Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

Hello

தீவிரவாதம் என்பது ஒரு தனி மனிதனின் சிந்தையில் விளைகிறது. அவனது திறமையால், கிடைக்கும் உதவியால் ஒரு இயக்கமாக மாறுகிறது. அந்த இயக்கத்தை தடை செய்வதால் மட்டும் தீவீரவாதமும், நாச வேலையும் நிற்காது. அந்த தனி மனித சிந்தனையை தடை செய்தால் மட்டுமே மீண்டும் ஒரு இயக்கம் வளராமல் தடுக்க முடியும்.

இதனைத்தான் உள்துறை அமைச்சர் அமீத்ஷா கூறி, தேசிய புலனாய்வு சட்டத்தினை வலிமை படுத்தியுள்ளார்.

ஒரு இயக்கத்தினை அரசு தடைசெய்ய அதே நபர்கள் மீண்டும் அதே சிந்தனையில் இன்னுமொரு புதிய பெயரில் இன்னும் ஒரு அமைப்பில்… எனும் காமெடி இனி நடக்காது.

தீவீரவாதம் என்பது நமது பாரதம் மட்டுமின்றி உலக நாடுகளின் மிகப் பெரிய பிரச்சினை.

உலக மக்கள் தீவீரவாத தாக்குதல்கள், இல்லாமல் தங்களின் உறவுகளோடும் நண்பர்களோடும் வளம் தேடி, சந்தோஷமாக வாழ முடியுமா?

ஏன் முடியவில்லை எனும் கேள்வியோடு நமக்குள் எழவேண்டியது இந்த தீவீரவாதத்தின் முகாந்திரம் எது என்ற கேள்வி தான்!!

ஒரு நாட்டின் வளத்தை கொள்ளையடிக்க நாடு புகுந்த காலம் மலையேறி விட்டது!! ஆனால் இன்றும் பொருளாதார தடைகள் என்ற பெயரில் எளிய நாடுகளை, மிரட்டி வந்தாலும் சமூக கோட்பாடுகள் இன்று பலம் பொருந்திய நாடுகளை கட்டுபடுத்தியுள்ளன…

இப்போது நாம் காணும் இந்த இரத்தவெறி கொண்ட தாக்குதல்கள் மதத்தினை தான் முன் வைத்து நடக்கின்றன.

உலகம் முழுவதும் கிறிஸ்து மயம் என்பதே இலக்கு. கடைசி மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, ஏசு மீண்டும் வருவார் இந்த பூமியில்! என்பதே ஒவ்வொரு கிறிஸ்துவருக்குமான கட்டளை. அவனது ஒரே இறைப்பணி ஏசு எனும் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள். மற்றவை பொய் சாமிகள். எனவே அவர்களை நல்வழிப்படுத்தி மதம் மாற்ற வேண்டும். இதற்கு ஆயிரம் கோணல்வழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான டாலர்கள் வாரி வழங்கப்படுகின்றன.

அல்லாவை தவிர பிற கடவுள் இல்லை. அப்படி இருந்தால் ஒன்று அவன் மதம் மாறவேண்டும். இல்லை சாக வேண்டும். உலகமே இஸ்லாம் மயம்.

இந்த இரு தீவிரவாத மதங்களிடையே சிக்கி இன்று உலகமே ரத்தக் களரியாகிக் கொண்டிருக்கிறது.

இவர்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தம் கூட உள்ளது. முதலில் பிற சாத்வீக மதங்களை முடித்துக் கொள்வோம்.

ஆர்மெகடான் எனும் இறுதி யுத்தத்தில் நீயா, நானா போட்டியை வைத்துக் கொள்வோம் என்று துவஜம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன இந்த இரு மதங்கள்! இந்த இரண்டு ரத்த வெறி கொண்ட மதங்களின் குறிக்கோள்கள் அவர்களது மத போதனைகள் மாறும் வரை தீவீரவாதம் என்பது ஒழித்துக்கட்ட முடியாதது.

கிறிஸ்துவ இயக்கங்களின் தாய்வீடான அமெரிக்காவில் இஸ்லாமியரின் கொட்டம் அடக்கித்தான் வாசிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து தான் பெரும்பான்மை பணம் பிற நாடுகளில் கிறிஸ்துவத்தை பரப்ப அனுப்படுகிறது.

இந்த பணம் மூலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே வெறுப்பும் வன்மமும் விதைக்கப்படும். அரசியல் செல்வாக்கு, அதிகார வட்டம், ஊடக ஆதரவு என பல்கி பெருகி, கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு எனும் போர்வையில் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்து முதலில் தேசத்தினை வெறுக்க கற்றுக் கொடுக்கும். பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் மேடை அமைக்கும்.

அதே போல கிறிஸ்துவம் இஸ்லாமிய நாடுகளில் பம்மி பதுங்கித் தான் இருக்கும்.

ஆனால் பாவம் இந்த ஐரோப்பிய நாடுகள். முன்னர் நாடு பிடித்த இடங்களில் எல்லாம் கிறிஸ்துவ மயமாக்கும் வெறியில் மத சுதந்திரம், மனித உரிமை, மனிதநேயம் என்று கூறி வந்து கடைசியில் தான் விரித்த வலையில் தானே சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றனர். முற்பகல் செய் என்பது மூதோர் மொழி. இன்று ஐரோப்பிய மண்ணில் இஸ்லாமியர் தீவீரவாதம்!!!

மதம் என்பது மக்களை பண்படுத்த, வாழ்வை சீர்படுத்த மட்டுமே!! என்று புரிந்து கொண்டு, இந்த மதங்களின் தாத்பர்யம் மாறும் வரை! நோக்கங்கள் மாறும் வரை! அடுத்தடுத்த சந்ததியினருக்கு போதிக்கபடும் வரை! வரை தீவிரவாதம் எனும் இந்த கொடுங்கோல் பேய் ஒழியாது.

இதனை கட்டுபடுத்த உலக நாடுகள் ‘மதமாற்ற தடை சட்டத்தை’ கொண்டு வர வேண்டியது கட்டாயம். மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தால் மட்டுமே தீவிரவாதம் ஒழியும். பணம் இன்றி ஒர் அணுவும் அசையாது என்பதும் நிஜம்.

இந்த மதமாற்ற அமைப்புகளை அடையாளம் கண்டு, பணவரவை அறவே தடுப்பதே இதனை ஒழிக்க சிறந்த வழி. இந்த பணத்தால் வரும் அனைத்து அரசியல், அதிகார, ஊடக ஆதரவு குறைய தொடங்கும். இந்த தனி மனித தீவிரவாத சிந்தனை உடையவர்களை அப்புறப்படுத்துவது அப்போது தான் பயன் தரும். பாவம் மக்கள்… பூமியில் இருக்கும் சில காலம் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போகட்டுமே…

பிரியமுடன்

பத்மினி ரவிச்சந்திரன்