Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

editor_cover_image

மகிழ்ச்சியான தருணம் இது

1000 வருட அடிமை சங்கிலிகளை உற்று பார்க்க தொடங்கியுள்ளனர் தமிழக இந்துக்கள்.

தெய்வ புலவர் திருவள்ளுவரின் அடையாளங்களை அழித்து அவரை மதம் மாற்ற முயற்சி செய்த திராவிட கிறிஸ்துவ கைக்கூலிகளின் புரட்டு இன்று சந்தி சிரிக்கிறது.

இப்படித்தான் நமது மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் மூட நம்பிக்கை என இகழ்ந்து பேசி, ஒதுக்கி வைத்தனர்! நாமும் ஏமாந்து விட்டோம்.

ஏன் இந்துக்கள் இவ்வளவு உயர்ந்த பண்புகள் இருந்தும் 1000 வருடங்கள் அடிமைபட்டனர் என ஜக்கி வாசுதேவ் அவர்களை கேட்டாராம் ஒருவர்.

குரு அவர்களின் அந்த ஒற்றை வாசகத்தை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

‘‘நாம் நமது எதிரிகளையும் அவர்களது வழிமுறைகளையும் புரிந்து கொள்வதும் கிடையாது’’ அதனை ஆராயவும் செய்வதில்லை என்றார் குரு ஜக்கி வாசுதேவ்.

சனாதன தர்மம் என்பது பன்னெடுங் காலமாக உள்ளது. மனிதன் நலமாக பண்போடு வாழ வழி வகுப்பது. நமது பிறப்பிற்கு காரணமான அந்த பரம் பொருளை அடையும் வழிகளை தேடி அதில் சரண் அடைவதே மதத்தின் நோக்கமல்லவா?

அந்த பரம்பொருளை அருவமாகவும், இஷ்டப்பட்ட ரூபங்களிலும் உணர முயற்சி செய்வதே வாழ்வின் நோக்கம் என்கிறது சனாதன தர்மம். தமது எல்லைகளை காக்கும் போர்கள் கூட யுத்த தர்மத்திற்கு உட்பட்டது.

கிறிஸ்த்துவமும், இஸ்லாமும் அப்படி அல்ல, புதியதாக தோன்றிய மதங்கள். ஒருவனே கடவுள். அந்தக் கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொடூரமாக கொல்லப்பட வேண்டும் என்ற மத சித்தாந்தங்களைக் கொண்டது.

இன்காஸ், மாயாஸ், அஸ்டெக்ஸ், எகிப்து, பேபிலோன் கிரேக்கம், பெர்ஷியா, ரோம் ஆப்கானிஸ்தான் என பல நாடுகளும், கலாசாரங்களும் காணாமல் போயின. அவர்களின் கலாசாரம், சரித்திரம் அவர்களது ரத்தத்தாலேயே திரித்து எழுதப்பட்டது மேலும் கொடுமை.

இந்தியாவிற்குள் புகுந்த இந்த இரு மதங்களும் ஒரு கோடி அப்பாவி இந்துக்களை மதத்தின் பெயரால் கொடூரமாக கொன்றது. நமது கலாசாரத்தை தாங்கி நிறை பாடசாலைகளையும், பண்டிதர்களையும், கோயில்களையும் உடைத்தும், எரித்தும் சாம்பலாக்கினார்கள்.

ராஜா பிரித்விசிங் அன்று கொடூர அரசனான முகமது கோரியை அவன் நிராயுதபாணி என யுத்த தர்மம் பார்த்து தப்பிக்க விடவில்லை என்றால் 1 கோடி இந்துக்களை நாம் பலி கொடுத்திருப்போமா??

ஆனால் இன்றும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் காலத்தின் கொடுமை!!

கடைசி மனிதன் கிறிஸ்துவனாக மாறும் போது ஏசு வருவார். எனவே இந்தியாவை கிறிஸ்துவ மயமாக்க கோடிகளை வாரி இறைக்கிறது கிறிஸ்த்து மேலை நாடுகள்.

அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும், ஊடகங்களையும் தன் வசப்படுத்தி சதிவலையை பின்னுகிறது.

இஸ்லாத்தை பின்பற்றாதவர்களை கொல்வதே அல்லாவின் அருளை பெறும் உன்னத வழி என்று ரத்த தாகம் தீராமல் ஜிகாத் செய்யும் இஸ்லாமியர் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்க துடிக்கின்றனர்.

இந்துக்கள் நாம் இன்னும் நடப்பது என்ன என்று தெரியாமல், பெரும் அபலை கூட்டம் போல புலம்பி கொண்டிருக்கிறோம்.

ஏன் தெரியுமா அன்பர்களே… நாம் கோழையாக, பயந்து ஒதுங்கி இருந்த வேளையில் மத வியாபாரிகள், நம்மில் சிலரை இனங் கண்டு, எலும்பு துண்டுகளை வீசி நமக்கு தலைவராக மகுடம் சூட்டி விட்டனர்!

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என்று கூறிய திருமாவளவனை கண்டித்து திராவிட கட்சி தலைவர்களும் சரி, அந்த கட்சிகளின் இந்து தொண்டர்களும் சரி… ஒரு வார்த்தை பேசவில்லை. இந்துவுக்கு சார்பாக பேசுவது கூட மத தீவீரவாதம் போலும்!!

சீச்சீ!! இனி ஒரு கணம் நாம் பொறுக்க கூடாது இந்து சொந்தங்களே…கோயில் நிலங்களை தானமாக கொடுக்க இது யார் வீட்டு சொத்து? என்று எடப்பாடி அரசை தட்டிக் கேட்டோம்.

அதிமுக, திமுக வில் உள்ள இந்துக்களின் தன்மானத்தை தட்டி எழுப்புவோம். இது தான் உண்மையான ஆன்மீக தொண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

கண் இல்லாத யானைகளை போல நமது நாட்டில் நம்மை கையேந்தவிட்ட இந்த திராவிட புரட்டர்களின் அரசை தவிடு பொடியாக்கி சனாதன தர்மத்தின் காவலனை அரியணை ஏற்றுவதே நாம் படும் அவமானத்திற்கு ஈடாக முடியும். இனி புதிய பாதை வகுப்போம்.

 
editor_end_image