Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

april

2019ம் மோடி மீண்டும் பிரதமராக வந்தேயாக வேண்டும் என்பதே ஒவ்வொரு தேசபக்தனின் நெஞ்சார்ந்த பிரார்த்தனையாக உள்ளது. ஏன் தெரியுமா வாசகர்களே….

பிரதமர் மோடியின் இந்த 5 ஆண்டு ஆட்சியில் அவர் நமது நாட்டிற்காக செய்துள்ள அற்புதங்களை பற்றி சொல்ல ஒரு புத்தகம் போதாது. ஏழை எளியவர்களின் வாழ்வில் கண்ணியம் வேண்டும். அவர்களது இல்லங்களில் ஒளி தேவை. உடல் நலத்தை கெடுக்கும் கரி அடுப்பு கூடாது. காஸ் சிலிண்டர் தேவை என்று அன்பு மிகுந்த ஒரு தந்தையாக பாடுபட்டவர் நமது பிரதமர்.

கண்டிப்பு மிகுந்த தந்தையாக அரசை ஏமாற்றுபவர்களுக்கு கட்டுபாடுகளை விதித்து, பாரதம் எனும் பெரிய குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னுக்கு கொண்டு வந்தவர் நமது பாரத பிரதமர் மோடி.

இந்தியா என்றால் ஊழல் என்ற உலக பார்வையை 5 வருடத்தில் மாற்றிய அற்புத தலைவர் மோடி…

இன்று உலகின் மூன்றாவது சிறந்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது பாரத பிரதமரை உலக நாடுகள் பலவாறு போற்றி மகிழ்கின்றன.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அவர் செய்த அரும்பெரும் சாதனைகளை பற்றி.

நான் கூற வந்தது அதுவல்ல… 1000 வருடங்களுக்கு பின்னர் ராஜதந்திரம் தெரிந்த ஒரு தேசபக்தன் நமது நாட்டை ஆள்கிறான். அதன் பயன்களை நாம் இப்போது அறிகிறோம்.

 

2004 முதல் 2014 வரை நடந்த பாகிஸ்தானின் தீவீரவாத தாக்குதல்களை பாருங்கள்!

* 5 ஜூலை 2005 – அயோத்தியா இந்து கோயில் தாக்குதல்
* 29 அக்டோபர் 2005 – தில்லி குண்டு வெடிப்பு
* 7 மார்ச் 2006 – வாராணாசி குண்டு வெடிப்பு
* 11 ஜூலை 2006 – மும்பை தொடர் வண்டி குண்டு வெடிப்பு
* 26 ஜூலை 2008 – அகமதாபாத் குண்டு வெடிப்பு
* 13 செப்டெம்பர் 2008 – தில்லி வெடி குண்டு தொடர் வெடிப்பு
* 26 நவம்பர் 2008 – மும்பை தாக்குதல் (166 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்)
* 13 ஜூலை 2011 – மும்பை வெடி குண்டுநமது எல்லை இராணுவ வீரர்களை சிறைபிடித்து அவர்களின் கண்கள், இதயம், ஆணுறுப்புகளை அறுத்து சித்ரவதை செய்து, தலையை வெட்டி அனுப்பி வைத்த போதும் புலம்பிய கோழை நாடாக இந்தியா நின்றது காங்கிரஸ் ஆட்சியில்.


பாகிஸ்தானை கண்டனம் செய்து விட்டு இஸ்லாமிய ஒட்டு வங்கிக்கு பயந்து உலக நாடுகளின் பரிகாசத்திற்கு இந்தியாவை தள்ளியது சோனியாவின் காங்கிரஸ் கட்சி.


வாஜ்பாயின் கார்கில் போரை மறக்க முடியுமா?? அல்லது ஊரி/பதான் கோட் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை மறக்க முடியுமா??


பாலக்கோட் தாக்குதலில் நிலை குலைந்தது பாகிஸ்தான் என்பதே உண்மை. நமது தேசத்தினை காக்க ருத்ர தாண்டவமாக, பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அவர்களது தீவீரவாத பயிற்சி முகாம்களில் இருந்த சுமார் 300 தீவீரவாதிகளின் கதையை முடித்த நமது பாரத பிரதமர் இருக்கும் வரை இந்தியாவினை தொட பாகிஸ்தான் பயப்படும் என்பதே உண்மை.


