சியாச்சினில் உள்ள பானா போஸ்ட்!

தரை மட்டத்திலிருந்து 21000 அடி உயரத்தில் உள்ள சியாச்சன் உச்சியை பாகிஸ்தான் பகுதியிலிருந்து தரை மார்க்கமாக எளிதாக அடைய முடியும். இந்திய பகுதியிலிருந்து தரை மார்க்க வழி இல்லை. இந்திய பாதுகாப்பு படை ராணுவ வீரர்களின் தைரியமான, வெற்றிகரமான சாகசங்களில் ஒன்றான Operation Meghdoot மூலம் 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் வசம் கொண்டு வந்தனர்.

குவையித் போஸ்ட்!

ஆனால் பாகிஸ்தானோ 1986 ஆம் ஆண்டு வாக்கில் அந்த பகுதியிலேயே மேலும் உயரமான (22153 அடி உயரம்) மலையுச்சியை கைப்பற்றி ஒரு மிலிட்டரி போஸ்டை உருவாக்கிவிட்டது. (பாகிஸ்தான் உருவாக காரணமாயிருந்த) முகமது அலி ஜின்னாவின் பெயரையும் அந்த மலையுச்சிக்கு சூட்டி Quaid போஸ்ட் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
இந்த உயரமான நிலையிலிருந்து பாகிஸ்தானியரால் சியாச்சின் பகுதியில் இருந்த இந்தியாவின் அத்தனை ராணுவ நிலைகளையும் சால்டோரோ மலைப்பகுதியில் உள்ள பகுதிகளையும் எளிதாக தாக்க கூடிய நிலைமை ஏற்பட்டது.

கடும் சோதனை!

பாகிஸ்தானின் வலிமை வாய்ந்த மூன்றாவது கமாண்டோ பட்டாலியனை சேர்ந்த கமாண்டோ யூனிட்டான ஷாஹீன் கம்பெனி வீரர்களால் பெரும் எண்ணிக்கையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது Quaid போஸ்டிலிருந்து பாகிஸ்தானிய பீரங்கிகளால் சியச்சனிலிருந்த நம் வீரர்களை நோக்கி அடிக்கடி சுடும் சம்பவங்களும் நடைபெற்றன.

உத்தரவு!

இந்த சூழலில் தான் என்ன ஆனாலும் சரி Quaid போஸ்டை இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்ற உத்தரவு 1987 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அரசால் இந்திய ராணுவத்திற்கு பிறப்பிக்கப்பட்டது.

ராஜீவ் பாண்டே தலைமையில்...

இந்திய ராணுவத்தின் ஜாக் லை (JAKLI) என்றழைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபாண்ட்ரியின் எட்டாவது பட்டாலியனிடம் அந்த பொறுப்பு தரப்பட்டது. மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் பனிப்புயலில் இடுப்பளவு வெண் பனியில் செகண்ட் லெஃபிடினண்ட் ராஜீவ் பாண்டே தலைமையில் 13 வீரர்கள் முன்னேறினர். ஒரு கிலோமீட்டர் கடக்க நான்கு மணிநேரம் ஆனது.
தாக்குதல் நடத்தக்கூடிய தூரத்தில் இருக்கும் போது கடுமையான பனி பொழிவில் இந்திய படையினரின் துப்பாக்கிகள் ஜாம் ஆகி செயலிழந்தது. பாகிஸ்தானியரின் ஹெவி மெஷின் கன் தாக்குதலில் ராஜீவ் பாண்டே உட்பட 10 இந்திய மாவீரர்கள் கொல்லப்பட்டனர்.

எதிரி துப்பாக்கிகள் மட்டும்

பாகிஸ்தானியரின் துப்பாக்கிகள் மட்டும் எப்படி இந்த கடும் பனி பொழிவிலும் செயல்படுகிறது என்பது முதலில் இந்திய படையினருக்கு புரியவில்லை. பங்கர்களில் துப்பாக்கிகளுக்கு கீழே மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்து துப்பாக்கிகளை சூடு படுத்திக்கொள்கிறார்கள் என்பது அப்புறம் தான் தெரிந்தது.

இன்னுமொரு படை தலைமையில்..

அடுத்த சில நாட்களில் னிuணீவீபீ போஸ்டை பிடிக்க மேஜர் வரீந்தர் சிங் தலைமையில் ஒரு படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு திட்டங்களும் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு (இறந்து போன ராஜீவ் பாண்டே நினைவாக) ஆபரேஷன் ராஜீவ் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆபரேஷன் ராஜீவ் - 3 பிரிவுகள்...

