Friday, June 05, 2020

வாழ்க்கை என்பது புனிதமானது...

Articles_5_1

வாழ்கை என்பது புனிதமானது. அது எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்க்கை பயணத்தை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டியது உங்கள் பொறுப்பு.

 

இதுவே என்னை மிகவும் கவர்ந்த வாசகம். என் வாழ்கையில் ஒளியேற்றிய தீபம் என்கிறார். அன்பே வடிவமாக புன்னகைக்கும் லலிதா அம்மா அவர்கள்.

 

யார் இவர்?

பரபரப்பான சூழலில் நம்மையே தொலைத்து வாழும் இந்த காலத்தில், லலிதா ஆச்சாரம் மிக்க குடும்பத்தில் பிறந்து, நெருக்கடிகளை சமாளித்து படித்து முடித்து, நல்ல வேலையில் அமர்ந்திருந்த வேளையிலும், சமூக சேவை எனும் விதை நெஞ்சில் ஆழமாக, புதிய பாதையில் காலடி எடுத்து வைத்த ஒரு குறிஞ்சி மலர்.

திருமணம் கூட சமூக நீதியாக வரையறுக்கப்பட்ட விதிகளை தாண்டி, தான் நடந்தது என்பதும் ஒரு விந்தை.

Articles_5_2
Articles_5_3
Articles_5_4

லலிதாவும் அவரது கணவர் சாமியும்!!

ஆஸ்பத்திரியில் தான் சந்தித்தனர். வாழ்கை துணையாக மாலை மாற்றினார். அதே ஆஸ்பத்திரி தான் போதிமரமாக இவர்கள் வாழ்கை பயணத்தில் புதிய அர்த்தத்தை கொடுத்தது என்கிறார் லலிதா.

 

லலிதா அம்மா... இந்த நியூ லைப் சாரிடபிள் அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் என்ன?

வறுமை கொடியது தான். தனிமையும் மிக கொடியது என்பதை அறிந்து கொண்டேன். இரண்டும் கை கோர்த்து, வயதான காலத்தில் அநாதரவாக, வேண்டாத தொல்லையாக வீசியெறிப்படும் முதியோர்களை மீட்டு கொண்டு வந்து அவர்களுக்கு இடமும், உணவும் ஆதரவும் கொடுக்கும் ஒரு அன்பு இல்லம் தான் நியு லைஃப் சாரிட்டி அறக்கட்டளை. இனி அவர்கள் தங்கள் சிந்தனையை ஆன்மீகத்தில் செலுத்தலாம்! மனம் லேசாகி சாந்தம் வரும்.

 

எங்கள் இல்லத்தில் இன்னும் ஒரு வகை உண்டு. அது தான் அநாதரவாக விடப்படும் அரும் குழந்தை செல்வங்கள்.

அவர்களை மீட்டு கொண்டு வந்து எங்கள் இல்லத்தில் வைத்து, பாதுகாக்கிறோம் கல்வி, கேள்வி, இசை, யோகா என பன்முகத்தன்மையோடு வளர்க்கிறோம். சமூகத்தின் துயரங்களை துடைக்க இவர்களது கரங்களை வலுபடுத்தி வருகிறோம்.

எல்லா தெய்வங்களும் பசுவில் குடி கொண்டிருக்கின்றன என்கிறது வேதம் தாயின் ஒத்த அந்த கோமாதாவை நித்தம் பூஜை செய்பவள் நான். எங்களது கோசாலையில் 75 பசுக்கள் உள்ளன.

 
Articles_5_6

இந்த மூன்று முக்கிய கடமைகளைத் தான் நாங்கள் கடந்த 26 வருடங்களாக செய்து வருகிறோம்.

 

75 பசு மாடுகள், 70 வயதை கடந்த 80 வயதானவர்கள், அநாதரவான பெண்மணிகள், சுமார் 15 குழந்தைகள், எரையூர் கிராமத்து விதவை முதியவர்கள் உதவி மையம்... இதெல்லாம் எப்படி சாத்தியமானது? எப்படி எப்போது தொடங்கியது?

எல்லாம் தெய்வ செயல்தான்! எங்கே நான் எனது அன்பு கணவரை கண்டேனோ அங்கே தான் தொடங்கியது எனது வாழ்கையின் அர்த்தமுள்ள பயணம்.

