திமுகவிடம் கோடிகளில் நன்கொடை வாங்கிய தோழர்கள்

கட்சி நிதி தாரீர்... இப்படித்தான் பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் மக்களிடம் போய் நிற்கும். விதி விலக்காக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும், எதிர் கட்சிகளுக்கும் கொஞ்சம் பல்க் நிதி கிடைப்பது என்பது எழுதப்படாத சட்டம். இந்த வகையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜவுக்கு 2017-&18ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 977 கோடி ரூபாய் கட்சி நிதியாவும், காங்கிரஸ் கட்சிக்கு 777 கோடி ரூபாயும் நிதி கிடைத்துள்ளது.

இதில் 3வது தேசிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு 196 கோடி ரூபாயும், 4வது தேசிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு 176 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக கிடைத்துள்ளது. இதுதவிர, அதிமுக, திமுக என்று மாநில கட்சிகளும் தேர்தல் நிதியைப் பெற்றுள்ளன. இதில், கவனிக்க வேண்டிய அம்சம், மற்ற கட்சிகளும் கூட கட்சி நிதியை நன்கொடையாக பெறும். இதுகுறித்து வருமான வரித்துறைக்கு முறைப்படி கணக்குகள் தாக்கல் செய்துவிடும்.

போதும் தோழர்களே...

இந்த விஷயத்தில் மற்ற கட்சி களைவிட மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுக்கும். காரணம், ஏழைப் பங்காளன், தொழிலாளர்களின் தோழன் என்று மார்தட்டிக் கொண்டு, கட்சி நிதி வசூலிப்பதில் முன்னணியில் இருக்கும். இதெல்லாம் சரிதான், என்றாலும், கடந்த லோக்சபா தேர்தலில் இந்த 2 தேசிய கட்சிகளும், ஒற்றை இலக்கத்தில் எம்பிக்களை வென்றபோதும், இதற்காக செய்துள்ள தில்லுமுல்லுகள், 2 கட்சிகளும் சேர்ந்து ஒட்டுமொத்மாக தமிழக மக்களை முட்டாளாக்கியது தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், அரசியல் கட்சியினர், தங்கள் தேர்தல் செலவு தொடர்பான கணக்குகளைத் தேர்தல் கமிஷனரிடம் தாக்கல் செய்து வருகின்றன. இதில் திமுக சார்பில் ஆகஸ்ட் 27ம் தேதி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த தேர்தல் செலவுகளுக்கான அறிக்கையில், ‘மொத்த தேர்தல் செலவு 70 கோடி ரூபாய். கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதி செலவுகளாக வழங்கியது மட்டும் 40 கோடி ரூபாய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்கு அந்த 40 கோடி ரூபாய்?

இந்த 40 கோடி ரூபாயில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரனுக்கு 15 கோடி ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 25 கோடி ரூபாய் யாருக்கென நினைக்கிறீர்கள்? சாட்சாத் நம்ம தோழர்கள் கட்சிகளுக்குத்தான். இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் செலவு நிதியாக 10 கோடி ரூபாயும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. கொடுத்த திமுக இந்த உண்மையை உடைத்துவிட்டது. ஆனால், வாங்கிய கம்யூனிஸ்ட் டோழர்கள் என்ன சொன்னார்கள்?
எதுவுமே சொல்லவில்லை. ஆனால், திமுகவின் தேர்தல் செலவு அறிக்கையில், ‘ஏப்ரல் 5, 8 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் செலவுகளுக்கு 3 தவணைகளாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தவணைகளில் 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது’ என்று தேதி வாரியாக கொடுக்கப்பட்ட தொகையை தெரிவித்துவிட்டது.

கணக்கு காண்பிப்பதிலும் முரண்பாடு?

இதிலும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம். ‘எங்களுக்குத் தேர்தல் செலவு தோராயமாக 7.2 கோடி ரூபாய்’ எனறு தேர்தல் செலவுக் கணக்கு குறித்து ரிப்போர்ட் கார்டு தாக்கல் செய்தாலும், திமுகவிடம் இருந்து தாங்கள் பெற்ற 15 கோடி ரூபாய் குறித்து வாய் திறக்கவில்லை. அப்படியானால், அந்தத் தொகை எங்கே போச்சு?
டில்லியில் நிருபர்களிடம் சிக்கிய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜாவிடம் மீடியாக்கள் இதுகுறித்து சரமாரியாக கேள்விகளை அம்பென தொடுக்க, தர்ம சங்கடத்தில் நெளிந்த டி.ராஜா வேறு வழியில்லாமல், ‘‘ஆமாம். திமுகவிடம் நாங்கள் 15 கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றது உண்மைதான்’’ என்று ஒப்புக் கொண்டார். ஆனால், பதில் சொல்ல வேண்டிய மாநில செயலாளர் முத்தரசன் வாயே திறக்கவில்லை.

