Saturday, May 30, 2020

தன் வலையில் தானே வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி!

உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் குடியுரிமை பற்றி விளக்கம் கேட்டு அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது பெரும்பாலோனோர் அறிந்த ஒன்று. அமைச்சகம் ஏன் நோட்டீஸ் அனுப்பியது? அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதுர்யம் ( thought Process/political strategy) என்ன?

முதலில் இது ராகுலின் குடியுரிமை பற்றிய பிரச்சினையே அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையே ராகுலின் வெளிநாட்டுச் சொத்து தொடர்பானதுதான் என்றால் அசந்து போவீர்கள்.

 
Articles_6_1

குடியுரிமை என்பது ஒரு தூண்டில் தான். முதலில் ராகுல், தான் இன்றும் என்றும் ஒரு இந்தியன் தான் என்று அரசுக்கு பதில் அளிப்பாரானால், பிரிட்டனில் உள்ள சொத்தும், வங்கிக் கணக்குகளும் யாருடையது என்ற கேள்வி எழும்.

எனவே, ராகுல் லண்டனில் தன் Business தொடர்புகளை வைத்துக் கொள்ளவே இங்கிலாந்து Citizen Ship எடுக்க வேண்டியது ஆயிற்று என்றும், தான் ஒரு இந்தியன் Citizen தான் என்றும் கூற வேண்டியிருக்கும்.

இதனால் இரண்டு பிரச்சினைகள்/ கேள்விகள் எழும்.

 

முதல் கேள்வி நீங்கள் லண்டனில் எப்படி சொத்து வாங்கினீர்கள்?

  • இந்தியன் ஒருவர் வெளிநாட்டில் சொத்து வாங்க வரண்டுமென்றால் அவர் நம் அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைகள் இரண்டிலும் முன் அனுமதி பெற வேண்டும் என்று நமது சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ராகுல் இதைச் செய்யவில்லை.
  • கடந்த 2005 இல் அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோதே இவர் அதைச் செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? காரணம் ரொம்ப சிம்பிள். கருப்புப் பணத்தில் சொத்தை வாங்கும்போது ஒருவர் எப்படி அதைக் காட்டி அனுமதி பெற முடியும்?
 
Articles_6_2
  • எனவே, அவர் தாமாகவே இங்கிலாந்துக் குடியுரிமை வாங்கியதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொண்டால் இந்தியக் குடியுரிமை தாமாகவே ஆட்டோமாட்டிக்காக கேன்சல் ஆகி விடும்.
  • இப்பொது அடுத்த கேள்விக்கு வருவோம். அவருக்கு லண்டனில் சொத்து இருக்கிற தென்றால் அவர் ஏன் அரசாங்கத்திட மிருந்து
    மறைத்தார்? என்ன காரணம்? லண்டனில் என்ன பிசினஸ் செய்கிறார்? இந்தக் கேள்வி ஏன் முக்கியம் என்றால் அவருடைய ஆபிஸ் லண்டனிருந்து 90 கி மீ தூரத்தில் யாருமே வசிக்காத ஒரு Remote கிராமத்தில் உள்ளது.
 
  • ஒருவேளை தன் பிசினஸ் ஐத் தொடரவே பிராப்பர்டி வாங்கியதாகச் சொன்னால், ஏன் அந்த அலுவலகம் 2004 லிருந்து செயல் படவில்லை? அப்படியானால் வருமான வரி கட்டும் அளவிற்கு எங்கிருந்து அவருக்கு வருமானம்? எவ்வாறு பிரிட்டனில் அவர் Income tax returns தாக்கல் செய்தார்? கருப்புப் பண மோசடியில் ஈடு பட்டாரா?
  • ராகுல் ஒருவேளை, இந்தியராகவே தொடர்வோம், லண்டனில் உள்ள சொத்துக்கள் வேண்டாம், இங்கேயே MP யாக தொடர்வோம் என்று விருப்பப் பட்டால், தன் பிரிட்டிஷ் சிடிஸன் அல்ல என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். அந்த நிலையில், பிரிட்டிஷ் அரசு மூலமாக அங்குள்ள ராகுலின் சொத்துக்களை நம் அரசு கைப்பற்றும் ஏனென்றால் அவை அனைத்திலும் ராகுலின் கையொப்பம் உள்ளது. அது மட்டுமின்றி, அவர் மீது உண்மையை மறைத்ததற்காக கிரிமினல் நடவடிக்கை பாயும்.
  • மாறாக, தான் ஒரு பிரிட்டிஷ் சிடிஸன் என்று ஒப்புக் கொண்டால் அவரது இந்தியக் குடியுரிமை பறிபோவது மட்டுமின்றி, MP பதவி பறிக்கப்பட்டு, இத்தனை நாள் இந்தியப் பாராளுமன்றத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக சிறைக்கும் போக வேண்டியிருக்கும்.

கடைசி பன்ச்: சுப்ரமணியன் சுவாமி எதைச் செய்தாலும் கவனமாக, வேண்டிய அளவு தேவையான விவரங்களைச் சேகரித்துக் கொண்டுதான், தப்ப முடியாத ஆதாரங்களுடன்தான் களத்தில் இறங்குவார். அவர் ஒரு வக்கீல் இல்லையென்றாலும், தொட்ட காரியத்தையெல்லாம் வெற்றிகரமாக முடித்து விட்டே வெளியே வருவார். ஸ்வாமியின் இந்த வழக்கு ராகுலின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு!

ஆம். ராகுல் தான் பின்னிய வலையில் தானே மாட்டிக் கொண்டார். தப்பிக்க வழியில்லை.