சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

சுதேசியின்விருதுகள்8 Videos

ஆதிகுரு.தங்கதுரை அம்மை அப்பன்

20ஆண்டு கால ஆன்மீக சேவை மற்றும் சமூக சேவை செய்து வரும் ஆதிகுரு திரு. தங்கத்துரை அவர்களுக்கு சுதேசி விஷிஷ்டா விருது கொடுத்து சிறப்பித்துள்ளது. ஸ்ரீ லிங்கேஷ்வரி அருள் அம்மன் கோட்டைபதி ஆலய திருப்பணியை செய்து வரும் வேளையில், ஆலயத்தில் வாரத்தில் 3 நாட்கள் அன்னதானம் நடைபெறுகிறது. குடிநீர், வசதியும் 15000 குடும்பங்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை கண் பரிசோதனை, கல்வி உதவி, ஊக்கத்தொகை என ஏழை எளியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செய்து வருபவர் […]

திரு.J.பாலசுப்ரமணியன்

சிறந்த கலையார்வலரும், பேச்சாளருமான திரு.J.பாலசுப்ரமணியன் அவர்களது கலை நிகழ்ச்சிகள், மற்றும் புத்தக அறிமுகங்களுக்கான ஊக்குவிப்பையும், சத்தமில்லாத சமூக சேவைகளையும் பாராட்டி ‘‘பீஷ்மா’’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மறைந்த தாயாரின் பெயரில் ‘சாவித்திரி ஃபவுண்டேஷன்’ என்ற அவரது அறக்கட்டளை கடந்த 25 வருடங்களாக கலை, கலாச்சாரம் பண்பாடு, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என்று பல சேவைகளை செய்து வருகிறது. வாழ்த்தும் அன்பு நெஞ்சம்! சாவித்திரி ஃபவுண்டேஷன்

திரு.சிங்காரம்

காரைக்குடியில் 15 பள்ளிகளில் 60 ஆசிரியர்களைக் கொண்டு கிட்டத்தட்ட 6000 குழந்தைகளுக்கு MONTESSORI வகுப்புகளையும், சிறப்பாக ஆங்கிலம் கற்கும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதியுதவியும் அளித்து வருகிறார். சமீபத்தில், RSS அமைப்பால் நடத்தப்படும் விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு, சென்னை திருவேற்காட்டிலுள்ள தனது 1 ஏக்கர் நிலத்தையும், 10000 சதுர அடிகள் கொண்ட கட்டிடத்தையும் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிக்ஷி அறக்கட்டளையின் மூலம் சிறையில் வாழும் ஆயுள் கைதிகளின் குழந்தைகள் சுமார் 150 பேர்களை […]

திரு. சாரங்கராஜன்

பட்டயக் கணக்காளராக கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திரு. சாரங்கராஜன் அவர்கள் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் திருப்பூர் கிளை முன்னாள் Chairman ஆக பணியாற்றியுள்ளார். திருப்பூர் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றியுள்ள திரு. சாரங்கராஜன் அவர்கள், நஞ்சப்பா தொழில்நுட்பக் கல்லூரி உட்பட பல கல்வி அறக்கட்டளைகளில் உறுப்பினராக உள்ளார். சேஷாத்ரி அறக்கட்டளை என்ற சேவை மையத்தைத் துவங்கி, ஆதரவற்ற குழந்தைகளுக்கானப் பள்ளியையும் முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். சமூக சேவையில் மேலும் சிறந்து […]

திரு. ஆனந்த் பட்டாபிராமன்

ஆடிட்டரும், தொழில்நுட்பக் கம்பெனியின் இணை நிறுவனரும், சிறந்த பேச்சாளருமான ஆடிட்டர் திரு. ஆனந்த் பட்டாபிராமன் அவர்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் இலவசமாக புத்தகங்கள் வழங்குதல் உட்பட பல சேவைப் பணிகளை செய்து வருகிறார். மாற்றுத் திறனாளிகள் நலத்திற்கும், ஆதரவற்ற பெண் குழந்தைகள் நலத்திற்கும் சிறப்பாக சேவை செய்து வருகிறார். தனது பொதுநலப் பணிகளுக்குத் தோளோடு தோளாய் உறுதுணை புரியும் அவரது மனைவி திருமதி. பிரியா ஆனந்த் அவர்களால் பெருமிதம் கொள்ளும் திரு. ஆனந்த் பட்டாபிராமன் […]

சுதேசி – துருவா விருதுகள் – 2018

துருவா விருதுகள் 2018 மிக விமரிசையாக நவம்பர் 25ம் தேதி சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு மூத்த பாஜக தலைவர், தர்ம போராளி எச்.ராஜா அவர்கள் வந்திருந்து சுதேசியின் 9வது வருட துவக்க விழாவிற்கு உற்சாகமளிக்கும் வகையில் பேசி பாராட்டுகளையும் வாசகர்களின் மனங்களையும் அள்ளிச் சென்றார். விழாவினை அலங்கரித்த சிறப்பு விருந்தினர்கள் திரு.ஜெ.பாலசுப்ரமணியன், திரு.ரமணி, திருமதி.விஜயஸ்ரீ மகாதேவன் அவர்களும் சிறப்பாகவும், மக்களுக்கு சரியான கருத்துகள் சென்றடையும் விதத்தில் பேசி, சுதேசியின் சேவையை பாராட்டினார்கள். விருதுகள் 2018 நம்பிக்கை வானில் […]

சுதேசி விருதுகள் 2018 துருவா விருது பெறுபவர்கள்

வித்யாரம்பம் அறக்கட்டளை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ‘‘The Rotary Central Vidyarambam Nursery and Primary School’’ என்ற பள்ளியைத் துவங்கி உயர்தர செய்முறைக் கல்வியை மீனவக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். இது வரையில் 9,15,900 குழந்தை களின் கல்வியை மேம் படுத்தியதோடு, 6819 கிராமப்புற பெண்களுக்கு அவர்கள் சொந்த ஊரிலேயே பணியாற்றி மாற்றத்தின் சக்தியாய் விளங்க வாய்ப்பளித்துள்ள வித்யாரம்பம் அறக்கட்டளை நிர்வாகத்தின் நல்ல நோக்கங்கள் யாவும் நிறைவேற சுதேசி […]

திரு.பிரபாகர்

சுகாதாரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் தனித்திறமையுடன் விளங்கும் Lotus Matic நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பிரபாகர் அவர்கள் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து இன்று சுமார் 120 சுகாதாரம் சார்ந்த பொருட்களைத் தயாரித்து அகில இந்திய அளவில் பெயர் பெற்றுள்ளார். மருத்துவமனைகளுக்குத் தேவையான நோய்த் தொற்றைத் தடுக்கும் சுகாதாரப் பொருட்களையும் தயாரித்து சுகாதாரத் துறையில் புரட்சியை செய்துள்ளார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியாவை 30 வருடங்களுக்கு முன்னரே நனவாக்கியவர்! அவருக்கு சிரேஷ்டா விருதை கொடுத்து […]