‘மொத்த தேர்தல் செலவு 70 கோடி ரூபாய். கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதி செலவுகளாக வழங்கியது மட்டும் 40 கோடி ரூபாய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் என்றாலே திருட்டு தனமா?

மார்க்சிஸ்ட் ஒருபடி மேலேபோய், எதுவுமே நடக்காததுபோல் ரியாக்ஷன் கொடுத்துள்ளது ஹைலைட்டான விஷயம். இன்னமும் தேர்தல் கமிஷனில் தேர்தல் செலவுகளை தாக்கல் செய்யாத மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுகவிடம் பெற்ற 10 கோடி ரூபாய் குறித்து இன்னமும் தெளிவான ஒரு அறிக்கையைக் கூடத் தாக்கல் செய்யவில்லை. பதில் சொல்லவும் மறுக்கிறார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் சிலர் கேட்டபோது, ‘‘மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் செலவுகளுக்காக, மாநிலம் முழுவதும் நன்கொடை திரட்டியது. வரவு - செலவுகள் வங்கிகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. திமுக வெளிப்படைத் தன்மையுடன் தனது செலவு கணக்கை காட்டியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. இது வழக்கமான நடைமுறைதான்’’ என்றாரே தவிர, ‘ஆமாம். நாங்கள் திமுகவிடம் 10 கோடி ரூபாய் நிதி வாங்கியது உண்மைதான்’’ என்று கடைசிவரை ஒப்புக் கொள்ளவே இல்லை.

இதுகுறித்து பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் சிலர் கேட்டபோது, ‘‘மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் செலவுகளுக்காக, மாநிலம் முழுவதும் நன்கொடை திரட்டியது. வரவு - செலவுகள் வங்கிகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. திமுக வெளிப்படைத் தன்மையுடன் தனது செலவு கணக்கை காட்டியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. இது வழக்கமான நடைமுறைதான்’’ என்றாரே தவிர, ‘ஆமாம். நாங்கள் திமுகவிடம் 10 கோடி ரூபாய் நிதி வாங்கியது உண்மைதான்’’ என்று கடைசிவரை ஒப்புக் கொள்ளவே இல்லை.

மடை மாறும் நிதிகள்

தமிழகத்தில் திராவிட கட்சிகளில், திமுக மிகப் பெரிய கார்ப்பரேட் கட்சியாகும். இந்த கார்ப்பரேட், மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெறுவதுதான் வழக்கம். ஆனால், அப்படிப்பட்ட திமுகவிடமே உண்டியல் நீட்டிய காம்ரேடுகள், அந்த நிதியை எப்படி செலவிடுகின்றனர்? கொஞ்சம் குழப்பமான விஷயமாகத்தான் இருந்தது. இதுகுறித்து காம்ரேட் ஒருவரிடம் கேட்டபோது, ‘தலைவர்களின் சுற்றுப் பயணங்கள், போராட்டங்களில் கலந்து கொள்ளும் செலவுகள் எல்லாம் இதில்தான் ஈடுகட்டப்படுகிறது’ என்று முடித்துக் கொண்டார்.

போராட்டங்களுக்கான செலவுகளா?

இப்படியொரு சந்தேகம் ஏற்படத்தான் செய்தது. இதுகுறித்து நட்பு அடிப்படையில் சில தோழர்களிடம் கேட்டபோது, அவர்களது அரசியல் லட்சணம் தெரியவந்தது. ‘‘பொதுவாக கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் இன்று 2 பிரிவுகள் இருந்தாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஜனநாயக உரிமை அமைப்புகள், மக்கள் அதிகாரம் என்று பல அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டாலும், இவற்றின் ஆணிவேர் கம்யூனிசம் மட்டுமே. இவர்களின் போராட்டத்துக்குத் தேவையான நிதியை அவ்வப்போது கட்சியில் இருந்து கொடுப்பார்கள்.
போராட்டத்தின் வேகம் குறையக்கூடாது. பல தோழர்கள் வேலைவெட்டி இல்லாமல், போராட்டக் களத்திலேயே இருந்தால், அவர்கள் சாப்பாடு செலவுகளுக்கு என்ன செய்வது, அதுபோன்ற நிலையில்தான் இப்படி பெறப்படும் நிதியை செலவிடுகிறார்கள் என்று உண்மையை உடைத்தனர். இப்படியும் ஒரு அரசியல் தேவையா?

இதை மக்கள் முடிவு செய்வதைவிட, தங்களை தொழிலாளர்களின் தோழன் என்ற மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள்தான் முடிவு செய்யணும்.