Saturday, May 30, 2020

ஹலோ ஒரு நிமிடம்...

Sudesi October 2019

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாகி விட்டது தமிழகத்தில் இந்துக்களின் நிலை.
வடிவேலுவின் காமெடி போல, நமது கோயில்களின் பெரிய பெரிய குளங்கள் காணவில்லை. எல்லாம் அரசு அலுவலகங்களாகவும், தனியார் வசமிடமும், வேற்று மதத்தினரிடமும் அடிமைபட்டு கிடக்கின்றன என்பதை பல வழக்குகளின் வாதங்களும். பதிவேடுகளும் உறுதிபடுத்தியுள்ளன…

இந்து கோயில் சொத்துக்களை கண் போல பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, கோயில் நிலங்களை அக்கிரமமாக ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா போட்டு தருவதா என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கடும் கன்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு 30.08.2019 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் 318ன் படி கோயில் நிலங்களை ஆக்ர மிப்பாளர்களுக்கு கொடுக்க வகை செய்துள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து, சேலம் ராதா கிருஷ்ணன் வழக்கு தொடுத்துள்ளார். ஆலய வழிபாட்டு அமைப்பின் ரீதியாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் தமிழக அரசு, ஏழைகளுக்கு வீடு தேவை என்பதால் தான் நிலங்களை கொடுப்பதாகவும் அதர்மமாக சாக்கு சொல்லியுள்ளது.
தனது நிலையை விளக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளது வெட்க கேடு!!!
இந்து கோயில் அறநிலைய துறை எனும் ஒர் அறமற்ற துறையின் மூலமாக, ‘‘நமது முன்னோர்கள் தங்களது சொத்துக்களை திருக் கோயில்களின் ஆறுகால பூஜைக்காகவும், 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்காகவும், நமது பாரத பண்பாட்டு கலைகளும், ஆன்மீமும் தழைக்க கோயில்களில் நிகழ்ச்சிகளும், ஆன்மீக பயிற்சிகள் நடப்பதற்கும், திருவிழா மற்றும் பல்வேறு ஆன்மீக சிறப்பு பூஜை நியமனங்களுக்கும்’’ நேர்ந்து விட்டனர்.
இந்து சொத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு இந்துவுக்கும் உரியது.
நமது இந்திய சட்டத்தின்படி இந்து கோயில் சொத்துகள் கோயில் மூலவருக்கே சொந்தமானது இந்து கோயில் சொத்துக்களை யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாது. மிகவும் அரிதான சமயத்தில் மட்டுமே அரசு ஒரு பிரதான சாலை, அல்லது மேம்பாலம் கட்டும் போது, கோயில் நிலம் நடுவே இருப்பதால் அதற்கு விலக்கு கேட்கலாம். அதற்கு பதிலாக வேறு ஒரு அரசு புறம் போக்கு நிலங்களை தரவேண்டும் என்பது தான் சட்டம்.
தமிழகம் ஆன்மீக பூமி என்பது தான் சிதம்பர ரகசியம். இந்தியாவின் 183 சிவன் கோவில்களில் 176 கோயில்கள் தமிழ் நாட்டின் தான் உள்ளது. 108 வைணவ தலங்கள், நவக்கிரக கோயில்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலடி பட்ட புண்ணிய பூமி இது.
நமது முன்னோர்கள் இந்த சிறப்பினை காக்க, உலகமே அதிசயிக்கும் வண்ணம் பிரம்மாண்ட கோயில்களை கட்டி அதனை பராமரிக்க தேவையான நிலங்களையும், நகைகளையும், நவரத்தினங்களால் ஆன கடவுள் திரு மேனிகளையும் விட்டுச் சென்றனர். உண்டியல் பணம் என்பது இன்னொரு கதை.
அந்நிய கொடுங்கோலர்களான டச்சுகாரர்கள், போர்த்துகீசியர்கள், இஸ்லாமியர், கிறிஸ்த்துவ பிரிட்டிஷார் என சுமார் 1000 ஆண்டுகள் நமது பாரதம் அடிமைபட்டு இருந்தோம். பிணந்தின்னும் கழுகுகளாக இந்த வந்தேறிகள் லட்சக்கணக்கான நமது இந்துக்களை கொன்றனர். விலங்குகள் போல நம் பெண்களை கற்பழித்து கொன்றனர். சிறைபிடித்து சென்றனர். அப்போது உயிருக்கு அஞ்சி மதம் மாறியவர்கள் தான் இன்று நமது நாட்டில் இருக்கும் பெரும்பான்மை இஸ்லாமியரும் கிறிஸ்துவரும்! இங்கிருந்து பிரிட்டிஷ் 100 வருடங்களில் கொண்டு சென்ற சொத்துக்களின் மதிப்பு இன்று 400 டிரில்லியன் டாலர்களாம்!!
எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால் நம்மை கொன்று, கொடூர ஆட்சி புரிந்த இஸ்லாமியரின் திருடப்பட்ட இந்து சொத்துக்கள், வஃகப் வாரியம் எனப்படும் அமைப்பு பாதுகாக்குமாம்!!
