Thursday, June 04, 2020

ராமனுக்கு நீதி வழங்குவாரா ரஞ்சன் கோகோய்!

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதுவரை பல வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்புகளை தன் சரித்திரத்தில் பதிவு செய்தது உண்டு. குறிப்பாக இந்து மத விரோத மற்றும் சமூகத்துக்கு ஒவ்வாமையான நடைமுறைகளாக இருந்தாலும், அவற்றையும் தன் தீர்ப்பு மூலம் திட்டவட்டமாக்கிய பெருமை சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு. இந்தவகையில் ஓரினச் சேர்க்கை, சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்வது உட்பட பல சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் தீர்ப்புகளை எழுதிய நீதிபதிகள் உண்டு.

Articles_7_1 (1)

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட்டின்ஒவ்வொரு தலைமை நீதிபதியும் பணி ஓய்வு பெறும்போது, இறுதி தீர்ப்பு எழுதிவிட்டு செல்லும் வழக்கில், அதன் பின்னர் வரும் நீதிபதிகள் சிறப்பானதொரு முடிவுகளை எடுப்பதும் இல்லை. அது தொடர்பான மேல் முறையீடுகளை கண்டு கொள்வதும் இல்லை. இந்த வகையில், நமது இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய், நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், பாப்டே புதிய நீதிபதியாக நியமிக்கப்பட, பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கோகோய் ஓய்வு பெற இருந்தாலும், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்த ராமஜென்ம பூமி வழக்குத்தான் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்காக காத்திருக்கிறது.

 

பாபரும் அவரது வழித்தோன்றல்களும் செய்த தவறு

இந்தியாவில் லோடி வம்சம்த்தின் ஆட்சி (இவர்களும் முஸ்லிம்கள்தான்) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, மொகலாய வம்சத்தின் மன்னரான பாபர் 1528ம் ஆண்டில், இப்ராஹிம் லோடி மீது படையெடுத்தார். முதலாம் பானிபட்போரில், பாபர் வெற்றிபெற்றார். டில்லியை மையமாக கொண்டு தன் ஆட்சியை விரிவாக்கம் செய்த பாபருக்கு, சரயு நதிக்கரையில் அயோத்தியில் இருந்த ராமரின் கோயிலும், அதன் அழகும் கண்ணை உறுத்தியது. தன் படைத்தளபதியைக் கொண்டு, அயோத்தியை கைப்பற்றிய பாபர், அங்கிருந்த ராமர் கோயிலை மேலோட்டமாக இடித்து அகற்றி, அதன் மேலேயே மசூதியை ஏற்படுத்தினார். அதற்கு பாபர் மசூதி என்றும் பெயரிட்டார். பாபரின் வழித்தோன்றல்களாக வந்த ஹூமாயூன், அக்பர், ஔரங்கசீப் உட்பட எந்த ஒரு மன்னரும், இந்த மசூதியின் உண்மையான வரலாறு தெரிந்திருந்தும், மதத்தின் மீது கொண்ட பற்று காரணமாக அதை மறைத்து, புதிய தவறான வரலாற்றை எழுதத் தொடங்கினர். அதேநேரத்தில், அயோத்தியின் மீது மொகலாய படைகளின் ஆக்கிரமிப்பு குறையத் தொடங்கியதும், இந்துக்கள் தங்கள் பாரம்பரியமான கோயிலை த்ங்களிடம் ஒப்படைக்கக்கோரி குரல்கள் எழுப்பினர்.

 
Articles_7_2

கிறிஸ்தவர்களின் ஆட்சியிலும்...

