சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

admin

உலக மக்களுக்கு உதவும் 10 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்…!

உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் பல சுகங்களை துறந்து, உலக மக்களின் நன்மைக்காக அல்லும் பகலும் அயராது, உற்சாகத்தோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த அபார முயற்சியால் நமக்கு கிடைத்துள்ள சில அரிய கண்டுபிடிப்புகளை பார்ப்போம். முடக்கு வாதம் எனப்படும் பெராலிஸிஸ் நோயால் பாதிக்கபட்டு நடக்க முடியாதவர்கள் நடக்கலாம்! அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நரம்பியல் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, அரும்பாடுபட்டு இந்த அதி அற்புதத்தை நடத்தி காட்டியுள்ளனர். இடுப்பிலிருந்து கீழே முற்றிலும் செயல் இழந்து விட்டவர்களின் வாழ்வில் ஒரு […]

அலிபாபாவின் தலைவர் ஜாக் மா அமெரிக்காவிற்கு கொடுத்த பதிலடி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டத்தில் பேசுகையில், இனியும் சீன அரசு அமெரிக்காவை பொருளாதார ரீதியாக கற்பழிப்பதை அனுமதிக்க போகிறோமா?? என்று பேசினார். சின்டு முடிந்த நிருபர்கள்! நிருபர்கள் சீன அதிபரிடம் இதற்கு பதில் கேட்க, சீன அதிபர் சிரித்த முகம் மாறாமல் அமைதியாக ஆனால் நெத்தியடியாக பதில் கொடுத்துள்ளார். பதிலடி! ‘‘அமெரிக்காவில் பேச்சுரிமை உண்டு. அதனால் அவர் பேசியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். 30 வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அன்றைய அமெரிக்க […]

மீ..டூ.. தாக்கு பிடிக்குமா..!

கவர்ச்சி… ஈர்ப்பு இல்லாத உயிரினம் எங்கே உள்ளது இந்த கவர்ச்சியின் எல்லைகளை யார் நிர்ணயிப்பது. முன்னர் பெண்களை ஜாக்கிரதை படுத்தி, சில கட்டுபாடுகளை விதித்து காப்பாற்றி வந்தனர். ஆனால் இப்போது ‘சமஉரிமை’ என்ற பெயரில் பெண்கள், நாங்களும் எல்லாவற்றிற்க்கும் தயார் எனும் போது, எப்படி பாதுகாக்க முடியும். அதுவும் கவர்ச்சி மயமான சினிமா துறையில். ஒரு ஆண் மற்றொரு பெண்ணை பார்த்து தன் விருப்பத்தை தெரிவிப்பது எப்படி தவறாக முடியும். மறுப்பதற்கு அந்த பெண்ணிற்கு உரிமை உள்ளது. […]

இனியாவது நிம்மதியாக வாழுங்கள்!

‘‘பெட்ரூம் லைட் அணைச்சா தான், செட்லைட் மேல விழும்னு’’  இயக்குநர் சிகரத்தின் அரங்கேற்றம் படத்தில ஒரு டயலாக் வரும். இது யதார்த்தம்னு தான் சினிமாவில இருக்கிற வங்க சொல்வாங்க… ஏன்னா இன்னிக்கு சினிமாவில நடிக்கனும்னா ஒட்டி, உரசி, முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகள்ல நடித்து, வில்லன்களோடு ரேப்சீன்ல நடிச்சு, கனவு காட்சியில, கேவலமாக துணி அணிந்து, அத விட கேவலமான அங்க அசைவுகளோடு நடிக்க ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம்!!! பின்ன இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர்னு பலர அட்ஜஸ்ட் […]

ஆண்டாள் வந்து விட்டாள்..!

ஆண்டாள் வரட்டும்… மன்னிப்பு கேட்கிறேன் என்று ஆணவத்துடன் பேசிய அதே வைரமுத்து இன்று நான் நல்லவா கெட்டவனா என்று இப்போது முடிவு பண்ணாதீர்கள் என்று பொது மக்களை கெஞ்சுகிறான். காம பேரரசே!! நீர் எந்த இலக்கியம் படித்து எமது உலகை ஆளும் அன்னையை தூற்றினீர். என்று கேட்க போவதில்லை. கடவுள் மனித ரூபத்தில் தோன்றுவர் என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு தெரியும். ஆனாலும் காலம் உமக்கு புத்தி புகட்டவே நீ பழித்த ஆண்டாளாக, சின்மயி எனும் பெண்ணை […]

வகையாக சிக்கிக் கொண்ட வைரமுத்து!

