள் இரவு எனது கணவர் துபாயில் இருந்தது போன் செய்து முத்தலாக் கூறிவிட்டார். திகைத்து விட்டேன். அவரது குடும்பத்தினர் எனது குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர்.

வழக்கு பதிவு செய்தவுடன் என்னை பல விதங்களில் தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள். நான் எப்படியோ காலத்தை ஒட்டி வருகிறேன்.

இனி சட்டம் எங்கள் பக்கம் எனும் போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது".

"முத்தலாக் தடை சட்டம் மட்டும் இருந்திருந்தால் பயமிருக்காது. 3 வருட சிறை தண்டனை என்பதால் மட்டுமே இப்போது பயம் உள்ளது. இந்த சட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துள்ளது. எனது வாழ்வு கருகி வட்டது என்று கூறும் அஃபிரினுக்கு வயது 28.

ஸ்பிட் போஸ்ட் மூலமாக வந்த முத்தலாக் இவருக்குள் ஒரு வைராக்கியத்தை உண்டு பண்ணியது. போராட முடி வெடுத்து இந்த அமைப்பில் சேர்ந்தேன் என்கிறார் ஜெப்பூரை சேர்ந்த அஃபிரின்".

முத்தலாக், நிக்கா ஹலாலா ஒழிப்பு

இந்த சட்டத்தின் மூலமாக ஒரே தடவையில் முத்தலாக் கூறுவது தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலாக் கூறிய பின் மீண்டும் தம்பதி ஒன்றே சேர இப்போது உள்ள ‘நிக்கா ஹலாலா’ முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பாராட்டத்தக்கது என்று இஸ்லாமிய பெண்கள் உற்சாகமாக உள்ளனர்.

குழந்தைகள் உரிமை கோருவது, ஜீவானம்சம், மொஹர் பணம் என பல திருத்தங்களை இந்த சட்டம் உறுதி செய்துள்ளது..

திருமண பதிவு சட்டம் உதவுமா?

இந்தியாவில் உள்ள மற்ற மத பெண்களைப் போல இஸ்லாமிய பெண்கள் ஏன் தங்கள் திமணத்தை பதிவு செய்யக் கூடாது என்று கேட்கிறார் பிரபல வழக்கறிஞர் கலிங்கா.

சிறப்பு திருமணச் சட்டம் என்பது வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது தான் தேவைபடுகிறது. இது சட்டமல்ல ஆனால் இஸ்லாமிய பெண்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் திருமணங்களை பதிவு செய்ய தொடங்கட்டும் என்பதே எனது வேண்டுகோள்.

சமூகம் மொத்தமும் காலத்திற்கேற்ப மாறுவது நிச்சயம். ஒவ்வொரு வீட்டிலும் சகோதரிகளும் மகள்களும் இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் கல்வி வசதி உள்ளவர்கள் தான். இந்த புரட்சி பெண்களிடம் தான் தொடங்க வேண்டும்.

"திரில்லங்கான ராஜ்யசபை ஓட்டெடுப்பு! உலக அளவில் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றும் 20வது நாடாக இந்தியா உள்ளது. ஆளும் தேசிய ஜனநயாக கூட்டணியில் லோக் சபாவில் பெரும்பான்மை இருந்தாலும் ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லை.

ராஜ்யசபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள். பாஜகவிற்கு மொத்தம் 78 உறுப்பினர்கள் தாம் உள்ளனர். இருந்தாலும் சாணக்கியத்தனமாக இந்த ராஜ்யசபை ஓட்டெடுப்பை பாஜக வென்று காட்டியுள்ளது. மகாபந்தன் என்று கூறி காங்கிரஸூடன் கட்டி பிடித்து தேர்தலில் உறவாடிய கட்சிகள் பெரும்பாலானோர் காங்கிரஸை வெட்டி விட்டனர் என்பதே உண்மை. எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையை பாஜக பயன்படுத்திக் கொண்டு 91 கோடி இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது".

அரசியல் தேவையற்றது...

இது பெண்களுக்கான சுய மரியாதை மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் என்கிறார் கலிங்கா... முன்னெடுக்குமா அரசும் மற்ற தொண்டு நிறுவனங்களும்...

இஸ்லாமிய பெண்களுக்கு சிங்கப்பூர் அரசு சட்டத்தின் உதவி கரத்தை நீட்டியது இஸ்லாமிய பெண்கள் தங்கள் திருமணத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து விட்டால் மற்ற பெண்களுக்கு உள்ள சட்ட பாதுகாப்பு இவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறியது.

"33 வயதான குல்ஷனுக்கு ஒரு மகன். டெல்லியிலிருந்து உ.பியில் திருமணம் செய்த குல்ஷனுக்கும் முத்தலாக் இடியாக ஒரு நாள் வந்தது தபாலில்.

மீண்டும் டெல்லி திரும்பிய அவர் நீதிமன்றம் ஏறினார். வீடு, உணவு, குழந்தையின் படிப்பு என மொத்தம் 6000 ரூபாய் கொடுத்துள்ளது கீழ் நீதிமன்றம். உச்ச நீதிமன்த்தின் வாசலில் நிற்கும் குல்ஜன், என்னை அடித்து துன்புறுத்திய வழக்கின் மேல் என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. என் கணவர் மறுமணம் செய்து விட்டார் என் வாழ்வு தொலைந்து விட்டது.

இனி என்மேல் இன்னொரு பெண் வாழ்வில் நடக்க கூடாது. இன்றைய தீர்ப்பு சரித்திர புகழ் வாய்ந்த வெற்றி.

இஸ்லாமிய பெண்களின் மானத்தை காத்துள்ள தீர்ப்பு இது. சிறு வயது கல்யாணம் உலகம் தெரியாமல் வாழும் காலத்தில் சிந்திக்க கூட நேரமில்லாமல் சமையல், சுத்தம் செய்வது, குழந்தைகள் என வாழ்கை அலுத்து விடுகிறது. அப்போது விழுகிறது தலாக் எங்கள் தலையில். நாங்கள் வீதியில்.

இப்போதும் இஸ்லாமிய ஆண்களால் 3 முறை தலாக் சொல்லும் இ.பிடாட் எனும் முத்தலாக்கை தான் தடை செய்துள்ளது.

தலாக்-இ-அசான் எனும் மாதம் ஒருமுறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை தடை செய்ய வில்லை.

இது அனிச்சையாக இஸ்லாமிய ஆண்களின் முடிவாக இருப்பது பெண்களை அச்சுறுத்துவது நிச்சயம்.

போராட்டம் தொடர வேண்டும். இது முதல் அடி. இந்த பாதை சுதந்திரத்திற்கான திறவு கோல். எங்களுக்கு வழி கிடைத்து விட்டது. மிக்க மகிழ்ச்சி!".