அதேபோல பிரிட்டிஷ் அரசு 1947ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த கையோடு, இந்தியா வின் அனைத்து நகரங்களிலும் சர்ச்களுக்கு பிரதான சாலைகளில் இந்து நிலங்களை அள்ளி கொடுத்தது.
அன்றைய இந்து விரோத காங்கிரஸ் அதனை கண்டுக் கொள்ளாமல் விட்டது தான் பெரிய துரோகம். இந்த சொத்துக்களையும் பாதுகாத்து பராமரிக்க கிறிஸ்துவ அமைப்பு உள்ளது.
தமிழ் நாட்டில் அதனைவிட ஒரு பெரிய விஷவிருட்சம் ஒன்றை கால்டுவெல் பெரியார் எனும் தன் சீடன் மூலம் விதைத்தார்.
பெரியாரின் திராவிட கழகம் எனும் புரட்டு கழகம் நேரிடையாக இந்து மதத்தை தாக்கினால் தோல்வி அடைவோம் என்று கண்டுக் கொண்டு, இந்து மதத்தின் வேர்களான வேதங்களையும், கோயில்களையும் காத்து நின்ற பிராம்மணர்கள் இருக்கும் வரை இந்து மத நம்பிக்கைகளை சாய்க்க முடியாது என்று உணர்ந்து, பிராமண வெறுப்பை தோற்றுவித்து போராடினார். ஒரளவு வெற்றி பெற்றார் ஏனெனில் அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 53 வருடங்களாக திராவிட ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
1967ம் ஆண்டில் அண்ணாதுரை முதல்வராக பதவியேற்றவுடன் வாத்தீகன் சென்று போப் இடம் ஆசீர்வாதம் பெற்றார். கோவிலில் தேவாரம், திருவாசகம் படிப்பவர்களாகிய ஒதுவார்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, மணியக்காரர்களாக இருந்த கணக்குபிள்ளை, பிராமணர், கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நீக்கப்பட்டனர். ஏன் என்றால் இவர்களுக்கு கோயில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் அதில் உள்ள மரங்கள், விளைச்சல் வருவாய் குறித்த எல்லாம் அத்துப்படியாக இருக்கும்.
இவற்றை தங்களது வாரிசுதாரர்களுக்கும் தெரிய வைத்து செல்வது வாடிக்கை. தினமும் இந்த நிலங்களை பார்வையிட்டு வருவதால் யாரும் நிலத்தை அபகரிக்க முடியாது.
இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே கோயில் நிலங்களை பட்டா போட முடியும்!!!
எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம். கோவில் பொது சொத்து! பிராமணர்கள் கட்டுபடுத்துவது தவறு என்று குழப்பம் ஏற்பத்தி பாரம்பரிய பண்டாரங்களையும், சிவாச்சாரியார்களையும், தலையாரிகளையும் விரட்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தினர். இந்து கோயில் சொத்துக்களை அநாதை ஆக்கினார்.
இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க என்று சொல்லி இந்து அறநிலைய துறையை உருவாக்கி, வேற்று மத நம்பிக்கை உள்ளவர்களையும், நாத்திகர்களையும் வேலைக்கு அமர்த்தி இந்து மதத்தை சீரழித்து கோயில் நிலங்களை கொள்ளையடித்து பங்கு போட்டுள்ளது திராவிட கட்சிகள்.
நிலங்கள் என்று பார்த்தால் 51/2 லட்சம் ஏக்கர் என்று இருந்த நிலையில் தற்போது 4.85 ஏக்கர் கோயில் நிலங்கள் உள்ளது என்கிறது கோயில் பதிவேடுகள். எங்கே நிலங்கள்??
மீதம் என்ன இருக்கிறது என்பதற்கு விடை இன்றுவரை இல்லை!! நிலங்கள் தவிர விலை மதிக்க முடியாத கடவுள் திருமேனிகள், நவரத்தினங்கள், தங்க வைர நகைகள், உண்டியல் பணம் என அனைத்து சொத்துகளும் களவாட பட்டுக் கொண்டே இருக்கின்றது.
எங்கே நம்மை காக்கும் இந்து தலைவர்கள்?? ஏன் இந்த உரத்த மௌனம்? தமிழக அரசின் இந்த வஞ்சக செயல், விஷம் தோய்ந்த வில்லாக இந்துக்களின் இதயத்தை துளைத்துள்ளது.
எடப்பாடி அரசுக்கு எத்தனை துணிவு இருந்தால் கோயில் சொத்துக்களை ஆக்ரமிப்பாளர்களுக்கு தானம் கொடுப்பேன் என்று சொல்லி இருப்பார். வேற்றுமத அதிகாரியின் செயல் இது என்று சப்பை கட்டு கட்டும் இந்து அபிமானிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
900 வருடங்கள் இந்த கொடூர அந்நிய மதத்தினரிட மிருந்து பாரதத்தை தமது வீரத்தாலும், தியாகத்தாலும் காப்பாற்றி தந்த நமது முன்னோர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ளாமல் நம்மை கொன்று குவித்த பாவிகளை பற்றி படித்த காரணத்தினால் தான் இன்று வீரம் குன்றி, பெருமை அற்று எச்சில் எலும்பை கண்ட நாய்களைப் போல கயவர்கள் பின் அலைகிறோம்.


இந்துக்களே... விழித்துக் கொள்வோம்... தமிழக அரசே அரசாணையை திரும்ப பெற்றுக்கொள் என்று கொதித்தெழுவோம்...

பிரியமுடன்

பத்மினி ரவிச்சந்திரன்