Saturday, May 30, 2020

பயம் வேண்டாம்...பக்காவாகத்தான்இருக்கு பொருளாதாரம்

indianeconomy

இந்திய பொருளாதாரத்தை மீட்க நான் சொல்றத மத்திய அரசு கேட்கணும்… இப்படித்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி, வாட்ஸ்அப், முகநூல் மற்றும் டுவிட்டர் பதிவிடும் நடமாடும் பொருளாதார மேதைகள் வரை மத்திய அரசை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
காரணம், நடப்பு 2018 & 19ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டதுதான். அத்துடன், மோட்டார் வாகன சந்தைகள் மந்தமானது, வங்கியில், கட்டுமானத் துறை ஸ்தம்பித்தது உட்பட எல்லாவற்றையும் சேர்த்து, ‘ஆஹா… மோடிக்கு நிர்வாகம் தெரியவில்லை. நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சரானது வேஸ்ட்’ என்று ஸ்டாலின், கனிமொழி தொடங்கி எல்லோரும் ஆலோசனை வழங்கத் தொடங்கிவிட்டனர்.

 

என்னதான் பிரச்னை?

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியே பொருளாதார வளர்ச்சி ஒருவித ஏற்றத் தாழ்வுடன்தான் இருந்தது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தல் மட்டுமல்ல, அந்தத் தேர்தலில் யார் வெற்றிபெறக் கூடும் என்ற யூகங்களும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதித்தது என்பதே உண்மை. குறிப்பாக, 2018–19ம் நிதியாண்டின் 4ம் காலாண்டில், மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும், காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளின் பிரச்சாரம், மத்திய அரசின் மீதான நம்பிக்கை இன்மையை அதிகரித்தது.

narendramodi

மே மாதம் புதிதாக ஆட்சிக்கு வந்த பின்னர் மத்திய அரசு, தன் வழக்கமான பணிகளைத் தொடங்கினாலும், இதே காலகட்டத்தில் உச்சத்துக்கு சென்ற சீனா -& அமெரிக்கா வர்த்தகப்போர், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரிக்சிட் நடைமுறை உட்பட பல சிக்கல்களால் ஏற்பட்ட பாதிப்பு, இந்தியாவிலும் எதிரொலித்தது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டிய கதையாகத்தான் மாறிப்போனது. ஆனாலும், இந்திய பொருளாதாரம் கொஞ்சம் பெரிய சந்தை என்பதால், தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

 

 

நமது பொருளாதார வளர்ச்சி? உண்மை என்ன?

இந்தியாவின் நடப்பு 2019&20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு, அதாவது ஜிடிபியின் வளர்ச்சி 5 சதவீதம் மட்டுமே. இது கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இருந்த நிலரவம் என்று கூறப்படுகிறது. உண்மையும் அதுதான். ஆனால், இந்தியாவில் மட்டுமே இந்த வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டுள்ளதா? உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஜிடிபி வளர்ச்சியை ஒப்பிட்டால் உண்மை புரியவரும்.
இன்று இந்தியாவின் ஜிடிபி வீழ்ந்துவிட்டது என்று கூறும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா 24.3 சதவீதம், சீனா 15 சதவீதம், இங்கிலாந்து 3.3 சதவீதம், ஜெர்மன் 4.6 சதவீதம், ஜப்பான் 6.1 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா, 6ம் இடத்தில் உள்ளது. 2.6 சதவீதம் பங்களிப்பு கொடுக்கிறது. நமக்கு பின்னர் பிரான்ஸஅ 7ம் இடத்தில் 2.58 சதவீதம், பிரேசில் 8ம் இடத்தில் 2.05 சதவீதம், இத்தாலி 9ம் இடத்தில் 1.93 சதவீதம் மற்றும் 10ம் இடத்தில் கனடா 1.65 ஜிடிபியுடன் உள்ளன. இங்கே சதவீதம் என்பது டிரில்லியன் டாலர்களாக மதிப்பிட வேண்டும்.

 

இந்த வகையில் வேதாந்தா குழுமம் வெளிநாடுகளில் இருந்து, தாமிர தாதுக்களை இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி, தரம்பிரித்து தாமிரம் மற்றும் பிற உலோகங்களாக சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஹிண்டால்கோ டஹெஜ்ஜில் உள்ள தன் ஆலை மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்தால், 2ம் இடத்தில் உள்ள வேதாந்தா குழுமம், தூத்துக்குடியில் உள்ள தன் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் ஒரு லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறது.

 

எங்கே சரிவு ஏற்பட்டது?

