Friday, June 05, 2020

இறக்குமதி செய்யும் நாடானது இந்தியா! ஸ்டெர்லைட் போராளிகளின் சாதனை...

இந்தியாவில் வர்த்தக மந்தம், தொழிற்சாலைகள் மூடும் சூழல் உள்ளதாக எதிர்கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) என்ற தனியார் அமைப்பின் ஆய்வுகள், இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஒரு மாயை என்று அடித்துச் சொல்லியுள்ளது. 2018ம் ஆண்டில் 40 கோடியே 24 லட்சம் பேர் வேலையில் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 25 லட்சம் அதிகரித்து, 40 கோடியே 49 லட்சமாக வேலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்கிறது இந்த அமைப்பு

 
Articles_8_1

எதிர்கட்சிகளின் இரட்டை வேடம்!

இது பிரதமர் மோடியின் அரசுக்கு எதிரான எதிர் கட்சிகளின் போராட்டத்தையும், குற்றச்சாட்டுகளையும் முறியடிக்கும் வகையில் உள்ளது. இப்படி இல்லாத ஒன்றை இட்டுகட்டிக் போராடும் எதிர்கட்சிகளும், போராளி அமைப்புகளும் தங்களின் மகத்தான, முட்டாள்தனமான போராட்டத்தால், இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளனர்.

 

ஆமாம், தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த நாட்டின் மிகப் பெரிய தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால், இந்தியா கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது தாமிரத்தை ஜப்பான் உட்பட பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த மத்திய அரசின் தொழிற் கொள்கை வேலை இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர் கட்சிகள், போராளிகள் குற்றம் சாட்டினார்களோ, அதே கட்சிகள் இப்போது தங்கள் போராட்டத்தால், பல்லாயிரம் ஸ்டெர்லைட் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை வீழ்த்தியதுடன், இந்தியாவின் வர்த்தக சந்தையையும் தகர்த்துள்ளனர்.

 
Articles_8_2

தாமிரத்தின் முக்கியத்துவம் என்ன?

இந்தியாவின் உலோகத்துறையில் முக்கிய பங்காற்றும் உலோகங்களில் ஒன்றாக தாமிரம் உள்ளது. உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் தாமிரத்தின் பயன்பாடு உள்ளது. மின்னணு, மின்சாரம், போக்குவரத்து, கட்டுமானம், வேளாண்மை, உரத் தயாரிப்பு உட்பட அனைத்துத்துறைகளிலும் தேவைகள் அதிகம் உள்ள ஒரு உலோகமாக தாமிரம் உள்ளது. எனினும், இந்தியா 18 ஆண்டுகளுக்கு பின் தாமிரம் இறக்குமதி செய்யும் நாடாகிவிட்டதாக கேர் ரேட்டிங்ஸ் என்ற தரமதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், உலக தாமிர இருப்பில் இந்தியாவில் 2சதவீதம் உள்ளது. சுரங்க உற்பத்தியும் 0.2 சதவீதமாக உள்ளது. எனவே, இந்தியாவில் தாமிரத்தாது சுரங்கங்கள் இல்லாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து தாதுப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அவை உருக்கி, தாமிர தகடுகள், கம்பிகளாக மாற்றி சந்தைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவின் தொழிற்துறை உட்பட அனைத்துத்துறைகளின் சீரான வளர்ச்சியால், 2015&19ம் ஆண்டுகளில், நுகர்வு 4.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

 
ret

இந்தியாவில் தாமிர உருக்குத்தொழில்

இந்தியாவில் தாமிர உருக்குத் தொழிலில் இந்துஸ்தான் காப்பர் (மத்திய அரசு நிறுவனம்), ஹிண்டால் கோ லிமிடெட் மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவையே மிகப் பெரிய பங்களிப்பு செய்கின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தாமிர சுரங்கங்கள் உள்ளன. இதில், ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தாமிர சுரங்கங்கள் அனைத்தும் இந்துஸ்தான் காப்பர் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வகையில் வேதாந்தா குழுமம் வெளிநாடுகளில் இருந்து, தாமிர தாதுக்களை இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி, தரம்பிரித்து தாமிரம் மற்றும் பிற உலோகங்களாக சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஹிண்டால்கோ டஹெஜ்ஜில் உள்ள தன் ஆலை மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்தால், 2ம் இடத்தில் உள்ள வேதாந்தா குழுமம், தூத்துக்குடியில் உள்ள தன் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் ஒரு லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறது.