மீ2 ஹேஸ்டேக்கை பாடகி சின்மயி தொடங்கி வைத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, கரிசல்காட்டு கவிஞன் என்று கூவிக் கொண்டிருந்த கருங்குயிலின் நிலைமை இப்போது, காக்கை கரைவதுபோலாகிவிட்டது. காரணம், கவிஞர் வைரமுத்து, சினிமாத்துறையில் மட்டுமின்றி, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில்லறைத் தனங்களை நிறையவே செய்துள்ளார் என்பது அவரது மனைவி பொன்மணியின் குற்றச்சாட்டால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொன்மணி செய்த நல்ல காரியம்! வைரமுத்துவின் கவிதை வரிகளில் கவரப்பட்டு, பொன்மணி அவரைத் திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்துக்குப் பின்னர் வைரமுத்துவின் கருப்புப் […]

கிருஷ்ண தரிசனம்… பக்திக்கு மதமில்லை…

உலக புகழ்மிக்க ஷெனாய் வித்வான் பிஸ்மில்லா கானின் மாமா அலி பக்ஸ் தான் பிஸ்மில்லா கானின் முதல் குரு. அந்த மாமா, அடிக்கடி தன் வீட்டுக்கருகே இருந்த பாலாஜி (மஹாவிஷ்ணு) கோவில் வேலைக்குப் போவார். அங்கே நாள் முழுதும் ஷெனாய் வாசித்தால், மாசம் நாலு ரூபாய் சம்பளம். கூடவே மருமான் சிறுவன், பிஸ்மில்லாகானும் போவான். மாமா வாசிப்பதைக் கவனிப்பான். பாலாஜி கோவில் அறைகளில் ஒன்று அலிபக்ஸ் ஒய்வு எடுக்கக் கொடுத்திருந்தார்கள். அதில் பிஸ்மில்லாகான் மாமாவோடு சேர்ந்து தங்குவான். […]

தீபாவளியை ஏன் கொண்டாடவே கூடாது… வண்டு முருகன்

தீபாவளிக்கு பட்டாசு விடக்கூடாது. அது சுற்றுப்புற காற்றை மாசு படுத்தும். அதன் சப்தம் நாய், பூனை, எலி, பூரான், தேள், பாம்பு.. டைனோசர் போன்ற விலங்குகளை பயப்பட வைக்கும். டைனோசர் இருந்திருந்தால் பயந்திருக்காதா..? அதனால்தான் லிஸ்டில் அதுவும்.. புது துணி போடவே கூடாது. எத்தனை பேர் துணியில்லாம் இல்லாமல் இந்தியாவில் இருக்கிறார்கள். இனிப்புகள் சாப்பிடுவது செய்வது மாபெறும் தவறு. இனிப்புகள் உடல் நலத்திற்கு தீங்கு செய்வது மட்டுமல்லாமல்.. அவை சர்க்கரை வியாதியை உருவாக்கி விடுகிறது. இதோடு எண்ணெய் […]

இரவல் சட்டங்கள்… வக்கீல்கள்… நீதிபதிகள் தீர்ப்புகள்!

பாரதம் உலகத்துக்கே நீதி சொன்ன தேசமாக இருந்தது ஒரு காலம். ஆனால், சமீப நாட்களில் பாரதத்துக்கே நீதித்துறையால் குடைச்சல் ஏற்பட்டுள்ளது கூர்ந்து கவனித்தால் தெரியும். சமீப நாட்களில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய பல தீர்ப்புகள் பாரதத்தின் தனித்துவத்தை மிகவும் பாதிக்கும் வகையில் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். இறையாண்மை எதிரான… ஓரினச் சேர்க்கை இந்தியாவில் தவறில்லை. திருமணத்துக்கு வெளியில் கணவனும், மனைவியும் தங்கள் இஷ்டம்போல் வாழ்வதும் தப்பில்லை. அதேபோல், இந்து மதத்துக்கு பாரம்பரியம் என்று ஏதும் இல்லை. […]

தீபாவளி மீட்க வேண்டிய மகிழ்ச்சி!

இந்த இதழ் உங்கள் கரங்களில் தவழும் நேரத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும். பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு சட்டென வந்துவிட்டுப் போவது, நம் கடந்த கால மகிழ்ச்சிகளும்தான். என்னதான், இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப கொண்டாட்டங்கள் அப்டேட் ஆகியிருந்தாலும், மகிழ்ச்சிகளும், பண்டிகைக்கான பாரம்பரிய அடையாளங்களும் இன்னமும் அப்டேட் ஆகவில்லை! இன்னும் சொல்லப்போனால், பண்டிகைகள் எல்லாம் தங்கள் வழக்கமான அடையாளங்களை இழந்து கொண்டே செல்கின்றன என்பதுதான் உண்மை. உங்கள் பண்டிகைகால மகிழ்ச்சியை, நட்பு நாடுதலை, மகிழ்ச்சி பரிவர்த்தனைகள் கடந்த […]