ஈவேராவை காப்பாற்றிய பார்ப்பனர்...

பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.

மதுரை வைத்தியநாத ஐயர்

வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது "புளியமர விளாரால்' அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். மற்றும் வைத்தியநாதையரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

போராட்டம்!

இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலதடவை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர் ஆவார். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.

ஹரிஜனங்களின் தந்தை!

தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவர் எனலாம்.ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி 'கக்கன்' இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்..

News_2_1.jpg

ஆலய பிரவேசம்!

1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள். தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளே கூட நுழையாத, அதுவும் வைக்கத்தில் யாரோ போராடியதற்க்கு இவர் பெயர் வாங்கிய ராமசாமியை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் மதுரை வைத்திய நாதய்யரை மறந்துவிடுவதை..

News_2_2.jpg

இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம்.

1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார்.

வெட்கபட வேண்டிய ஈவேரா

ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியும் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.

நன்றி மறவோம்

மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்.

சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.