மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் நடந்தது என்ன?

கிறிஸ்துவ கல்லூரியின் விலங்கியல் துறையை சார்ந்த உதவி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன், கல்லூரி நிர்வாகம் தனக்கு வழங்கியுள்ள 2வது சுற்று ‘‘தன்னிலை விளக்கம்’’ நோட்டீசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
கல்லூரியின் கமிட்டி கொடுத்துள்ள இரண்டாம் கட்ட விசாரணை நோட்டிஸ் நியாயமானதே என்று கூறி சாமுவேல் டென்னிசனின் மனுவை நிராகரித்து தனது கருத்தையும் வெளியிட்டார் நீதிபதி.

வழக்கு என்ன??

ஜனவரி மாதம் 2019ம் ஆண்டு 3வது வருட விலங்கியல் மாணவிகள் 50 பேர்கள் கர்நாடகாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மாணவியருடன் பாதுகாப்பிற்கு சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவீன் என்ற ஆசிரியர்கள் சென்றுள்ளனர். சாமுவேல் டென்னிசன் ஏற்கெனவே மாணவியரை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதும், ஆசிரியர் என்பதால் மாணவிகள் தங்களுக்குள் பேசி வேதனை பட்டும் வந்துள்ளனர்.

அத்துமீறிய சாமுவேல்!

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சாமுவேல் மாணவியரை தொடுவதும், கிள்ளுவதும், சரசமாக விகல்பமாக பேசுவதோடு நில்லாமல் இரவில் அவர்களது படுக்கையில் அவர்களுடன் படுத்தும் உறங்கியுள்ளான்.
கொதித்து போன மாணவிகள் கல்லூரி வந்தபின் நிர்வாகத்திடம் புகார் சொல்ல, நிர்வாகம் வழக்கம் போல அமைதிகாத்துள்ளது. சரி, 10 பேர்கள் தானே என்று அலட்சியம் படுத்தி விட்டனர் என்று கருதி, 34 மாணவிகள் சாமுவேல் டென்னிசன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினான் என்று புகார் அளிக்க, நிர்வாகம் கண்துடைப்பு வேலையாக விசாரணை செய்து, இது ‘முதல் தடவையாக செய்யப்பட்டுள்ள குற்றம்’ அதுவும் உங்களின் குற்றச்சாட்டுதான்! எனவே நிர்வாகம் அவரை மன்னித்து விடுகிறது என்று கூறியவுடன் மாணவியர்கள் மனக் கொந்தளிப்புடன் வலம் வந்தனர்.

பழைய மாணவியரின் உதவிக்கரம்

2000ம் ஆண்டு மாணவியர் இந்த பிரச்சினையை கேள்விபட்டு உதவ முன் வந்தனர். எங்களிடமும் இந்த உதவி பேராசிரியர் தவறாகவே நடந்து கொண்டான் என்று கூற, நிர்வாகம் ஆட்டம் கண்டது. கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்குமாறு உத்தரவு வந்தவுடன் தான் சாமுவேல் டென்னிசன் நீதிமன்றம் சென்று முறையிட, நீதிபதி அந்த மனுவை நிராகரித்தார்.

டிஸ்மிஸ்

குற்றம் நிருபிக்கப்பட அந்த உதவி பேராசிரியர் வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்தது மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி. கிறிஸ்துவ பள்ளி மற்றும் கல்லூரிகளி;ஹ் படிப்பது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது.
கட்டாய மதமாற்றம் நடப்பதாக பல புகார்கள் வருகின்றன. நல்ல கல்வி, நல்ல கட்டமைப்பு என இருந்தாலும் மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய அவர்களது பாடம் எடுபடுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.எஸ். வைத்தியநாதன் அவர்கள் தனது உத்தரவில் கருத்து சொல்லியுள்ளார்.

நீதிபதிக்கு எதிராக மனு

கிறிஸ்த்துவ கல்லூரிகளின் படித்து வரும் மாணவியருக்கு பாதுகாப்பில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்திய நாதன் கூறியதை எதிர்த்து, கிறிஸ்துவ அமைப்புகள் போர்க் கொடிகள் தூக்கின. நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் அந்த குறிப்புகளை நீக்கி விடுமாறு கூறிவிட்டார்.

64 வழக்கறிஞர்கள்

64 கிறிஸ்துவ வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு, இனி பெண்கள் பாதுகாப்பு, கிறிஸ்துவ நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இவர் விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுத்துள்ளனர்.

]

நீதிபதி கூறியதில் உள்ள உண்மைகள்

* 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் நிலையம், நான்கு நபர்களை குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக (POSCO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அது கிறிஸ்துவ அனாதை ஆசிரமம். அங்கிருந்த பெண் குழந்தைகள் கொடுத்த புகாரின் பேரில் நடிவடிக்கை எடுக்கப்பட்டது.