நானும் எனது கணவரும் சேவை செய்து வரும் ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, இரு வயதானவர்கள், உடல் ஊனமானவர்கள், உதவி கேட்டு வந்தனர். இருக்க இடமில்லை பசி கொடுமை என்றவுடன் அந்த கணமே முடிவு செய்தோம், இவர்களை பராமரிக்க வேண்டுமென்று அப்போது வருடம் 1991. இருவரையும் எரையூரில் இருந்த எங்கள் இடத்தில் குடிசை போட்டு பார்த்துக் கொண்டோம். 2 வெகு விரைவில் 28 ஆனது. உதவிகள் தேடி வந்தது. நியு லைஃப் சாரிடபிள் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.

 
Articles_5_5

எனது கணவர் தனது 5 ஏக்கர் நிலத்தை இந்த அறக்கட்டளைக்கு எழுதிவைத்தார். இந்த 26 வருடங்களில் நியு லைஃப் அறக்கட்டளை கட்டிடங்களாக வளர்ந்து, பல சேவைகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் வேர்கள் யார், என்றால், பல உதவிகளை செய்து வரும் நல்ல உள்ளங்கள்தான்! உணவு, கட்டிடம் கட்ட உதவி, பள்ளி, கட்டணம், மருத்துவ முகாம்கள் என அனைத்து தருணங்களிலும் எங்களுக்கு ஆதரவு தருவது இந்த அன்பு உள்ளங்களின் காணிக்கை தான்.

எங்கள் வாழ்கை எனும் இந்த நதியின் பயணம் தடையில்லாமல், செல்லும் வழிதோறும் மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நலமளித்து, வளமளித்து ஜீவ நதியாக ஒடி, ஒரு நதியானது கடலில் கலந்து விடுவதை போல நானும் எனது தெய்வத்தின் திருவடிகளில் சரண் புக வேண்டும் இதுவே என் வேண்டுகோள்.. பிரார்த்தனை விருப்பம்!!!

 

மருத்துவ மையம் எங்கு உள்ளது?

நாங்கள் 1991ம் ஆண்டு இங்கு வந்த போது எறையூரில் மருத்துவ வசதி கிடையாது. தாம்பரத்திலிருந்து எறையூர் 30 கி.மீ தொலைவில் உள்ளது ரோடு வசதி அப்போது இல்லை. எனவே நாங்கள் அங்குள்ள கிராம மக்களுக்காக ஒரு மருத்துவ சேவை மையத்தை தொடங்கினோம்.

10 வருடங்களுக்கு பிறகு இந்தியன் மெடிகல் சங்கம் இப்போது அதனை நடத்தி வருகிறது. தினமும் 1000 பேர்களுக்கும் மேல் சேவை செய்து வருகிறது இந்த மையம்.

24/7 இலவச ஆம்புலன்ஸ் எறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், பொது மக்களுக்கும் உதவுகிறது.

 

வயதானவர்கள் என்றால் பராமரிப்பு கஷ்டம் தானே...

நிச்சயமாக, பலரால் தனியாக நடக்க முடியாது. சிலர் படுத்த படுக்கை தான். வயது என்பதும் ஒரு சிலருக்கு பூலோகத்தில் நரகமாகவே மாறிவிடுகிறது.

இவர்களுக்கென்று நர்ஸ் போட்டுத்தான் பார்த்துக் கொள்கிறோம்.

இவ்வளவு பெரிய காரியங்கள் செய்தும், அமைதியாக பூஜையை முடித்து விட்டு, இனி நான் கூடிய சீக்கீரம் எறையூருக்கு சென்று என் கணவருக்கு உதவ வேண்டும்.

பராமரிப்பு வேலை அதிகம் தான்… அவருக்கும் வயது 70 ஆகிவிட்டது. இளையவர்கள் வரவேண்டும் என்று கூறிய லலிதா அவர்கள். நான் வணங்கும் எனது குருவும், தெய்வங்களும் தான் இதுவரை வழி நடத்தி வந்துள்ளன.

அதே போல எனது பிரார்த்தனைகளை கேட்டு, இந்த சேவையை தொடர பல நல்ல உள்ளங்களை எனது தெய்வம் அனுப்பும் என்று நம்புகிறேன் என்றார் எளிமையாக.

இந்த அறக்கட்டளையில் ஒரு சிறு தொகை கட்ட வந்த பல அன்பர்கள் தொடர்ந்து அறக்கட்டளையுடன் இணைந்து, செயல்படுவது இவர்களின் உண்மையான சேவையை சொல்கிறது.

சிறந்த ஆடிட்டர்கள், வக்கீல்கள் அனுபவம் கொண்ட நிறுவன அதிகாரிகள் என இவரது அறக்கட்டளையில் நிரம்பியுள்ள ஆலோசகர்களின் வரிசையே இந்த உன்னத சேவையிற்கு சான்று.