மொகலாய மன்னர்களின் கடைசி வாரிசான பகதூர்ஷாவை அரியணையில் இருந்து தூக்கி வீசிய இங்கிலாந்து கிறிஸ்தவ அரசு, அதை தனதாக்கிக் கொண்டது. கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்த காலத்தில் கூட, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட, கோயில் மீது அமைக்கப்பட்ட மசூதியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி இந்துக்கள் போராடினர். கிபி 1860க்குப் பின்னர் தீவிரமடைந்த இந்தப் பிரச்னையை, சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் அடக்கியே வைத்திருந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1949ம் ஆண்டில் இந்தப் பிரச்னை மீண்டும் வெடித்தது. கிறிஸ்தவர்களின் ஆட்சிக் காலத்திலேயே, இந்த மசூதியில் இருந்த கட்டுமானங்கள் ராமர்கோயிலை அடிப்படையாகக் கொண்டவை என்பது தெரியவந்தது. மேலோட்டமாக ஆய்வுகள் செய்த கிறிஸ்தவ அரசு, இந்த ரகசியத்தை தனக்குள் வைத்துக் கொண்டது. காரணம், இந்துக்களும் – முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், கிறிஸ்தவர்களின் கொள்ளையை கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்.

 

சுதந்திரத்துக்குப் பின்னரும் சர்ச்சைதான

நாடு கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், சர்ச்சைக்குரிய கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை நீடித்தது. பாபர் மசூதி பயன்பாடற்ற கட்டிடம் கூறுவதே சாலப்பொருந்தும். காரணம், அந்தக் காலகட்டத்தில் பல ஆண்டுகளாக அங்கு யாரும் வழிபாடு நடத்தவில்லை. சர்ச்சையால் பூட்டப்பட்ட கட்டிடத்தில், 1949 டிசம்பரில் இரவு நேரத்தில், சில ராம பக்தர்கள் அந்த இடத்தில் ராமர் சிலையை நிறுவி, வழிபட்டனர். ராமர் கோயில் அமைந்துள்ள 60 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைப் பற்றிய சர்ச்சை இங்கு முன் வைக்கப்படவில்லை. குறிப்பாக, ராமர் கோயில் மீது மசூதி கட்டப்பட்ட இடமும், அதன் சுற்றப் பகுதிகளில் உள்ள 2.77 ஏக்கர் நிலமும்தான் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது.

 
Articles_7_3

இந்த 2.77 ஏக்கர் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று இந்து அமைப்புகளும், சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அக்காரா என்ற அமைப்புகள் பஞ்சாயத்து பேசின. இடம் தொடர்பான வழக்குகளை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த தீர்ப்பு வினோதமானது. ‘‘சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை, 3 அமைப்புகளும் சரி சமமாக பிரித்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்ற அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்பதை உணர்ந்து, வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது.

 

கட்டிடம் இடிப்பும் சர்ச்சைகளும்...

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு, பாபர் மசூதி குறித்தப் பிரச்னை நன்கு தெரியும். அதன் வரலாற்று உண்மைகளும் தெரியும். ஆனால், இவற்றை மையப்படுத்தியும், தொல்லியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கியது. காரணம், முஸ்லிம் ஓட்டு வங்கி. பாபர் மசூதி எனப்படும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அங்கு கோயில் கற்தூண்கள் இருந்தற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன என்றும், கோயிலில் காணப்படும் கலைநயம் மிக்க தூண்கள் அந்த மசூதிக்குள் உள்ளதாகவும் தொல்லியல் ஆயவாளர்கள் மத்திய அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்தனர். ஆனாலும், மத்திய அரசு அந்த அறிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. இதனால், 1992ம் ஆண்ட டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்கள் ஒன்றரை லட்சம் பேர் இணைந்து, அந்தக் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் களம் இறங்கினர்.

 

அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது உண்மையா?

தமிழகத்தில் பிரபலமான வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி சொல்வது இங்கே பதிவிடுவது சிறப்பாக இருக்கும்…‘‘பாபர் மசூதியை அகழாய்வு செய்யும் முன்னர், நவீன ரேடார்களைக் கொண்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு பூமிக்கு அடியில் ஏதாவது கட்டிடங்கள் புதைந் துள்ளனவா என்று அறிய உதவும். ஆய்வின்போது, சில தூண்களின் பகுதிகளும், கட்டிடப் பகுதிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. ரேடார்கள் தெரிவித்தத தகவல்களை உறுதிப் படுத்துவதற்காக, கட்டிடனத்தினுள் அகழாய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில், மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள், இங்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகமான மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை புலப்படுத்தியது.

‘கார்பன் 12’ எனப்படும் சோதனையில் இந்தக் காலம் கணிக்கப்பட்டது. இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப் பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 7 அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.

