கொள் தமிழா....

கைபர், போலன் கணவாய்கள் எங்குள்ளன?அதன் வழியாக வந்த வந்தேறிகள் யார்?

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதலாக நமக்கு மூளைசலவை செய்யப்பட்டு வைத்திருக்கும் சங்கதி, “வந்தேறிகள் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக, அந்த கணவாய்கள் அமைந்த பகுதிக்கும் மறுபக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் பண்டைய காலத்தில், அகண்ட பாரதத்தில் உள்நுழைந்து குடி கொண்டனர் - அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பது ஆகும்.

திராவிட பொய்யர்கள்

‘‘மதச்சார்பின்மையாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பெயரிட்டு அழைத்துக் கொள்ளும் பிராடுகள் இதை தங்களுக்கு சாதகமாக இதுநாள் வரை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்த விஷயம்.

கைபரும், போலனும் எங்கே உள்ளது?

கைபர் கணவாய் (Khyber Pass) என்பது எங்கே உள்ளது? கூகுளில் தேடிப் பார்த்தால் வெளிப்படையாக தெரியும் விஷயம் இது. “Khyber Pass” என Google-ல் தேடிப் பாருங்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் இடையே தென்படும்..! அப்படியென்றால் அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய அவர்கள் யார் என்பதை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். அதேபோல போலன் கணவாய் என்பது எங்கே உள்ளது? கூகுளில் “Bolan Pass” என தேடினால் தெரியும் விஷயம்!

அதுவும் மேற்கு பாகிஸ்தான் பகுதியில் தோபா காகர் மலைப்பகுதியில் பலுசிஸ்தான் வழியாக செல்லும் நுழைவு பகுதியாகும். அப்படியென்றால் அங்கிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் யார் என்பதும் நீங்களே யூகம் செய்து கொள்ளலாம்!

நீங்கள் இந்தப் பெயர்களை கொண்டு Google Mapsல் தேடும்போது கிடைக்கும் கூடுதல் தகவல்கள் இன்னும் சுவாரசியமானவை.

இன்னும் பல உண்மைகள்

கைபர், போலன் கணவாய்களுக்கு கிழக்குப் பக்கத்தில் இப்போதைய பாகிஸ்தான் உள்ளது. மேற்படி கணவாய்களுக்கு மேற்கில் ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், ஈரான், ஈராக், ஆர்மீனியா, சிரியா, ஜார்ஜியா, ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளும், இன்னும் சற்று நகர்ந்து பார்த்தால் சவுதி அரேபியா உள்ளிட்ட இதர நாடுகளும் உள்ளன. இந்தப் பகுதிதான் எந்த விதமான பயிர்களுக்கும் லாயக்கில்லாத, கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மனிதர்கள் வெளியேற வேண்டிய பகுதிகளாக காலந்தொட்டு இருந்து வந்துள்ளன.

ஐரோப்பியாவில் இருந்து கால்நடையாக...

ஆனால் நமக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட செய்தி ’ஆரியர்கள்’ எனப்படுபவர்கள் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய பகுதியிலிருந்து கால்நடையாக இந்தியாவுக்குள் வந்தேறியவர்கள் என்பதே...

இன்றும் பசுமை குன்றாத ஜெர்மனி!

அதையும் கூகிளில் தேடினால் மேற்சொன்ன பகுதிகளிலிருந்து ஜெர்மனி இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இன்னமும் எந்த இயற்கை வளத்தையும் தொலைக்காத ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இப்போதை விட இன்னமும் வளமையாக இருந்திருக்கக்கூடிய பண்டைய காலத்தில் ஜெர்மானியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் எதற்காக எந்த இயற்கை வளமும் இல்லாத அரேபிய பாலைவனங்கள் மற்றும் பனிபடர்ந்து பயிர் செய்ய லாயக்கில்லாத மலைப் பிரதேசங்கள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வேண்டும்? இதைப்பற்றி நாம் யோசித்து பார்க்க சிறிதளவு அறிவு இருந்தால் போதும்.

பண்டைய காலத்தில் ஜெர்மானியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் எதற்காக எந்த இயற்கை வளமும் இல்லாத அரேபிய பாலைவனங்கள் மற்றும் பனிபடர்ந்து பயிர் செய்ய லாயக்கில்லாத மலைப் பிரதேசங்கள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வேண்டும்?

எதற்காக இந்த பொய்களை ஆங்கிலேயன் நம்மிடையே பரப்பினான்?