Mexico
manufacturing

இந்த மதிப்பீடுகள் எல்லாம் எல்லா நாடுகளின் வர்த்தகங்களும் சீரான முறையில் நடைபெறும் வரையில் மட்டுமே சாத்தியமாகும். ஏதாவது 2 அல்லது 3 நாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொள்ளத் தொடங்கினால், இதன் சரிவு ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இப்படித்தான், உலகின் முதல் மற்றும் 2வது பொருளாதார வல்லரசுகளாக உள்ள சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட சிக்கல், இன்று உலகம் முழுவதையும் பாதிக்கிறது.

 
 

இதற்கு முதல் காரணம் சுயசார்பு பொருளாதாரம்? அதென்ன சுய சார்பு பொருளாதாரம்?

என்நாடு, என் மக்கள், என் வணிகம், என் சந்தை, என் பொருளாதாரம்…. இதுதாங்க சுயசார்பு பொருளாதாரம். ஆனால், இப்படி சுய சார்பு பொருளாதார ஆசை கொண்ட நாடுகள், தங்கள் உற்பத்திப் பொருளை பிற நாடுகள் வாங்கிடணும் என்று நினைக்கும். அதேநேரத்தில், பிற நாடுகளின் உற்பத்தி பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வந்தால் வரியைப் போட்டுத் தீட்டும். அதாவது, ‘உள்நாட்டில் வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தகத்துக்கு

realestate
BudgetFinanceMinister

முக்கியத்துவமும், இறக்குமதிக்கு தடையும் சொல்லும்’ சித்தாந்தம்தான் சுயசார்பு பொருளாதார கொள்கையாகும். அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டு வர்த்தகப் போரால், உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் இப்போது சுயசார்பு பொருளாதார கொள்கையை கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, முதலில் எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்கின்றன.

 
 

இந்தியாவுக்கு பாதிப்பு எப்படித் தொடங்கியது?

இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தையின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் மத்திய கிழக்கு எனப்படும் வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள். இத்துடன் ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இதுதவிர, அமெரிக்கா, சீனாவுக்கும் கணிசமான அளவு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது பொருளாதார மந்த சூழல் ஏற்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளும் இந்தியாவில் இருந்து வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கின்றன. அதேநேரத்தில், ஏற்றுமதியை நம்பி லட்சக் கணக்கான வாகனங்களை உற்பத்தி செய்த இந்திய கார் மற்றும் பைக் நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.

THINK1

அதேநேரத்தில், உலகம் முழுவதம் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் வாகன விற்பனை மிகக் கடுமையான அளவு சரிந்துள்ளது என்பதே உண்மை. இதில் கார் உற்பத்தி பெயர் பெற்ற ஜெர்மன், மிகப் பெரிய அளவில் செய்கூலி, சேதாரத்தை சந்தித்துள்ளதாக ஜெர்மன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவில் சரிவு கொஞ்சம் புது மாதிரியாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎஸ் 4 டைப் வாகனங்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிஎஸ் 6 வாகனங்கள் விற்பனைக்கு வரக் காத்திருக்கின்றன.
அதேநேரத்தில், 2022ம் ஆண்டு தொடங்கி, 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர்கள் மற்றும் பேட்டரி கார்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வரமத்திய அரசு 2017ம் ஆண்டு முதல் திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வந்துவிட்டாலும், ‘‘எந்த அரசும் சொல்வதை செய்வதில்லை. இவர்கள் மட்டும் விதிவிலக்கா?’’ என்று கார், பைக் தயாரிப்பு நிறுவனங்கள் மெத்தனமாக இருந்தன.
ஆனால், ஜூலை 5ம் தேதி மத்திய பெட்ஜெட்டில், பேட்டரி கார்கள், பைக்குகளுக்கான வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டதும், மோட்டார் வாகன சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது.

 

மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள்

மத்திய அரசின் பேட்டரி வாகனங்களுக்கான சலுகைகள் அறிவித்த நிலையில், புதிதாக கார் வாங்கும் திட்டத்தில் இருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கினர். ‘‘இன்னும் 4 -&5 வருஷத்தில் பேட்டரி கார வரப்போகுது. அதற்குள்ள புதிய கார் வாங்கி, பணத்தை வீணடிக்கணுமா?’’ என்றும், இருக்கும் பைக்குகளை பயன்படுத்தினால் போதும், புதிய பைக்குகளுக்கு பதில் பேட்டரி ஸ்கூட்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கார்கள் முன் பதிவு செய்திருந்த லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களுக்கான பதிவுகளை ரத்து செய்தனர். ஏற்கனவே, ஏற்றுமதி வீழ்ந்ததால் திகைப்பில் இருந்த கார் தயாரிப்பார்கள், இப்போது நொந்துபோனார்கள். அதாவது, மாற்றத்துக்கான ஆயத்தப்பணிகளை
மேற்கொள்ளாத நிலையில், அரசு எடுத்த முடிவால் மோட்டார் வாகன சந்தை திணறிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டுக்கு அரசு தடை விதிக்காது என்றும், 2020 மார்ச் இறுதி வரை வாங்கும் பிஎஸ் 4 டைப் வாகனங்களை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மோட்டார் வாகன சந்தை மீண்டும் மெல்ல மெல் மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

 

எப்படி மந்த நிலையை சரி செய்யலாம்?