இது ஒரு கோயிலின் வடிவமாகவே காணப்பட்டது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது. இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாபர் மசூதி கட்டிய பின்னர், இங்கு ஜனநடமாட்டம் குறைந்துபோன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது’’ என்று தெளிவாக பதிவிட்டுள்ளார்.

 

சமாதானம் ஏற்படாத சமரசக்குழு

சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணையைத் தொடங்கும் முன்னர், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், 3 பேர் கொண்ட சமாதான பேச்சுவார்த்தைக் குழு உருவாக்கப்பட்டது. இதில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பிரசாத், வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு உட்பட 3 பேர் இருந்தனர். இந்தக் குழுவின் பேச்சு வார்த்தையில், உருப்படியான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி உருவாக்கப் பட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி இந்தக் குழுவின் அறிக்கைத் தாக்கல் செய்த பின்னர்தான், அரசியல் சாசன பெஞ்ச் வழக்க விசாரணையை துரிதப்படுத்த முடிவு செய்தது.

எனவே, நவம்பர் முதல் வாரத்தில் அல்லது 2வது வாரத்தில் அயோத்தி நில சர்ச்சை வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும். 16ம் நூற்றாண்டில் மொகலாய மன்னர்கள் செய்த தவறுக்கு, 21ம் நூற்றாண்டில் இந்தியா வின் மக்களாட்சி முறையில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்? என்ற எதிர்பார்ப்புடன்.

 

மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ராம ஜென்ம பூமி குறித்து அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை எந்த பெஞ்ச் விசாரிப்பது என்று விவாதப் பொருளாகி, இறுதியில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அரசியல் சாசன பெஞ்சில் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் ஒவ்வொரு கோர்ட் நாளிலும் இதுகுறித்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்துமகா சபை சார்பில் விகாங்சிங், ராம் லல்லா கட்சி சார்பில் வக்கீல் பராசரன் ஆகியோர் ஆஜரான நிலையில், முஸ்லிம்கள் சார்பில் வக்கீல் ராஜிவ்தவான் ஆஜராகினார். கோர்ட் விசராணை தொடங்கிய ஆகஸ்ட் 6ம் தேதி முதல், ஒவ்வொரு நாளிலும் நடைபெற்ற வாதங்களில், முஸ்லிம் தரப்பிலான சாட்சிகள், ஆதாரங்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால், வழக்கு விசாரணை துல்லியமான பாதையில் பயணம் செய்தது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்த அக்டோபர் 18ம் தேதி நாளில், முஸ்லிம் தரப்பு வக்கீல் ராஜிவ்தவான், இந்துமகா சபை வக்கீல் தாக்கல் செய்த ஆவணங்களைக் கிழித்தெறிந்து, தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

 

இதுவரை நடந்துள்ள வாதங்கள் சொல்வது என்ன?

ராம ஜென்மபூமி, இந்துக்களின் புண்ணிய இடமாகும். ராமர் கோயில் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதியின் பிரதான பகுதியான டோம் எனப்படும் மத்திய கூடு அமைந்துள்ள பகுதியில்தான், கோயிலின் பிரதான பகுதி இருந்துள்ளது. இந்திய தொல்லியல்துறையின் அகழாய்வுகளில் இதற்கான உறுதியான தடயங்கள், வரைபடங்கள் கிடைத்துள்ளன. மோகன் பராசரன், விகாஸ் சிங் ஆகியோர் இதற்காக தங்கள் தரப்பு வாதங்களை முக்கியமான வரைபடங்கள், ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்சில் வாதங்களை முன்வைத்துள்ளனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் தவானின் வாதங்கள் நொறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை ஒவ்வொரு நாளின் வாதத்திலும் காண முடிந்தது. அதிலும் ராம்லல்லா சார்பில் ஆஜரான வக்கீல் பராசரன், தன் தள்ளாத வயதிலும், நீதிபதிகள் கேட்டுக் கொண்ட போதும், இந்து தர்மம் காக்க துல்லியமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் முன் வைத்து வாதங்களை நடத்தியுள்ளார்.

