Saturday, May 30, 2020

சிலையல்ல...

தொழிற்துறையின் புது வடிவம்!

statue

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்தின் மண் வளம், மழை வளம், தட்பவெப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால்தான் தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொழிற்துறை உற்பத்தியில், அதாவது ஜிடிபி வளர்ச்சியில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துக் கொண்டேஇருக்கும். இதுதான் உண்மையும் கூட.
வடகிழக்கு மாநிலங்களின் ஜிடிபி வளர்ச்சியின் ஒட்டு மொத்தத் தொகுப்பு மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் ஜிடியை நெருங்கவே முடியாது. அதேபோல், ஜிடிபி 

வளர்ச்சி சிறப்பாக உள்ள சில மாநிலங்களில் கூட, மாநிலம் முழுமைக்குமான வளர்ச்சி ஒரே சீராக இருக்காது என்பதும் நிதர்சனமான உண்மை. வைரம் பட்டை தீட்டும் தொழிலுக்கும், ஜவுளி உற்பத்திக்கும் பெயர் பெற்ற குஜராத் மாநிலத்தில், இன்னமும் பொருளாதரத்தின் வளர்ச்சி என்பதை கேள்விப்படாத மக்கள் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

முதல்வர் மோடியின் அதிரடி திட்டம்!

என்னதான் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு சென்றாலும் கூட, அதுஅப்பகுதியை மேம்படுத்தி, தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதே உண்மை. இதே கவலைதான் 2007ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்ற நரேந்திரமோடிக்கு ஏற்பட்டது. அந்தப் பகுதியின் மக்களுக்கும் வளர்ச்சியான வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும் என்று மிக நீண்டத் திட்டமிடுதலில் ஈடுபட்டார்.

மேற்கொள்ளும் திட்டம் நர்மதா மாவட்டத்தின், வளர்ச்சிக்கான நீண்ட காலத்திட்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட நரேந்திரமோடி இதற்காக, 2010ம் ஆண்டு இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, நர்மதா அணைக்கட்டுப் பகுதியில் உலகிலேயே மிகப் பெரிய அளவில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். 2010ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் சட்டமன்றத்தில் அவரது இந்த அறிவிப்பை, வழக்கம் போல் எதிர் கட்சியினர் கிண்டலான ஒரு அறிவிப்பாகவே பார்த்தனர்.

சொன்னதுடன், நிற்காமல் குஜராத் மாநிலத்தின் மாநில பட்ஜெட் தொகையில், இதற்கான ஒரு தொகையை மெல்ல மெல்ல ஒதுக்கத் தொடங்கினார். சிலை அமைப்புக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதித் தேவைப்படும் என்ற நிலையில், அதை குஜராத் மாநிலத்தின் பட்ஜெட்டில் இருந்தே தொடங்கினார் என்பதுதான் உண்மை. 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் பட்ஜெட்டில் 6 பில்லியன் ரூபாய் அல்லது 600 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு தன் பங்களிப்பாக 200 கோடி ரூபாய் நிதியை 2014-15ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியது. சிலையின் அமைப்பின் மொத்தத் தொகை 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகும்.

டிரஸ்ட் மூலம் திரண்ட தொகை!

அப்படியானால், இதன் மீதம் உள்ள தொகை எப்படி திறப்பட்டது? சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க வேண்டும் என்ற பேச்சுத் தொடங்கியவுடன், இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக சர்தார் வல்லபாய் படேல் ஏக்தா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து இந்த அமைப்புக்கு நிதி உதவிகள் குவிந்தது. பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள சிஎஸ்ஆர் எனப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதிகளைக் குவிக்கத் தொடங்கின.
அதே நேரத்தில், சுதந்திரத்துக்குப் பின்னர் 562 சமஸ்தானங்களை துணிச்சலுடன் ஒருங்கிணைத்தத் தலைவரின் சிலையை, தனியொரு மாநிலம் உரிமை கொண்டாடக்கூடாது. அந்த சிலையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்தியாவின் ஒவ்வொரு பிடி மண்ணும், உலோகமும் இருக்க வேண்டும் என்று ஏக்தா டிரஸ்ட் முடிவு செய்தது. இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, அவர்கள் வேளாண்மைக்குப் பயன்படுத்திய பழைய இரும்புப் பொருட்கள் திரட்டப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் தன் நிலத்தின் ஒரு பிடி மண்ணை இந்த டிரஸ்ட்டுக்கு அனுப்பினார் என்பதே உண்மை.
அதேநேரத்தில், இந்த சிலை அமையவுள்ள நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள பழங்குடியின மக்கள் தொடக்கத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சாதுபெட் என்ற இடத்தில் அமையவுள்ள இந்த சிலையால், தங்கள் நில உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலங்களுக்கும் குஜராத் அரசு உரிய முறை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனாலும், தொடர்ந்து வேலை வாய்ப்பு, பாதிக்கப்படும் என்று பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

அடிக்கல் நாட்டிய முதல்வர் மோடி!