 

கடுமையான வீழ்ச்சி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் காற்று மாசு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் போராட்டத்தைத் தொடங்கினர். 2018ம் ஆண்டில் இது துப்பாக்கி சூடு சம்பவம் வரை நீடித்தது. ஆலைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நடந்தது. தொடர்ந்து ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டு, மின் இணைப்பைத் துண்டித்தது. ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறிய எந்த ஒரு போராட்டக் குழுவினரும், இப்போது வரை அதற்கான மருத்துவ ரீதியான ஆவணங்களைத் தாக்கல் செய்யமுடியவில்லை. அரசின் புற்றுநோய் பாதிப்புள்ள மாவட்டங்கள் பட்டியலில் தூத்துக்குடி முதல் 10 இடங்களில் கூட இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

போராட்டக்காரர்களின் நோக்கம் ஒன்றுதான். அதாவது தொழில்துறையை அச்சமடையச் செய்வது. இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் முதலீட்டாளர்கள் வரக்கூடாது என்பதுதான். அதை

வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். விளைவு? 2014-15ம் ஆண்டில் 7 லட்சத்து 62 ஆயிரம் டன்களாக இருந்த தாமிர உருக்குத் தொழில் உற்பத்தி, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 4 லட்சத்து 57 ஆயிரம் டன்களாக வீழ்ந்தது. அதாவது, 50 சதவீத உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி மிக அதிகம்.

 

இறக்குமதியாகும் தாமிரம்

ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஒரே ஒரு காரணம். போர்டு பவுண்டேஷன். அமெரிக்காவின் மிகப் பிரபலமான போர்டு பவுண்டேஷன் நடத்தும் எம்ஐடி பல்கலையில் பேராசிரியர் பதவி. இந்தியாவின் கட்டமைப்பை நொறுக்க வேண்டும் என்பதற்காகவே, ரொம்பவே மெனக்கெடுகிறது இந்த போர்டு பவுண்டேஷன்.

Articles_8_5

இந்தியாவில் தூய்மையான தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் மலையேறிவிட்டது. உற்பத்தி 50 சதவீதம் வீழ்ந்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளோம். ஜப்பான் நாட்டில் இருந்து அதிகபட்சமாக 71 சதவீதமும், காங்கோவில் இருந்து 6 சதவீதமும், சிங்கப்பூர், சிலி, தான்சானியா, எமிரேட், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்தனைக்கும் இந்நாடுகள், நம்மிடம் இருந்து தாமிரத்தை வாங்கிய நாடுகள். பாருங்கள் ஒரே ஒரு போராட்டத்தால், ஓராண்டில் நாட்டின் நிலைமை எப்படியாகிவிட்டது?

 

பாதிப்புகள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன!

உள்நாட்டில் தாமிர உற்பத்தி குறைந்துவிட்ட நிலையில், இப்போது பெரும் தொழில் நிறுவனங்கள் தாமிரத்தை இறக்குமதி செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டின் கட்டுமானத்துக்குப் பயன்படும் மின்சார வயர்கள், மின் மோட்டார்கள் வடிவமைப்பு, மிக்ஸி, கிரைண்டர், மின் சார அடுப்புகள், கம்ப்யூட்டர் உருவாக்கம், உருக்குத் தொழிற்சாலைகளின் வால்வு அமைப்பது, கட்டுமானம், வேளாண் பொருட்கள் உருவாக்கம் என்று பல்வேறு தரப்பிலும், தாமிரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கிக் கொண்டிருக்கிறது. கசப்பான உண்மையும் கூட.

 

வேளாண் துறையிலும் தப்பவில்லை!

வேளாண் துறையில் முக்கிய இடுபொருளாக சல்பர் மற்றும் பாஸ்பேட் ஆகிய உரங்கள் உள்ளன. தாமிரம் உருக்குதலின்போது கிடைக்கும் பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியவை உரத் தொழிற்சாலைகளுக்கு உப பொருட்களாக விற்பனை செய்யப்பட்டது. இதனால், உள்நாட்டில் கந்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் உரம், பாஸ்பரசை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் உரம் ஆகியவற்றின் விலை குறைவாக இருந்தது. இப்போது இந்த அமிலங்களின் தட்டுப்பாடு காரணமாக, அவை இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால், வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

 

இது எச்சரிக்கை மணி...

தொழில்துறை வளர்ச்சி என்பது ஒரு நாளில் ஏற்படுவதல்லை. பாதிப்புகள் இல்லாத தொழிற்துறை எதுவும் இல்லை. பாதிப்புகள் இருந்தால் அவற்றை முறைப்படுத்தி, பாதுகாப்பான தொழிற் சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. மதவேறுபாடு காரணமாக, மத உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களும், பிற மதத்தவரின் தொழில் உரிமைகளை நசுக்குவதாக நினைத்துக் கொண்டு, தொழில்துறை வளர்ச்சியில் கை வைப்பது ஆபத்தான போக்கு ஆகும். ஸ்டெர்லைட் போராட்டக் குழுவில் உள்ள பல கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகள், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், அவர்களது பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசு கூர்ந்து நோக்கத் தொடங்கியுள்ளது. இதனால், 10க்கும் அதிகமான கிறிஸ்தவ மத போதகர்கள் தங்கள் செயல்பாடுகளை சுருக்கிக் கொண்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடிந்தால், ஆலையை மூடலாம். மாறாக, அறிவியல் ரீதியான முயற்சியில் போராட்டக் குழுவினர் தோற்றால், தவறான தகவல்களைக் கொடுத்து போராட்டத்தைத் தூண்டியவர்கள் மீதம், உயிர் பலிக்குக் காரணமானவர்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.