சுபேதார் ஹர்னாம் சிங் தலைமையில் 10 வீரர்கள் ஒரு பிரிவும், சுபேதார் சன்சார் சந்த் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு பிரிவும் தாக்குதலுக்கு தயாரானது. நைப் சுபேதார் பாணா சிங் தலைமையில் ஒரு பிரிவு ரிஸர்வாக வைக்கப்பட்டது.
ஹர்னாம் சிங் தலைமையிலான படைப்பிரிவு முன்னேறும் போது தான் முன்னர் தாக்குதலில் இறந்து போன ராஜீவ் பாண்டே மற்றும் பல வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இறந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருந்தாலும் உறை பணியில் இவர்களது சடலங்கள் கெடாமல் இருந்தது! மாவீரர்களின் உடல்களை பேஸ் காம்பிற்கு கொண்டு வந்துவிட்டு மேலும் முன்னேறும் போது பாகிஸ்தானியரின் தாக்குதலுக்கு ஆளாயினர்.

மற்றொரு புறம் முன்னேறிய சான்சர் சந்தின் படைப்பிரிவு மலை உச்சிக்கு 30 மீட்ட தொலைவு இருக்கும் போது அவர்கள் ரேடியோ செயலிழந்து அடிஷனல் சப்போர்ட்டுக்கு தகவல் அனுப்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

3வது பிரிவு

இந்தியாவின் இரு படைப்பிரிவுகளும் இப்படி பனிப்புயலில் திணறிக்கொண்டு இருக்கும் போதுதான் பாணா சிங் தலைமையில் மூன்றாவது பிரிவு செயலில் இறங்கியது.

பாணா சிங்

பாணா சிங் தவிர இப்பிரிவில் சுனிலால் / ஓம் ராஜ் / லக்ஷ்மன் தாஸ் / காஷ்மீரா சந்த் ஆகியோர் இருந்தனர். இவர்கள் மலையுச்சியை மிக மோசமான பனிப்புயலுக்கு நடுவில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத 85 டிக்ரீ செங்குத்தான பகுதியில் மலை யுச்சியை அடைய ஏறினார்கள்.

மலை உச்சியில்...

மிகுந்த இன்னல்களுக்கிடையே மலையுச்சியை அடைந்து பாகிஸ்தானிய பங்கர்களை தாக்க தயாரான போது கையிலிருந்த துப்பாக்கிகள் பனியில் உறைந்து செயலிழந்து ஜாம் ஆகிப் போனது தெரிந்தது. பின் வாங்கி இறங்கவும் முடியாத நிலை.

இந்தியர்களே...

"காஷ்மீர் பனிமலையின் ஒவ்வொரு குன்றிலும் பள்ளத்தாக்கிலும் இந்தியர்களே நம் வீரர்களின் ரத்தம் ஆறாக ஓடியுள்ளது. இவர்களின் தியாகங்கள் தெரியாமல், புரியாமல், டெல்லியிலும் சென்னையிலும் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு பொது வாக்கெடுப்பு புடலங்காய் நோக்கெடுப்புன்னு ஃபேஸ்புக்கில் பெனாத்திக்கிட்டு இருப்பவர்களை என்ன செய்யலாம்? - ராணுவ வீரர்"

அந்த நிலையில் தான் பாணா சிங் உயிருக்கு துணிந்து இடுப்பளவு பனியில் முன்னேறி தன்னிடமிருந்த கைக்குண்டை பாகிஸ்தானிய பங்கரின் உள்ளே வீசினர். தொடர்ந்து துப்பாக்கிகளுடன் வெளியே வந்த பாகிஸ்தானியருடன் hand to hand கைகலப்பு நடந்தது. பதினேழு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர். பலர் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தனர்.

இந்திய ராணுவத்தின் ஹானரரி கேப்டன் பாணா சிங் அவர்களின் மகன் ராஜீந்தர் சிங் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இந்திய ராணுவ பயிற்சிக்கு தேர்வாகி இந்திய ராணுவத்தில் தற்போது பணி புரிகிறார்.

Quaid போஸ்ட் இந்திய ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பின்னர் நடந்த சில நிகழ்வுகள்.

*பாகிஸ்தானிய வீரர்களின் உடல்கள் தகுந்த (இந்திய) ராணுவ மரியாதையுடன் flag meet இல் பாகிஸ்தானிய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. *சுபேதார் ஹர்னாம் சிங்கிற்கு மஹாவீர் சக்ரா விருதும் மேஜர் வரீந்தர் சிங்கிற்கும் அமரர் ராஜீவ் பாண்டேவுக்கும் வீர் சக்ரா விருதும் சுனி லால் மற்றும் ஓம் ராஜ் ஆகியோருக்கு சேனா மெடல்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். *நைப் சுபேதார் பாணா சிங் கிற்கு நாட்டின் மிக உயரிய விருதான பரம வீர் சக்ரா வழங்க பட்டது. இந்திய ராணுவத்தின் ஹானரரி கேப்டனாக ஆக்கப்பட்டார். *Quaid போஸ்ட் தற்போது திரு. பாணா சிங்கின் வீரத்தின் நினைவாக பாணா போஸ்ட் என்றழைக்கப்படுகிறது.