ஆனால், பல எதிர்ப்புகளை சமாளித்து கடந்த 2013ம் ஆண்டு இதற்கான பணிகளுக்கு, குஜராத் முதல்வராக இருந்த மோடி அடிக்கல் நாட்டினார். எனினும், அடிப்படை பணிகள் 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தொடங்கியது. வழக்கமாக சிலை அமைப்பதில் டெண்டர், ஊழல் என்று பழக்கப்பட்ட இந்தியாவில், படேல் சிலை அமைப்பதற்காக டெண்டர் விடுக்கப்பட்டது. இதில் இந்தியாவின் லார்சன் அண்ட் டூயூப்ரோ நிறுவனம் டெண்டர் எடுத்தது. மொத்த மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகும்.
டூயூப்ரோ நிறுவனம் டெண்டர் எடுத்தது. மொத்த மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகும். படேல் சிலை மாதிரியை உருவாக்கியவர் இந்தியாவின் பத்ம விருது பெற்ற சிற்பி ராம் வி சுதார். விவசாயிகள் கொடுத்த 135 மெட்ரிக் டன் இரும்பு உருக்கப்பட்டு, பெரிய பெரிய பிரேம்களாக மாற்றப்பட்டன. அவை சிலையின் அஸ்திவாரத்தை தாங்கி நிற்கும் தூண்களாக மாறின. படேலின் மாதிரி உருவச் சிலை 3டி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது. மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும், 6.5 ரிக்டர் என்ற அளவில் ஏற்படும் நில நடுக்கத்தையும் தாங்கி நிற்கும் வகையில் சிலை உருவாக்கம் உறுதியாக அமைக்கப்பட்டது.

182 மீட்டர் சிலை எப்படி சாத்தியம்?

சர்தார் வல்லபாய் படேலின் மொத்த உயரம் 182 மீட்டர் அல்லது 597 அடியாகும். சிலையின் பீடித்தின் அடியில் இருந்து, படேலின் உச்சந்தலைவரையிலான உயரம் 240 மீட்டர்கள் அல்லது 790 அடிகளாகும். பீடம் மட்டும் 58 மீட்டர் உயரம் அல்லது 190 அடிகளாகும். பீடத்தில் இருந்து மட்டும் சிலையின் உயரம் 597 அடி உயரம் என்பதே இதன் பிரமாண்டத்தை உணர்த்துவதற்கு போதுமானதாக இருக்கும். இப்போது உலகில் உள்ள சிலைகளில் அதாவது, பிரேசிலின் இயேசு சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகிய 5 சிலைகளை பின்னுக்குத் தள்ளி, சர்தார் வல்லபாய் படேல் சிலை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தான் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டிய சிலையைத்தான் கடந்த 31ம் தேதி பிரதமர் என்ற கம்பீரத்துடன் திறந்து வைத்தார் மோடி.

எந்த செலவுக்கு எவ்வளவு பணம்?

உயிரற்ற சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர் என்பது இணையப் போராளிகளின் கிண்டலாகும். இணையப் போராளிகள் எப்போது
புத்திசாலித்தனமாக யோசித்தனர்? எப்போதும் அரை குறை அறிவுடன், அடுத்தவர்களை குற்றம் சொல்லும் மனோபாவத்துடுடன் வளர்ந்துவிட்டவர்களை நாமும் குற்றம் சொல்லிடக் கூடாது. ஒட்டு மொத்த சிலை மதிப்பில் ஆயிரத்து 300 கோடியே 47 லட்சம் ரூபாய் மட்டுமே சிலைக்கானது. மீதம் உள்ள 200 கோடியே 35 லட்சம் ரூபாய் சிலையின் பீடப் பகுதி அமைப்பதற்கானது. 83 கோடி ரூபாய் சிலைக்கு செல்லும் பாலத்தை வடிவமைப்பதற்கானது. 600 கோடியே 57 லட்சம் ரூபாய் சிலை அமைக்கும் பகுதி மக்களின் நிலத்துக்கான இழப்பீடு மற்றும் சிலையை பராமரிப்பதற்கான தொகை என்பதே உண்மை.

whitemodi

சீனாக்காரனிடம் வாங்கியதா?