பாகிஸ்தான் பிற எதிரி நாடுகளை போல இல்லை என்பதை இந்தியர்கள், குறிப்பாக பெரும்பான்மை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


கஸ்வா- இ -ஹிந்த் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கஸ்வா- இ- ஹிந்த் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

முகமது நபி கூறியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய ஹதீஸ் ஒன்று இந்தியாவில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடைய நடக்கவிருக்கும் ஒரு பெரும் போரினைப் பற்றிச் சொல்கிறது. அந்தப் போர் முடிந்த பிறகு இந்தியா முழுமையும் இஸ்லாமியர்கள் வென்றெடுப்பார்கள் எனவும், உலகம் முடிவடைவதற்கு சிறிது காலம் முன்பு இது நடக்கும் எனவும், இந்தியா ஒரு இஸ்லாமிய காலிஃபேட் நாடாக மாறி முகமது நபி காலத்திய ஷரியா சட்டங்கள் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

சிரியாவில் ஆரம்பமாகும் இந்தப் போர் ஜெருசலேம் வழியாக இந்தியாவை வந்தடையும் எனவும், இஸ்லாமிய போராளிகள் இந்தியாவை அழித்துக் கொள்ளையடித்த பின்னர் அந்தச் செல்வத்தைக் கொண்டு ஜெருசலேம் அலங்கரிக்கப்படும் எனவும் விளக்குகிறது.


இந்த ஹதீசை பாகிஸ்தானிய முஸ்லிம் களும், அதன் ஆட்சியாளர்களும், அதன் ராணுவமும் முழுமையாக நம்புகிறது. பாகிஸ்தானின் நோக்கம் காஷ்மிரைப் பிடிப்பது மட்டுமல்ல. அதனையும் தாண்டி மொத்த இந்தியாவையும் பிடிப்பதுதான்


உலகின் ஒவ்வொரு ராணுவத்திற்கும் ஒரு சன்னதப்பாடல் இருக்கிறது.

இந்திய ராணுவத்திற்கும் கூட. ஆனால் இந்திய ராணுவத்தின் சன்னதப்பாடல் நாட்டுப்பற்று மட்டுமே உடையது. எந்த மதத்தையும் சாராதது. ஆனால் பாகிஸ்தானிய சன்னதப்பாடலே கஸ்வா இ- ஹிந்த்தான். காஃபிரி ஹிந்துக்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அவர்களின் மனவி, பிள்ளைகளை அடிமையாக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானிய ராணுவத்தினனது கனவும் கூட.

 

ஏனென்றால் அல்லா அளித்த ஹதீஸ் அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்கிறது. நம்பிக்கையாளர்களை அல்லா கைவிட மாட்டான் என்பது அவர்களது நம்பிக்கை. இந்திய ராணுவத்தை எதிர்த்து இம்மையில் மறைந்தாலும் மறுமையில் அல்லா ஜன்னத்தில் தனக்கான 72 கன்னிகளுடன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே இந்தியாவின் மீதான பயங்கர வாதத்தை அவர்கள் நிறுத்தவே போவதில்லை. அப்படியே நிறுத்தினாலும் அது தற்காலிகம்தான் என இந்தியர்கள் உணர வேண்டும்.

 

பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நம்மை சீண்டும்! இந்திய அரசியல் தலைவர்களை பொறுத்து, சீன அமெரிக்கா என பிற நாடுகள் பாகிஸ்தானை முன்னிறுத்தி இந்தியாவினை நிலை குலைத்திட சதி செய்யலாம்! வலிமையான இந்தியா தான் வளமையான பாரதத்திற்கு ஒரே வழி.

 

அந்த வலிமையான பாரதத்தை தர வல்லவர், தேசமே பெரிது என சாதித்து காட்டிய பிரதமர் மோடி மட்டும் தான்.

நம் தேசம் காக்க தோள்கொடுப்போம். மீண்டும் 2019 தேர்தலில் மோடியினை நமது பிரதமராக்கி நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வாக்களிப்போம். வெல்க பாரதம்

வேண்டும் மோடி! மீண்டும் மோடி!!

பிரியமுடன்

பத்மினி ரவிச்சந்திரன்