* ஜூன் மாதம் 63 வயதான பாதிரி ஜோதி மணி என்பவர் திருச்சிக்கு அருகில் உறையூரில் உள்ள கிறிஸ்துவ மெதாடிஸ்ட் பள்ளி தலைவராக உள்ளார். பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்துள்ளார். ஊர் மக்களின் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (POSCO) சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் அருகே ஒமலூர் பாத்திமா மாணவியர் பள்ளி கூடத்தில் பயின்று வந்த சிறுமி சுகன்யா அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தாள்.

இந்தியாவின் இரு படைப்பிரிவுகளும் இப்படி பனிப்புயலில் திணறிக்கொண்டு இருக்கும் போதுதான் பாணா சிங் தலைமையில் மூன்றாவது பிரிவு செயலில் இறங்கியது.

சேலம் அருகே ஒமலூர் பாத்திமா மாணவியர் பள்ளி கூடத்தில் பயின்று வந்த சிறுமி சுகன்யா அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தாள்.
ரத்தம், உடைந்த வளையல்கள், சாராயம், ஆணுறைகள் என பள்ளி வளாகத்தில் கண்ட மக்கள் புகார் கொடுத்தனர்.
அன்றைய திமுக ஆட்சி மக்களை சமாளிக்க பள்ளி நிர்வாகிகள் சிலரை மாற்றச் சொல்லி சேலம் பிஷ்ப்பை கேட்டது. ஆனால் சேலம் பிஷப் மறுத்து விட்டார்.

மருத்துவ கூராய்வில் சுகன்யா எனும் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டார் என்று உள்ளது. அங்கிருந்த ஒரு பாதிரியை அரசு மருத்துவ பரிசோதனைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பியது.
இன்றுவரை சுகன்யாவின் இறப்புக்கு காரணமான அந்த கிறிஸ்துவ பள்ளி நிர்வாகிகள் சுதந்திரமாகத் தான் உள்ளனர் என்பது வேதனை.
செயின்ட் ஆன் மாணவியர் உயர்நிலை பள்ளி, கடலூரில். அனந்தவல்லி எனும் மாணவி தற்கொலை என்று பள்ளி நிரிவாகம் வழக்கை முடித்து விட்டது. ஆனால் இறந்து விட்ட அனந்தவல்லியின் தலைமுடி சிறிது தூரத்தில் கிடைத்துள்ளதும், வாயில் திணிக்கப்பட்ட துணியும் வேறு கதை சொல்லுகிறது. வழக்கம் போல காவலும், சட்டமும் மௌனம்!!

2008ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க பாதிரி தனது அறையில் கொல்லப்பட்டு இருந்தார். கிறிஸ்துவ அனாதை ஆஸ்ரமங்களில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கூட்டத்தினருடன் அவனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
லிட்டில் பிளவர் ரோமன் கத்தோலிக்க பள்ளி மாணவி சிவசக்தி 12ம் வகுப்பு படித்து வந்தாள். ஒரு நாள் பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கியபடி அவளது சடலத்தை தான் பெற்றோர் கண்டனர்.
கணக்கில் மார்க் குறைவாக எடுத்ததால் பாவம் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டாள் என்று அந்த தலீத் மாணவியை மொட்டிலே கருக வைத்து விட்டது நிர்வாகம்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ராஜரத்தினம் வழக்கு மிகவும் பரபரப்பாக ஒரு நாள் மட்டுமே பேசப்பட்டது. முது நிலை பட்டம் படித்து வந்த கன்னியாஸ்த்ரியை பலவந்தபடுத்தி வந்த பாதிரி ராஜரத்தினம் அந்த கன்னியாஸ் திரி கர்ப்பம் என்றவுடன் கருவை கலைத்து விட்டு, அந்த சர்ச்சை விட்டும் வெளியேற்றி விட்டான்.
இந்த வழக்கை விசாரிக்க வந்த கிறிஸ்துவ பாதிரி சூசை பிச்சை கொலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் அது தற்கொலை என்று நிர்வாகம் கூறிவிட்டது.
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் ராஜரத்தினத்திற்கு பெயில் கொடுத்துள்ளது
தற்போது திருவண்ணாமலை வெட்டாளத்தில் உள்ள லயோலா கல்லூரியில் செயலாளராக பணி செய்து வருகிறான்.
பெண்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.
இது வெளி வந்துள்ள மிக சொற்பமான வழக்குகளே. கிறிஸ்துவ அனாதை ஆசிரமங்கள், சர்ச் விடுதிகள் என பார்த்தோமானால் தலை சுற்றும்.

உலகெங்கும் இதே கதைதான் என்பதும் ஊரறியும். பல ஏழை தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரின் பெற்றோர்களின் குரலாக தான் நீதிபதி வைத்தியநாதன் அவர்களின் குரல் ஒலிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
அரசியல் பாதுகாப்பும், பண பலமும் ஊடக பலமும் இருக்கலாம். ஆனாலும் நிச்சயம் காலம் பதில் தரும்.