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்துவிட்டு, சீனாக்காரனிடம் போய் வல்லபாய் சிலையை வாங்கியதில் இருந்தே, அவரது திட்டம் தோல்வி என்பது இணையப் போராளிகளின் இன்னொரு பிரசாரம். இந்த சிலையை முழுக்க முழுக்க வடிவமைத்தது லார்சன் அண்ட் டூயூப்ரோ நிறுவனம்தான். மொத்தம் 3 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுடன் 250க்கும் அதிகமான இன்ஜினீயர்கள் களம் இறங்கி, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். இந்த சிலையின் உருவாக்கத்தில் மொத்தம் 2 லட்சத்து10 ஆயிரம் கனமீட்டர் சிமென்ட் கலவை பயன்படுத்தப்பட்டது. ஆயிரத்து 500 டன் கட்டுமான உருக்குப் பயன்படுத்தப்பட்டது.
சிலையின் வெளிப்புற தோற்றத்தை தாங்கி நிற் பது ஆயிரத்து 700 டன் வெண்கல தகடு ஆகும். இந்தவெண்கலத் தகடுகளைத் தாங்கி நிற்பது 18 ஆயிரத்து 500 டன் உருக்குத் துவண்கள். இந்த வெண்கல உருக்கு என்ற இடத்தில்தான் சீனாக்காரன் உள்ளே வந்தான். இந்தியாவில் இந்தளவுக்கு பிரமாண்டமான வெண்கல உருக்குத் தகடுகளை உருவாக்கிட போதிய வசதிகள் இல்லை. எனவே, சீனாவைச் சேர்ந்த ஜிங்க்ஜி டோங்குயிங் மெட்டல் ஹேண்டிகிராப்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வெண்கலச் சிலைக்கான தகடுகளை உருக்கி, டிசைன் செய்து,கப்பல் வழியாக குஜராத் துறைமுகங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சாலை வழியாக சிலை கட்டுமானம் நடைபெறும் இடங்களுக்கு இவை வந்து சேர்ந்தன என்பதே உண்மை.

சிலையில் ராணுவ ரகசியம் இருக்கிறதா?

படேல் சிலை பாகிஸ்தானை நோக்கி இருப்பதாகவம், லேசர் தொழில்நுட்பம் வழியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியை இங்கிருந்து கண்காணிக்க முடியும். எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை இந்த சிலையில் உள்ள ரகசிய பணியிடத்தில் இருந்து கண்காணிக்கும் பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவருகிறது. இதுகுறித்து ராணுவ வீரர்கள் தரப்பில் கேட்டபோது, “இது ஒருமைப்பாட்டுக்கான சிலை என்றாகிவிட்டது. இப்படிப்பட்ட சிலை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நிலையில், ராணுவத்தால் யாருக்கும் இடைஞ்சல் ஏற்படு வதை விரும்புவார்களா? அப்படி ஒரு வசதி இருந்தால், அது மிகவும் மூடி மறைக்கப்பட்ட ரகசியமாகவே இருக்கும்” என்கின்றனர்.

நிலமும் பிரச்னையும்

சர்தார் படேல் சிலையைச் சுற்றிலும் சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் அமைப்பதற்கு 930 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை குஜராத் அரசு கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்தை தங்களுக்கு மீண்டும் வழங்கக் கேட்டு பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். கேவாடியா, லிம்டி, நகவரம் மற்றும் கோரா கிராம மக்களின் கிராமங்களை அரசு எடுத்துள்ள நிலையில், அவர்களுக்கான இழப்பீடுத் தொகையை வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், இந்த சிலை மூலம் கிடைக்கும் தொகையை நர்மதா மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளதாக சர்தார் வல்லபாய் படேல் ஏக்தா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

குவியும் சுற்றுலா பயணிகள்

உலகின் உயரமான சிலை எப்படித்தான் இருக்கிறது? நிச்சயம் ஆர்வம் துவண்டும் கேள்விதான். சிலையைப் பற்றி கேள்விப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் தினமும் இங்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். சிலை திறக்கப்பட்டது, கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி. டிசம்பர் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்த சிலையைப் பார்வையிட வந்து செல்கின்றனர். இதனால், அரசுக்கு 7 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதாவது சிலையைப் பார்வையிடவும், அதில் உள்ள மாநாட்டு அரங்கங்கள், உணவகங்கள் சுற்றுலா பூங்கா ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கான கட்டணங்கள் மட்டுமே இவை.
ஓட்டல்கள், போக்குவரத்து ஆகியவை இந்தப் பகுதியில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சிலைக்கு நிலம்வழங்கிய ஏழை மற்றும் பழங்குடியின மக்களின் வாரிசுகளுக்கு இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தினமும் 150 ரூபாய் சம்பாதிக்க கஷ்டப்பட்ட பல ஏழை மக்கள், இப்போது தினமும் 350 முதல் 450 ரூபாய்வரை சம்பளம் பெறுகின்றனர். பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தச் சிலையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தினமும் குறைந்தபட்சம் 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உள்ளதாகவும் இப்பகுதியில் கடை விரித்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றர்.
வளர்ச்சி என்பது தொழில்துறை ரீதியாக மட்டுமே இருக்க வேண்டியது என்ற கட்டமைப்பை உடைத்து, அது சுற்றுலா மற்றும் சேவை ரீதியாகவும் இருக்கலாம் என்று சொல்லியடித்த பிரதமர் மோடிஒரு தீர்க்க தரிசிதான்.