சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மாத இதழ்28 Videos

திரிக்கப்படும் வேத விளக்கங்கள்!

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! -இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் உண்மை என்ன? உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்து அடியேனால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான் ‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ […]

நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு! தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள் ராகி 2 கிலோ, சோளம் 2 கிலோ, நாட்டு கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ, தினை அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ, ஜவ்வரிசி அரை கிலோ, வெள்ளை எள் 100 […]

என்னவாகும் திமுக இனி….

வாழ்க்கை மட்டுமல்ல அரசியலும் ஒரு வட்டம்தான். இங்கே ஓட்டுச் சக்கரத்தின் சுழற்சிதான் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை இறுதி செய்யும் அச்சாணி. பல்லாண்டுகளாக இருந்த காங்கிரசை திமுக தேர்தலில் வீழ்த்தியதும், அதே திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக, 1977 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தியதும், இதன் பின்னர் இரு கட்சிகளும் மாறிமாறி ஆட்சியை கைப்பற்றுவதும் ஓட்டுக்களின் சுழற்சியில் ஏற்படும் மாறுதலாலேயே தவிர, புதிதாக எதுவும் இல்லை. என்ன ஒரு சின்ன வித்தியாசம், துட்டுக்கு ஓட்டு என்ற நிலை வந்த […]

பிரியமுள்ள வாசகர்களே…

சுதேசி இதழ் மலர்ந்து எட்டாவது வருடம் பிறக்க உள்ளது என்பதை உங்களோடு பகிர்ந்து களிப்புறுகிறேன். சுதேசியின் வாசகர்கள் பலர் தற்போது எங்களிடம் ஒரு உறுதி பத்திரம் கேட்டு வாங்கி கொள்கிறார்கள்!! நாங்கள் அரசியல் பகடைகாய்களாக உருமாறி, சனாதன தர்மத்திற்கு எதிரான ஒரு வார்த்தையை கூட எழுத மாட்டோம் என்று கைப்பட நான் எழுதி கொடுத்துள்ளேன் என்பதையும் அதே உவகையுடனும், உற்சாகத்துடனும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த நாடு தமிழ்நாடு. ஆன்மீக இந்தியாவின் இதயம் தமிழ்நாடு என்றால் […]

ஏரி காத்த ராமர் கதை!

இது கதை இல்லை.. நிஜம்.. இந்துக்களை கேவலமாக நினைத்த ஒரு வெள்ளைக்கார துரை.. கதை கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (சிஷீறீஷீஸீமீறீ லிவீஷீஸீமீறீ ஙிறீணீக்ஷ்மீ) என்னும் ஆங்கிலேய அதிகாரி 1795 -& 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறுவார். அது மட்டுமல்ல; சிலையை […]

மந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு! சொல்லுங்கோ… அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்தஅதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்… “பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களைஎல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்! அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர்சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை! அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் […]

லாஜிக் குரு

ஆழ்மனது நம்பிக்கைங்க தான் நம்மளோட வாழ்கை பாதைக்கு ரோடு போடுது…!! உங்க நட்பு வட்டத்தில கொஞ்சம் டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்… நண்பன் ஒருவனுக்கு எப்போதும் பற்றாக்குறை! அதிக சம்பளம் வரட்டும்…. அப்பவும் கடன் தான்!! போனஸ் வரட்டும்… அப்பவும் கடன் தாங்க!! ஏன்னு அவங்க யோசிக்கவே மாட்டாங்க பாஸ்!! ஆனா நீங்க யோசிக்கனும்… லாட்டரியில பரிசு வாங்கினவங்க கதையே கொஞ்சம் புரட்டி பார்த்தீங்கன்னா போதும்!! பெரும்பாலும் இதே கேஸ் தாங்க. எம்புட்டு லட்சம் வரட்டும்… பஞ்சா பறக்கடிச்சு […]

தெரிஞ்சிக்கலாம் வாங்க

காடுகளில் வாழும் யானைகளின் ஆயுள், விலங்கியல் பூங்காவில் வாழும் யானைகளின் ஆயுளை விட இரட்டிப்பாகும்.   எதன் கொரியாவில் அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகள் வெள்ளி இரவு 7.00 மணிக்கு சுவிட்ச ஆப் செய்யப்படுகின்றன. இல்லையென்றால் ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருப்பார்களாம்!!!     ஆப்பிள் போனின் லோகோ பிரசித்தி பெற்றது. இதன் முதல் லோகோ அதாவது 1976ம் ஆண்டு லோகோவில், ஐசக் நியூட்டன் மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்கும் போட்டோவும், ஒரு ஆப்பிள் விழ போவது […]

மதச்சார்பின்மையின் பெயரால் நசுக்கப்படும் இந்துக்கள்!

இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என்று, இன்றுள்ள இந்திய குடிமக்கள் கூவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடே இல்லை. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கார், இந்தியாவை ஒரு இந்து நாடாக இருக்கும் வகையில்தான் உருவாக்கினர். இதுதான் உண்மையும் கூட. ‘‘உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒரு நாடு உள்ளது. இந்த வகையில் இந்துக்களுக்கான ஒரு நாடாக இந்தியா இருப்பதில் தவறொன்றும் இல்லை ’’ என்று அம்பேத்காரின் வாதம். ஆனால், இந்தியாவை […]

இந்த 28 வயசு சோபியா மாணவியாம்!

* 45 வயதில் ஒருவர் ஆராய்ச்சி படிப்பு படித்தால் அவரும் மாணவரா? * இவர் அகில உலக இடதுசாரி இணையதளத்திற்கு கரஸ்பாண்டண்ட்டாக இருக்கிறார் என்பது இங்குள்ள நடுநிலையாளர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தெரியுமா? * விமான நிலைய லாபியில் தமிழிசையை பார்த்தவுடன் நான் பா.ஜ.க. ஒழிக கோசம்போடப்போகிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டவர் உலகமறியாத சாதாரண மாணவியா? * விமானத்தில் பயணிக்கும் போது சத்தமிட்டாலோ? கோஷமிட்டாலோ? நாம் குற்றவாளியாக்கப்படுவோம் என்பதை அறியாமலா கனடா வரை சென்று வாழ்கிறார்? * […]