சமாதானம் ஏற்படாத சமரசக்குழு

சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணையைத் தொடங்கும் முன்னர், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், 3 பேர் கொண்ட சமாதான பேச்சுவார்த்தைக் குழு உருவாக்கப்பட்டது. இதில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பிரசாத், வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு உட்பட 3 பேர் இருந்தனர். இந்தக் குழுவின் பேச்சு வார்த்தையில், உருப்படியான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி உருவாக்கப் பட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி இந்தக் குழுவின் அறிக்கைத் தாக்கல் செய்த பின்னர்தான், அரசியல் சாசன பெஞ்ச் வழக்க விசாரணையை துரிதப்படுத்த முடிவு செய்தது.

எனவே, நவம்பர் முதல் வாரத்தில் அல்லது 2வது வாரத்தில் அயோத்தி நில சர்ச்சை வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும். 16ம் நூற்றாண்டில் மொகலாய மன்னர்கள் செய்த தவறுக்கு, 21ம் நூற்றாண்டில் இந்தியா வின் மக்களாட்சி முறையில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்? என்ற எதிர்பார்ப்புடன்.

 

திடீர் திருப்பம்...

இந்த வழக்கின் போக்கை சரியாக கணித்துக் கொண்ட சன்னி வக்பு வாரியம், திடீரென மாற்று யோசனைகளை முன் வைத்துள்ளது. சில குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் அயோத்தி நிலத்தை இந்துக்களுக்கே விட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு பதில் புதிய இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள அனுமதிக் வேண்டும். மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள 22 மசூதிகளை திருத்தி, புதுப்பித்துக் கொடுக்க அரசு முன் வரவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இடத்தை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளது.

 
Articles_7_4

ராம ஜென்ம பூமி வழக்கில் எந்தத் தீர்ப்பு வந்தாலும், கோர்ட்டின் ஆதரங்கள் வழியாக அவை நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்தத்தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய உலமா கவுன்சில் அமைப்பின் பொதுச் செயலாளர் மவுலானா மெஹபூப் தர்யாதியும், இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மவுலானா சையதும் கூறியுள்ளனர்.

தமிழக போராளிகளுக்கு அல்வா...

பாபர் மசூதி எனப்படும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அங்கு கோயில் கற்தூண்கள் இருந்தற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன என்றும், கோயிலில் காணப்படும் கலைநயம் மிக்க தூண்கள் அந்த மசூதிக்குள் உள்ளதாகவும் தொல்லியல் ஆயவாளர்கள் மத்திய அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்தனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி வந்துவிட்டால், தமிழகத்தில் மும்பைப் தாக்குதலை எதிர்கொண்ட அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். கோயில்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மிகவும் கடுமையான சூழலில் அன்றயை தினம் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ‘‘டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள்’’ என்ற பெயருடன் பெரிய போஸ்டர்கள் அச்சிட்டு, தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டே செயல்படுகின்றனர். அயோத்தியில் அமைதி நிலவினாலும், தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் அமைப்புகள் செய்யும் இந்த அட்டகாசம் ஒவ்வொரு ஆண்டும் எல்லை மீறிச் செல்வது வருத்தமான விஷயம். அயோத்தி இறுதித் தீர்ர்ப்பின் மூலம் இதுபோன்ற அட்டகாசத்துக்கு முடிவு கட்ட முடியும்.

 

நவம்பரில் தீர்ப்பு ஏன்?

விசாரணைகள் முடிந்த பின்னர், வழக்கின் இறுதித் தீர்ப்பு எழுதுவதற்கு குறைந்தது 4 வாரங்கள் ஆகலாம் என்பதால், நீதிபதிகள் குழுவினர் மிகவும் கவனமாக செயல்படுகின்றனர். நாட்டின் 130 கோடி மக்களிடமும் இந்தத் தீர்ப்பு எதிர்வினை ஆற்றும் என்பது நீதித்துறை அறியாத ஒன்றல்ல. நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நாளில், ரஞ்சன் கோகோய் தன் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். 18ம் தேதி புதிய நீதிபதியாக பதவியேற்கும் பாப்டே, பழைய வழக்கில் தீர்ப்பு கூற முடியாது.