உண்மையான மற்றும் எளிமையான பதில் இருக்கிறது.பார்ப்பனர்கள் அமைதியையும், பக்தியையும் நாடியவர்கள் மட்டுமில்லாமல் தங்களுடன் நட்பு பாராட்டும் மற்றவர்களையும் அவ்வழியில் வாழச்செய்ய விரும்பியவர்கள். பார்ப்பனர்களின் பக்தியும், மனஉறுதியும் இதர இந்தியர்களை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதை தடுக்கும் பெரும் சக்தியாக இருப்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, பார்ப்பனர்களை இதர மக்களிடம் இருந்து பிரித்து அவர்களை அந்நியர்களாகவும், இதர இந்தியர்களின் விரோதிகளாகவும் சித்தரித்து வந்தனர்.

வேதங்கள் தெரிந்த பார்ப்பனர்கள்!

" பார்ப்பனர்களின் பக்தியும், மனஉறுதியும் இதர இந்தியர்களை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதை தடுக்கும் பெரும் சக்தியாக இருப்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, பார்ப்பனர்களை இதர மக்களிடம் இருந்து பிரித்து அவர்களை அந்நியர்களாகவும், இதர இந்தியர்களின் விரோதிகளாகவும் சித்தரித்து வந்தனர்".

பார்ப்பனர்களை இதர இந்தியர்களிடமிருந்து விரோதப்படுத்தி பிரித்தால் மட்டுமே இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கிறிஸ்தவ மத மாற்றத்தை பெருமளவில் செய்யவும் முடியும் என்று உணர்ந்து, ஆங்கிலேய அதிகாரிகள் பார்ப்பனர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்ற கட்டுக்கதையை நாம் 10-ம் வகுப்பில் சரித்திரப்பாடத்தில் படித்த “பிரித்தாளும் கொள்கை” மூலம் சித்தரித்தனர். “வெள்ளையாய் இருப்பவன் எதைச் சொன்னாலும் உண்மையாய் இருக்கும்” என்ற நம்பிக்கையில் இருந்த இந்தியர்கள் வழக்கம்போல இதையும் நம்பினார்கள்.

பெரியாரின் சூழ்ச்சி

இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ஈ.வே.ராமசாமி போன்ற சுயநலவாதிகள் பார்ப்பன துவேஷத்தை அதிகமாக வளர்த்து அதில் குளிர்காய்ந்து தங்களை அரசியல்ரீதியாக ஸ்தாபித்து கொண்டனர். ஈ.வே.ராமசாமி ஆரம்பம் முதலே ஆங்கில மோகம் கொண்டு, குடும்பப் பெண்கள் முதல் அனைவரும் ஆங்கிலத்தில் பேசிப்பழக வேண்டும் என்றும், ஆதி மொழியான தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் சொல்லி வந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியா சுதந்திர மடைந்த ஆகஸ்ட் 15ந் தேதி கருப்பு நாள் என்று அனுசரித்தவர் தான் பெரியார்.

தமிழ்நாட்டை மட்டுமாவது பிரிட்டிஷ் அரசு நேரிடையாக தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வாதிட்டவர்.

ராமசாமி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்டாக செயல்பட்டு வந்தார் என்ற புகார் இருந்ததும் கவனத்துக்குரியது. ராமசாமியையும் ஒரு தலைவனாக ஏற்றுக் கொண்ட ஈனமானவர்கள் நிறைந்தது இந்த தேசம். ராமசாமியின் தொடர்ச்சியாக வந்த அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் உண்மைகளை மறைத்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அரசியல்ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் பார்ப்பன துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு நம்மையும் முட்டாளாக்கி இதுநாள் வரை அரசியல் செய்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஏசு மீண்டும் வருவார்!

Evangelization செய்து கடைசி மனிதன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும்போது “ஏசு மீண்டும் வருவார்’’ என்ற நம்பிக்கைக்காக கோடி கோடியாக செலவழித்து உலக மக்கள் அனைவரும் ஏசுவை பின்பற்றுவார்கள் என்ற மூட நம்பிக்கையில் மதமாற்றம் செய்து வரும் மேற்கத்திய மிஷனரிகள், அவர்கள் செலவழிக்கும் கோடான கோடிக்கணக்கான தொகையை மதம் மாற்றும் மோகன் சி லாசரஸ் போன்ற நபர்கள் “ஏ பாவிகளே எங்களிடத்தில் வாருங்கள்“ என அழைத்து, ஏமாந்த அப்பாவிகள் மதம்மாறிய பின்னரும் மாற்றம் ஏதும் இல்லாமல் வாழ்ந்து வருவதும், இஸ்லாமியர் அல்லாதோர் அனைவரும் காஃபிர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கூறும் தீவிரவாத முஸ்லிம்களும்தான் கேள்விக்குறியவர்கள்!

நாம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?