RBI

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரிகட்டுவதற்கு, என்ன செய்யலாம்? எந்தெந்த பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைக்கலாம்? யாரிடம் நிதி உதவி பெறலாம் என்றெல்லாம் மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் வரிக்குறைப்பு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியில் அவசர கால பயன்பாட்டு நிதியாக உள்ள 1.76 லட்சம் கோடி ரூபாயை பெற்று, பொருளாதார மந்த நிலையை சரி செய்யலாம் என்று மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகை வங்கிகள் வழியாக பல்வேறு துறைகளுக்கும் கடன் தொகையாக வழங்கப்பட்டு, தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 
 
 

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். அரிசி பருப்பு எண்ணை பெட்ரோல் விலை எல்லாம் நம் கட்டுப்பாட்டில் உள்ளதுபோல், பொருளாதாரமும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த தளர்ச்சி தற்காலிகமானது.

 

 

ரிசர்வ் நிதி என்றால் என்ன? பாதிப்பு ஏற்படுமா?

ஒவ்வொரு நாடும், உள்நாட்டு பரிவர்த்தனைக்கு நிதியை விடுவித்ததுபோக, மத்திய வங்கிக்கு கொடுத்த அடிப்படை மூலதனத்தின் ஒரு பகுதியில் இருந்து லாபமாக பெறும். இந்த லாபத் தொகை மத்திய அரசின் கணக்கில் மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கியில் சேரும். இந்தத் தொகையை மத்திய அரசு எப்போதும் கை வைக்காது. போர் உட்பட பிற அவசர காலத்தில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைக்கும். இப்போது ஏறக்குறைய சர்வதேச அளவில் நடக்கும் பொருளாதாரப் போரில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள கணிசமான நிதி தேவைப்படுகிறது. மோடியின் நிர்வாகத்திறன் அறிந்து, உலக வங்கியும், ஐஎம்எப் அமைப்பும் நிதி கொடுக்கத் தயாராக உள்ளன. ஆனால், வட்டி? தேவையில்லாமல் அவர்களுக்கு வட்டி கொடுப்பதற்கு பதில், ஆர்பிஐ வங்கியிடம் இப்போது இருப்பில் உள்ள அவசர கால பயன்பாட்டு நிதியான 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை கைமாற்றாக வாங்கிடவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியுடன் செலுத்தவும் மத்திய அரசு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், அந்நிய செலவாணி இருப்பு, ரிசர்வ் எல்லாம் பாதிக்கப்படாதா? என்று நீங்கள் கேட்கலாம். பயம் வேண்டாம். அவசர கால நிதியாக 60 ஆயிரம் கோடி ரூபாயும், தங்கம், டாலர்களாக 7 லட்சம் கோடி ரூபாயும் எப்போதும் ஆர்பிஐ வசம் இருப்பதால் கவலையில்லை.

 

 

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். அரிசி பருப்பு எண்ணை பெட்ரோல் விலை எல்லாம் நம் கட்டுப்பாட்டில் உள்ளதுபோல், பொருளாதாரமும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

 

உங்கள் கண்களுக்கு புலப்படாமல், பல லட்சக் கணக்கான வங்கதேசத்தினர் குறிப்பாக அடிப்படை வாத முஸ்லிம்கள், தீவிரவாத சித்தாந்தம் கொண்டவர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்றனர்.

 

இறுதியாக என்னதான் சொல்றது?

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். அரிசி பருப்பு எண்ணை பெட்ரோல் விலை எல்லாம் நம் கட்டுப்பாட்டில் உள்ளதுபோல், பொருளாதாரமும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த தளர்ச்சி தற்காலிகமானது. கடந்த 2008&09ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு மிகப் பெரிய சரிவு உலகம் முழுவதும் ஏற்பட்டது. அப்போதும் இந்தியா மீண்டது. இப்போதும் இந்தியா முழுவீச்சில் பலம் பெற்று எழும். இப்போது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தாலும், வரும் 2020&21ம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்கின்றன சர்வதேச தர நிர்ணய அமைப்புகள். இது வீழ்ச்சியில் எழுந்தோடும், வேகத்தின் அடையாளம். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். நம் பொருளாதாரம் இப்போதும் பலமாக இருக்கிறது. வளர்ச்சியில், சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளை விடவும் அதிகம்தான்!